நீங்கள் பிறந்த தமிழ் ஆண்டு தெரியுமா? யோகம் காத்திருக்கிறது.

9 கருத்துகள்இயற்கையை காக்க மரங்களை நடவேண்டும் என்பதை நம் முன்னோர்கள் ஜாதகங்கள் வாயிலாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.இந்த ராசிக்கு,இந்த நட்சத்திரத்துக்கு குறிப்பிட்ட மரத்தை நட வேண்டும் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஜாதகமே இல்லாதவர்கள் எந்த மரத்தை நடுவது? இதற்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் பிறந்த தமிழ் ஆண்டு தெரிந்தால் போதும். அந்த ஆண்டுக்கென்று வகுக்கப்பட்டுள்ள மரத்தை நடலாம் என்கிறார்கள். இப்படி அவரவர் பிறந்த தமிழ் ஆண்டுக்குரிய மரத்தை நட்டால் யோகங்கள் கிடைக்குமாம்.

ஆனால், இப்படி மரம் நடும் முன் சில சடங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, நெல், கோதுமை,பச்சைப்பயறு,துவரை,உளுந்து,மொச்சை,கடலை,எள் ஆகிய 9 தானியங்களை தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு அதை பித்தளை பாத்திரத்திலோ அல்லது மரப்பாத்திரத்திலோ மண்பானையிலலோ ஊற வைத்து அந்த தண்ணீரை நாம் நட்ட மரக்கன்றுக்கு நட்ட அன்றோ அல்லது அடுத்த நாளோ ஊற்ற வேண்டியது முக்கியம். மரத்தை நட்ட பிறகு நாம் ஏற்கனவே தண்ணீரில் இட்டு ஊறவைத்திருந்த நவதானியங்களை எடுத்து பறவைகளுக்கு போட வேண்டும்.

இதற்கு பிறகு வழக்கமாக சாதாரணமாக அந்த மரக்கன்றுக்கு நீர்பாய்ச்சி வரலாம். திருமணமான தம்பதிகள் திருமணம் ஆனவுடனேயே தங்களது ராசிக்கோ அல்லது இப்போது நாம் சொல்லப்போகும் தமிழ் ஆண்டுப்படி அதற்குரிய மரங்களை நட்டால் வாழ்க்கயைில் துன்பங்கள் விலகி நல்ல வாழ்வு பெறலாம் என்கிறது சாத்திரங்கள்.

இனி தமிழ் ஆண்டு படி பிறந்தவர்கள் நடவேண்டிய மரங்களை பார்க்கலாம்.

பிரபவ- கருங்காலி மரம்
விபவ-அக்ரூட்மரம்
சுக்ல-அசோக மரம்
பிரஜோர்பத்தி-பேயத்தி மரம்
ஆங்கீரஸ்- அரசுமரம்
திருமுக-அரைநெல்லி
பவ-அலயாத்தி
யுவ-அழிஞ்சில் மரம்
தாது- ஆச்சாமரம்
ஈஸ்வர-ஆலமரம்
வெகுதான்ய-இலந்தை மரம்
பிரமாதி-தாளைபனைமரம்
விக்ரம-இலுப்பை மரம்
விஷு-ருத்திராட்சம்
சித்ரபானு- எட்டி மரம்
யுவபானு- ஒதியம்
தாரண- கடுக்காய் மரம்
பார்த்திவ- கருங்காலி மரம்
வியய- கருவேலமரம்
சர்வஜித்- பரம்பை மரம்
சர்வதாரி- குல்மோகூர்மரம்
விரோதி- கூந்தல் பனை
விக்ருதி- சரக்கொன்றை
கர- வாகை மரம்
நந்தன- செண்பகம்
விஜய-சந்தனம்
ஜய- சிறுநாகப்பூ
மன்மத- தூங்குமூஞசி மரம்
துன்முகி- நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி- நந்தியாவட்டை
விகாரி- நாவல்
சார்வரி- நுணாமரம்
பிலவ- நெல்லி மரம்
சுபகிருது- பலா மரம்
சோபாகிருது- பவழமல்லி மரம்
குரோதி- புங்கம் மரம்
விசுவாவக- புத்திரசீவிமரம்
பராபவ- புரசுமரம்
பிலவங்க- புளிய மரம்
கீலக- புன்னை மரம்
சவுமிய- பூவரசு மரம்
சாதாரண-மகிழமரம்
விரோதிகிருத- மஞ்ச கடம்பை
பரீதாபி- மராமரம்
பிரமாதீச- மருதமரம்
ஆனந்த-மலைவேம்பு
ராட்சஸ- மாமரம்
நள-முசுக்கொட்டை மரம்
பிங்கள- முந்திரி
காளயுக்தி-கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி -தேவதாரு
ரவுத்ரி- பனை மரம்
துன்மதி-ராமன்சீதா
துந்துபி-மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி-சிம்சுபா
குரோதன-சிவப்புமந்தாரை
அட்சய-வெண்தேக்கு.

தமிழ்நாட்டு தமிழர்கள் செழிப்பாக வாழ தமிழகத்தில் வந்து ஈழத்தமிழர்கள் தரும் தொழில் பயிற்சி

0 கருத்துகள்அடிபட்டு,ரத்தம் சிந்தி சொந்த மண்ணை விட்டு தமிழகத்துக்கு வந்த ஈழத்தமிழர்கள் சில மறுவாழ்வு தொழிற்பயிற்சிகளை கற்று வந்து அதை தமிழக மக்கள் வாழ சொல்லித்தருகிறார்கள். இது நடப்பது சென்னையில்(ஈழ அகதிமக்கள் மறுவாழ்வு கழகம் ,முகவரி கீழே கொடுத்துள்ளேன்). ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் இருந்தும் வந்து பயிற்சி பெறலாம் என்கிறார்கள்.

இந்தியாவில் விளைநிலங்கள் குறைந்து கொண்டே போகின்றன. தேவைப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிறது அரசாங்கம். என்ன வளம் இல்லை என்ன என்று பாடிய திருநாட்டுக்கு இந்த கதி. சரி இப்படியே போனால் கதி என்ன? இப்போதும் உலகின் பல நாடுகளில் சரியான உணவு கிடைக்காமல் ஏராளமான மக்கள் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் யாருக்குமே உணவு இருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி ஒன்று நடந்தால் மனிதருக்கான உணவுக்கு மாற்று வழி என்ன?

இந்த உலகத்தில் மனிதன் வாழ இயற்கை எத்தனையோ அதிசயங்கள் நிறைந்த மூலிகைகளை படைத்திருக்கிறது. ஒவ்வொரு உணவிலும் பஞ்சபூதங்கள் நிறைந்து கிடக்கின்றன.வயிற்றுக்குள் கொட்டப்படும் உணவு எந்தவகையானதோ அதே போலத்தான் ஒரு மனிதனின் உடல்நலமும், அவனது நடத்தைகளும் இருக்கும் என்கின்றது மருத்துவ துறை. சந்திரனை ஆராய போன விண்வெளி வீரர்களுக்கு உண்ணுவதற்கு எதை கொடுத்து விடலாம் என்று சிந்தித்தது அமெரிக்கா. கடைசியில் அதன் கண்ணுக்கு பட்டது ஒரு தாவரம்.அது தான் ஸ்பைரூலினா. இது ஒரு வகை பாசி இனத்தை சேர்ந்தது.ஒரு மாத்திரை அளவு ஸ்பைரூலினவை உணவாக உட்கொண்டு விட்டால் போதும். உடலுக்கு வேண்டிய அத்தனை சத்துக்களையும் பெற்றுவிடலாம் என்பது தான் இதன் தனிச்சிறப்பு.

இந்த ஸ்பைரூலினாவை வடமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சில நிறுவனங்கள் யாருக்கும் இந்த தொழில் நுட்பம் தெரிந்து விடக்கூடாது என்று மிகரகசியமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து சென்னையில் தங்கிவிட்ட ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் தமிழ்மக்களுக்கு எல்லாம் இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.செனனை புறநகர் பகுதியில் மிகப்பெரிய ஸபைரூலினா பாசி உற்பத்தி மையம் ஒன்றை தொடங்கி இவர்கள் இந்த பாசி வளர்ப்பு பயிற்சியை கொடுத்து வருகிறார்கள்.

இந்த ஸ்பைரூலினா பாசியில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்?
புரதம்-இதில் 55 முதல் 65 சதவீதம் புரதச்சத்துள்ளது. புரதம் உடல்வளர்ச்சிக்கு முக்கியமானது. ஏனைய உணவுப்பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைரூலினாவில் உள்ள புரதம் எளிதில் சீரணிக்கும் தன்மை கொண்டது.

தாதுக்கள்-நமது உடல் சீராக இயங்க அவசியமான தாதுஉப்புகள் உள்ளன. இந்த தாதுஉப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும்.
மக்னீசியம்- ஸ்பைரூலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்கு தேவையான தாதுஉப்புக்களாகிய மக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம் இருப்பதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பு ஏற்பட செய்யும்.
வைட்டமின் ஏ-கண்பார்வை சீராக இருக்க உதவும் வைட்டமின் ஏ மற்ற உணவு பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைரூலினாவில் அதிகம்.
பீட்டா கரோட்டின்-கேரட்டில் இருந்து கிடைப்பதைவிட ஸ்பைரூலினாவில் 10 மடங்கு அதிக பீட்டா கரோட்டின் உள்ளது.
வைட்டமின் பி6-பி12- இது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையங்களை சீராக செயல்பட செய்து தேவையான இன்சுலினை சுரக்க செய்கிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இரும்புச்சத்து- மற்ற உணவுகளை விட ஸ்பைரூலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து உள்ளது.
கார்போஹைட்ரேட்- இது ஸ்பைரூலினாவலிருந்து நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது.
காமா லினோலிக் அமிலம்-ஸ்பைரூலினாவில் இருக்கும் இந்த அமிலம் உடலின் கொழுப்புச்சத்தை உயரவிடாமல் தடுக்கிறது. இது தாய்ப்பாலுக்கு நிகரானது. இந்த சத்து நமது ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புச் சத்துக்களை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு தடுக்கப்படுகிறது.

தவிர இந்த பாசியில் சூப்பர் டிஸ்மியூட்டேஸ் என்ற பொருள் உடலில் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவாக சிறப்பாக உதவுகின்றன.
ஹார்வர்டு மருத்துவமனை நடத்திய ஆய்வில் இதன் பல்வேறு மருத்துவ குணங்கள் தெரியவந்துள்ளன. இதில் இருக்கும் சல்போலிப்பிட்டஸ் உடலுக்கு அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோயை தீர்க்க எதிர்ப்புசக்தியை அளிக்கிறது.

ஸபைரூலினாவை தினமும் இரண்டு கிராம் முதல் நான்கு கிராம் வரை உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.

மனிதனின் பேராசையால் இந்த உலகத்தின் மரங்களும்,நிலங்களும், ஆறுகளும்,காடுகளும் அழிக்கப்பட்டு அவனால் பெருக்கப்பட்ட மனித சந்ததிக்கான உணவின் தேவையை இயற்கையால் ஈடுகட்ட முடியாமல் போகும் போது இந்த ஸ்பைரூலினா தான் தரப்போகிறது. உணவை மாத்திரை வடிவில் தின்று தான் மனிதன் வாழப்போகிறான் என்பதே விதியாக இருக்கும். இன்றைக்கு இருக்கும் வேகத்தில் மனிதர்கள் பேராசையால் இயற்கைக்கு எதிராக எவ்வளவு வேகமாக போகிறார்களோ.....அவ்வளவு விரைவில் உணவும் இல்லாமல் போகும். அலுவலகத்திற்கு போகும் போது சாப்பாட்டு கேரியருக்கு பதில் ஸ்பைரூலினா மாத்திரைகளை பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டு போவார்கள்,

அதாவது சந்திர மண்டலத்துக்கு விண்வெளி வீரர்கள் போனதை போல!ஸபைரூலினாவை உங்கள் ஊரிலும் தயாரிக்க பயிற்சி பெற வேண்டுமா.ஒரளவு தண்ணீர் வசதியும் சிறிது இடமும் இருந்தால் போதும்.கீழ்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்

திட்டஒருங்கிணைப்பாளர்.ஈழ மக்கள் மறுவாழ்வு கழகம்,31,2 வது மாடி, சேட்காலணி முதல் தெரு,எழும்பூர் ,சென்னை-08
போன்- 98840 00413

உங்கள் நிலத்தில் சந்தன மரம் வளர்க்கலாம் .சட்டம் அனுமதிக்கிறது.

4 கருத்துகள்


தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.

இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று தான் சட்டம் இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்றால் கோடீசுவராக மாறி விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போதும் கூட காடுகளில் இருக்கும் சந்தன மரங்கள் தேக்கு கருங்காலி மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது தனிக்கதை. இது இருக்கட்டும். இப்போது சந்தன மரங்களை நாமே வீட்டில் இருக்கும் காலி இடத்தில் வளர்க்க முடியும். தற்போது சட்டம் இதை அனுமதிக்கிறது. இது பற்றிய ஒரு பார்வை...

மலைப்பகுதிகள் பார்க்க ரம்மியமானவை. காரணம் மனிதனின் காலடிகள் அடர்ந்த காடுகளுக்குள் அவ்வளவாக படுவதில்லை.அதனால் அவை அவற்றின் கற்பை இழக்காமல் கன்னி காத்து வருகின்றன. மனிதனின் கண்ணுக்கு தெரியவராமல் பல வித மரங்கள் பெருங்காடுகளில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. அவற்றில் தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்றவை முக்கிய மரங்களாகும். இந்த மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.

ஆனால் நகரத்தில் உள்ள சில பேராசை பிடித்த மனிதர்களால் இப்படிப்பட்ட காடுகளிலிருந்து அதிகம் வெட்டி கடத்தப்படுவது சந்தன மரங்கள் தான். காரணம் சந்தனத்திற்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி. சந்தன மரம் பரவலாக வளர்க்கப்பட்டு விட்டால் இந்த கிராக்கி குறைந்து காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்து விடும்,சுற்றுப்புறசூழலை பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு 2008 நவம்பர் முதல் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள உழவர்கள் அல்லது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

சந்தன மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரக்கன்றுகளை வாங்கி நடலாம்.

நட்ட பிறகு நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து வாங்கி மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களை நன்றாக வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும் போது மாவட்ட வன அலுவரிடம் வெட்ட போகிறோம் என்பதை தெரிவித்து ஒப்புதல் வாங்க ஒரு விண்ணப்பத்தை தர வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வன அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு அந்தமரங்களை வெட்ட அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

இப்படி வெட்டப்படும் மரங்களை அரசாங்க மரக்கிடங்குக்கு கொண்டு வந்து வைரம் பாய்ந்த பகுதியை மட்டும் பிரித்து எடுப்பார்கள். பிறகு அந்த கட்டைகளை தரத்தின் அடிப்படையில் 19 வகையாக பிரித்து விற்பனை செய்வார்கள்.

விற்பனைத் தொகையில் 80 சதவீதம் மரத்தை நட்டு வளர்த்த நிலத்தின் சொந்தக்காரருக்கு சேரும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையில் வெட்டுக்கூலி,சுத்தம் செய்த கூலி,தரம்பிரித்த கூலி,பாதுகாத்தது மற்றும் ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பணம் அரசாங்கத்திற்கு சேரும்.

மரத்தை வெட்டி எடுத்த 90 நாட்களில் நிலத்தின் உரிமையாளருக்கு பணம் கிடைத்து விடும்.

எனவே கல்லுக்காடு,கரட்டுக்காடு,வறட்சியான நிலம் என எல்லா இடத்திலும் சந்தன மரம் வளருமுங்கோ...

என்ன சந்தன மரம் வளர்க்க கிளம்பலாமா....

புளோரைடு கலந்த பற்பசை பயன்படுத்தி பல்லை பளீச்சாக்குகிறீர்களா? உங்கள் பல் காணாமல் போகலாம் கவனம்!

2 கருத்துகள்


புளோரைடு கலந்த பற்பசை பயன்படுத்துகிறீர்களா? உங்கள் பல்லில் எப்போதும் இல்லாமல் புதிதாக மஞ்சள் கறை தென்படுகிறதா? எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். அது புளோரோசிஸ் என்ற பல்லை காணாமல் போகவைக்கும் நோயாக இருக்கலாம். புளோரோசிஸ் எப்படி வருகிறது, அதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்று பார்க்கலாம்.

புளோரோசிஸ் என்ற நோய்க்கான புளோரைடு என்ற ரசாயனம் உங்களின் ரத்தத்தில் கலந்து விட்டால் பற்களின் நடுப்பகுதியில் காறைபடிதல்,பல் வலி,பல் தொடர்பான நோய்கள்,நரம்புகள்,தசைகள்,குடல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர இளம் வயதிலேயே கூன்விழுதல்,எலும்புகள் கெட்டியாதல், முதுகுஎலும்பு,கழுத்துப்பகுதி,இடுப்புபகுதி மற்றும் மூட்டுப்பகுதிகளில் வலி ஏற்படுவது,வலிப்பு வருதல் என்று பல பிரச்சனைகள் வரலாம்.

புளோரைடு என்பது என்ன?
இந்தியாவில் நாட்டின் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டன. இந்த திட்டத்தில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தரவேண்டும் என்பதும் ஒன்று. ஆனால் திட்டம் போட்டதுடன் சரி. அப்படி ஒரு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது இதுவரை கேள்விக்குறியே.

நமக்கு சாதாரணமாக கிடைக்கும் தண்ணீரில் அந்த நீரை மாசுபடுத்தி மனிதர்களுக்கு பிரச்சனையை தோற்றுவிக்கும் 2,700 இரசாயனப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நமக்கு குடிநீராக கிடைக்கும் தண்ணீரில் ஏறத்தாழ 750 வகையான ரசாயனங்கள் கலந்திருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் 600 வகை ரசாயனங்கள் ஆர்கானிக் எனப்படும் அங்கக ரசாயனங்கள்.

இந்த அங்கக ரசாயனங்கள் குடிநீரை தூய்மையற்றதாக்குவதுடன் மனித உயிருக்கு கேடுவிளைவிக்க கூடியது. இவற்றுள் ஒன்று தான் இந்த புளோரைடு நச்சுப் பொருள். இந்தியாவின் 15 மாநிலங்களில் காணப்படும் நிலத்தின் மேற்பரப்பில் புளோரைடு கலந்த தாதுக்களும் உப்புக்களும் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் நமக்கு கிடைக்கும் நீரிலும், உணவுப்பொருட்களிலும் புளோரைடு சேர்ந்து வந்துவிடுவது தவிர்க்க முடியததாக மாறிவிடுகிறது.

இது போன்ற நிலத்தில் விளையும் அரிசி,கோதுமை,பருப்பு வகைகள்,காய்கறிகள்,கிழங்குகள் மற்றும் இறைச்சிகளிலும் புளோரைடு கலந்து விடுவது இயற்கை. இது தவிர புளோரைடு கலந்த உப்புக்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புளோரைடு கலந்த தூசுகள்,புகை ஆகியவற்றை சுவாசிக்கும் போதும் புளோரைடு நம்மை அறியாமலே உடலுக்குள் புகுந்து விடுகிறது.

சாதாரணமாக நாம் குடிக்கும் நீரில் 1.5 மி.கி புளோரைடு தான் இருக்க வேண்டும். இது அதிகமானால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உடலில் தோன்ற தொடங்கும். உடலில் ஒரு கட்டத்தில் புளோரோசிஸ் அதிகம் ஆகிவிட்டால் " புளோரோசிஸ்" என்ற நோய் வரும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்கு உட்பட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தண்ணீரினால் வரும் நோய்களால் இறந்து போகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

நீங்கள் அன்றாடம் பல்துலக்கும் பற்பசையானது புளோரைடு கலந்ததா என்று கேட்டுவாங்குங்கள், அதில் சிறிதளவு புளோரைடு கலந்திருக்கலாம்.இந்த பற்பசை உங்கள் பற்களை சுத்தமாக்கி பளீரிட வைக்கிறது என்று சொல்லி பேஸ்ட்டை அள்ளி அள்ளி பல் தேய்க்காதீர்கள்.

இந்த பற்பசை பயன்படுத்தி பல்துலக்கி விட்டு உடனே வாய் கொப்பளித்து விடுகிறேமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் உங்களை அறியாமல் ஒரு குறிப்பிட்ட அளவு புளோரைடு ரசாயனம் உங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாக்கிலும்,வாயிலும் உள்ள கண்ணுக்கு புலப்படாத ரத்தநாளங்கள் மூலம் இந்த புளோரைடு வெகுவேகமாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலந்து விடும். இப்படி கலந்து விடும் போது மேலே சொன்ன அனைத்து நோயும் வரவாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவில் இந்த புளோரோசிஸ் வியாதி 60 ஆண்டுகளுக்கு மேலாக பரவியுள்ளது. புளோரைடு கலந்த தண்ணீரை குடித்த ஆடு,மாடுகளுக்கு காலில் ஒரு வித விரைப்புத்தன்மை வரும். மூட்டுக்களை மடக்க வராது. பிறகு அவை உழவுக்கும் பயன்படாது. இறைச்சிக்கும் பயன்படாது. அவ்வளவு தான்.

புளோரோசிஸ் நோயை தடுக்க வேண்டுமென்றால் புளோரைடு கலந்த நீரைர குடிப்பதை தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இத்துடன் கால்சியம் அதிகமுள்ள பால்,பாசிப்பருப்பு, பிரண்டை உள்பட அனைத்தையும் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டும்.

இந்தியாவில் கேரளா,ஒரிசா,காஷ்மீர்,டெல்லி உள்பட பல மாநில மக்கள் இந்த புளோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலக அளவில் ஆப்கானிஸ்தான்,அல்ஜீரியா,சைனா,சூடான்,எகிப்து, தாய்லாந்து, கென்யா உள்பட 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் புளோரோசிஸ் பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் தருமபுரி,சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இந்த நோயினால் கூடுதல் பாதிப்பு காணப்படுகிறது. கோவை, மதுரை,திருச்சி, திண்டுக்கல்,விருதுநகர் போன்ற மாவட்டங்களில் ஒரளவு பாதிப்பு காணப்படுகிறது. நெல்லை,புதுக்கோட்டை,வடஆற்காடு,திருவண்ணாமலை சற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்கள்.

விரைவில் வல்லராகி விடுவோம் என்று கொக்கரிக்க நினைக்கலாம். ஆனால் பலருக்கு அதை கம்பீரமாக சொல்ல பல் வேண்டுமே?

தண்ணீர்.............எது இந்த உலகத்தில் இல்லாமல் போனாலும் மனிதன் தண்ணீர் இன்றி வாழவே முடியாது. அதுதான் நீரின்றி அமையாது என்றார் வள்ளுவர். தாயை இகழ்ந்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று பெற்ற அன்னையை விட உயர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது தண்ணீர். எனவே எக்காரணம் கொண்டும் தண்ணீரை மேற்சொன்ன 2700 அசுத்தங்களுடன் மேலும் அசுத்தமாகும் படி செய்வதை தடுத்து நிறுத்துவோம்.

தகவல்-கே.கே.என்,ராஜன், ஒய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்.


' விஷமாகுது நிலத்தடி நீர்' -கொடிய பீதியில் தமிழகம் என்ற தலைப்பில் அக்பர் ரிப்போர்ட் என்ற இதழ் தமிழகத்தில் விஷமாகும் நிலத்தடி நீர் பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. வாங்கி பாருங்கள். மேற்சொன்ன கட்டுரை அதில் இருந்தது அல்ல.

ஆடு,மாடு மேய்சசது மாதிரியும் ஆச்சு. கருவேல மரத்த வெட்டியது மாதிரியும் ஆச்சு.

2 கருத்துகள்

கருவேலம்
கருவேல மரத்தின் சில பயன்களை அனைவரும் தெரிந்து கொள்ள இந்த பதிவு,
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருப்பது கருவேல மரம். தமிழ்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடான காலகட்டத்தில் இந்த மரத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து தமிழ்நாடு முழுவதும் பரவ விட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. கருவேல மரத்திற்கு தமிழில் 25 க்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு.கருவேலம்,காரிரம்,காரகண்டம்,கர்ணமோட்டம்,கிருஷண்பிறகோட்டிகரு,உக்கிராட்டிட்ட மரம் என்று பல பெயர்கள். இதன் தாவரவியல் பெயர் அகேசியே நிலாட்டிகா.

இன்றைக்கு ஆட்டு கறியின் விலை கிலோ 300 க்கும் மேல். இதற்கு காரணம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று வளர்த்து சந்தைக்கு கொண்டு வருவதால் தான், ஆடுகளை இன்னும் கொட்டடியிடல் வளர்த்து தீவனம் கொடுக்கும் பழக்கம் வரவில்லை.

அப்படி வளர்ப்பது அதிகமான செலவை ஏற்படுத்தும் என்ற காரணத்தான்.கிராமங்களில் ஆடுகளை கால்நடையாக மேய்க்கும் போது கருவேல மரங்களை கண்டால் தொரட்டி கம்பு மூலம் கருவேல மரத்தின் காய்களை உதிர்த்து ஆடுகளுக்கு போடுவதுண்டு.

கருவேல மரத்தின் இலைகளும்,காய்களும் ஆடுகளுக்கு அல்வா சாப்பிடுவது போல். ஒரு குழந்தைக்கு சாக்லேட் எவ்வளவு பிரியமோ அது போல் ஆடுகள் இதனை விரும்பி ஒரு பிடிபிடிக்கும். கருவேல மரத்தின் பசும் இலைகளில் புரதச்சத்து,கொழுப்பு,கரையக்கூடிய மாவுப்பொருட்கள் மற்றும் சாம்பல்சத்துக்கள் உள்ளன.

இதன் காய்ந்த நெற்றுக்களில் (முற்றிய காய்கள்) புரத்தசத்து ஏராளமாக உள்ளது. இலைகளை விட நெற்றுக்களில் புரதச்சத்து அதிகம். வறண்ட பகுதிகளில் இந்த கருவேல மரங்கள் அதிகம் வளர்வதால் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்து கிடக்கும் இடங்களில் வெள்ளாடு வளர்ப்பை தொழிலாக தொடங்கி சிறப்பாக முன்னேறலாம்.

கருவேல நெற்றுக்களை சேகரித்து அவற்றின் ஓடுகளை நீக்கி விதைகளை அரைத்து கால்நடைகளின் தீவனத்தில் 10 சதவிதம் வரை கலந்து கொடுக்கலாம். ஆடுகள் இதனை அப்படியே சாப்பிட்டால் பல நேரங்களில் செரிமானம் ஆகமால் புழுக்கையில் வெளியேறி விடும். இந்த காய்களில் டானின் என்ற நஞ்சு இருக்கிறது.

இந்த டானின் புரதச்சத்தின் செரிமானத்தை குறைத்து விடும். இதை தவிர்க்க யூரியா (உரக்கடைகளில் கிடைக்கும்) கரைசல் உதவும். காய்களில் மொத்த எடையில் 5 சதவிகிதம் அளவு யூரியாவை தண்ணீரில் கரைத்து காய்களின் மேல் தெளித்து காற்று புகாதபடி 21 நாட்கள் மூடி வைத்து பிறகு காய்களை ஆடுகளுக்கு தரலாம்.

இதன் மூலம் காய்களில் இருக்கும் டானின் நச்சை குறைத்து விடலாம். இப்படி உத்தியை கையாளும் போது ஆடுகளின் தீவனக்கலவையில் 30 சதவீதம் வரை இந்த காய்களை கலக்கலாம். ஆக, உங்கள் ஊரில் எக்குதப்பாக கருவேலம் முளைத்து கிடந்தால் உங்கள் சிந்தனையில் உதிக்க வேண்டிய விஷயம் ஆட்டு பண்ணை முதலாளி கனவு தான்.

இது தவிர அகத்தி மரம் எங்கேயும் முளைக்கும். இதையும் நீஙகள் பெரிதாக தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை. அகத்தியில் ஆடு,மாடுகளுக்கு தேவையான புரதச்சத்தும்,தாதுச்சத்தும் உள்ளன. மூன்று கிலோ அகத்திக்கீரையில் உள்ள புரதச்சத்து ஒன்றரை கிலோ பயறுகளில் கிடைக்கும் புரதச்சத்துக்கு சமமாகும்.

விலை கொடுத்து பயறு மற்றும் பருத்திக் கொட்டைகளை வாங்கி கால்நடைகளுக்கு தருவதை விட ஆங்காங்கே கிராமத்தில் போகிற போக்கில் அகத்தி மரத்தை நட்டு விடுங்கள். உங்கள் ஆடுகளுக்கு இலவசமாக உணவும் கிடைக்கும். ஊருக்குள் மரத்தை நட்டு சமூக சேவை பண்ணியது போலவும் ஆகிவிடும்.

இது தவிர சிவப்பு மந்தாரை,ஒதியமரம், சவுண்டல் மரம்,வன்னிமரம்,கிளைசிரிடியா மரம்,அரச மரம்,வாகை மரம்,கல்யாண முருங்கை போன்றவையும் வறட்சி பகுதியில் எளிதாக வளரும், இந்த மரங்களின் இலை தழைகளும் ஆடுகளுக்கு பிடித்த உணவு.

.ஆட்டுப்பால் மாட்டு பாலை விட அதிக சக்தி வாய்ந்தது. நமது தேசபிதா மகாத்மா காந்தி கூட நிலக்கடலையும் ஆட்டுப்பாலையும் வழக்கமாக குடித்து வந்ததாக சொல்வார்கள். பெங்களூரில் இருந்து ஒரு பேக்கிங் இயந்திரத்தை வாங்கி வந்து ஆட்டுபாலை பாக்கெட் போட்டு அருகில் உள்ள நகரத்துக்கு அனுப்பி ஆட்டுபால் பிசினஸ் ஆரம்பித்து அமோகமாக விற்கலாம்.
கருவேலம் பூ
 கருவேல மரத்தின் பட்டைகளை உரித்து காய போட்டு பதப்படுத்தி சிறப்பான பல்பொடி தயாரிக்கலாம். கருவேலம்பட்டையில் தயாரிக்கப்பட்டும் பல்பொடிக்கு ஈடுஇணையான பலமுள்ள பற்களை உருவாக்கும் பற்பொடி உலகின் எந்த மூலையில் தேடினாலும் கிடைக்காது. ஆக, ஒரு கரு வேல மரத்தில் பல மாங்காய்களை( ஆடு மாடு தீவனம்) அடிக்கலாம்.

ரஜினி போல பால்கார அண்ணாமலையாக நீங்களும் வரலாம்

0 கருத்துகள்

 பால் ,டீ,காபி இல்லாமல் பலருக்கு கையும் ஓடாது.காலும் ஓடாது.
பால் விலை எகிறுது என்று நாம் முனுமுனுப்போம்.
ஆனால் நம் வீட்டு பால்காரருக்கு போதிய அறிவியல் விவரங்கள் தெரிய வருவதில்லை.அதை அவர் தெரிந்து கொண்டால் அவரது மாட்டுக்கு சரியான சத்து பொருட்களை வாங்கி போடுவார்.

நமக்கும்  பால் குறைந்த விலையில் கிடைக்கும். மாடுகளை வளர்க்க சத்தான தீவனம் இல்லாததால் மாடுகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக போகின்றன. விவசாயம் குறைந்து வருகிறது.

மாடுகளை சரியான முறையில் வளர்க்க தெரிந்தால் ரஜினி போல பால்கார அண்ணாமலையாக நீங்களும் வரலாம். மாடுகள் வைத்து உழவு செய்தால் விவசாயம் இயற்கை விவசாயமாக இருக்கும்.

மாடுகளின் சாணம் நிலத்தில் விழுந்து எருவாக உரமாக மாறும். விவசாயிக்கு உரத்தின் செலவு குறையும். நமக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். போகிற போக்கில் உங்கள் பால்காரருக்கு கீழே சொல்லும் கால்நடை கட்டியை வாங்கி போட சொல்லுங்கள்.


கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்க்க விருதுநகரை சேர்ந்த ஒரு பொறியாளர்  ஒரு சத்து மாவு கட்டியை தயார் செய்துள்ளார்.

பூஸ்ட், காம்ப்ளான் போல், கால்நடைகளுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்களை ஈடுகட்ட உதவும் புதிய வகையிலான கனிம சத்துக்கள் நிறைந்த கால்நடை கட்டி மாவு இது. நிச்சயமாக இந்த கனிம கட்டி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும், ஆடு, பன்றி வளர்ப்பு பண்ணைக்காரர்களுக்கும் பெரிய வரப்பிரசாதம் என்கிறார் அவர். இது என்ன கனிம கால்நடை நக்கி என்று அவரிடம் கேட்டோம். 

ஏதோ கிடைத்த தீவனத்தை உணவாக கொண்டு பசுக்கள் அன்றாடம் நமக்கு கொழுப்பும், இதர ஊட்டச்சசத்துக்களும் நிறைந்த பாலை தருகின்றன. இந்த பாலை அன்றாடம் காபியாக, டீயாக, நெய்யாக பல வகைகளில் பயன்படுத்துகிறோம்.

ரத்தத்தை பாலாக மாற்றி தரும் பசுக்களின் தீவனத்தில் போதிய சத்துக்கள் இருந்தால் தான் அவை தரும் பாலிலும் சரியான சத்துப் பொருட்கள் நிறைந்து காணப்படும். பாலில் இருக்கும் கொழுப்பின் அளவையும், இதர சத்தூட்ட பொருட்களின் அளவையும் வைத்து தான் அரசும், தனியார் பால் விற்பனை நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் தருகின்றன.

இப்படி இருக்கும் நிலையில் பொதுவாக பசுக்களை பராமரிப்பவர்கள் அவற்றுக்கு போதிய சத்துள்ள தீவனம் கொடுத்து பராமரிக்கின்றார்களா, என்றால் இல்லை என்பது தான் உண்மை. குறிப்பாக நகரப்பகுதிகளில் பசுக்களை வளர்ப்பவர்கள் அவற்றை எந்த கவலையும் படாமல் விட்டு விடுவதுண்டு. அவை சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பை கூளங்கள், சினிமா போஸ்டர்களை மேய்ந்து விட்டு தவறாமல் கறவை நேரத்திற்கு வீட்டுக்கு வந்து பாலை கொடுத்து விட்டு போய்விடும்.

இப்படி தெருவில் மேயச்செல்லும் போது தான் அவற்றுக்கு பிரச்சனை தொடங்குகிறது. குப்பையில் இருக்கும் பாலீத்தின் பைகள், ஆணி, பிளாஸ்டிக் என்று வித்தியாசம் பாராமல் அனைத்தையும் வயிற்றுக்குள் முழுங்கி விட்டு பின்னர் கழிச்சல்,தீவனம் எடுக்காமல் இறந்து போவது உள்பட நிகழும். சாதாரண தீவனத்திற்காக பசுக்களை இப்படி அலைய விடுபவர்கள் ஒட்டு மொத்தத்தில் பசுவை இழந்து விடுவதுண்டு.


இது தவிர, பண்ணை வைத்திருப்பவர்கள் கூட சாதாரண வைக்கோல், பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றுடன் தீவனத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இதிலிருந்து அந்த பசுக்களுக்கு போதிய சத்துக்கள் கிடைக்குமா....என்றால் அதுவும் கேள்விக்குறி தான்.

இப்படி தீவனத்தில் போதிய சத்துக்கள் இல்லாத போது, கால்நடைகள் நோய்வாய்ப்படுகின்றன. பால் சுரப்பு குறைந்து போகின்றது. சினை பிடிப்பதில் தாமதம் அல்லது சினை பிடிக்காமலே போய் மலட்டு தன்மையை அடைகின்றன.

இது போன்ற பிரச்சனைகளை தவிர்த்து,  கால்நடைகளுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்களை ஈடுகட்ட புதிய சத்துணவை கண்டு பிடிக்க தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த கால்நடை நக்கி உருவானது. இது போன்ற கால்நடை கனிம நக்கி கட்டிகள் முதன்முதலாக ஜெர்மனி நாட்டில் பயன்படுத்தப்பட்டது. வழக்கமாக  கால்நடைகளுக்கு எந்த ஒரு தீவனத்தையும் கெட்டியாக அல்லது திரவவடிவில் அவை குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுப்பதுண்டு. ஆனால் இந்த கட்டி வித்தியாசமானது.

2 கிலோ அளவில் திடமான ஒரு கட்டியாக இதனை செய்துள்ளோம். இதனை ஒரு குச்சியில் கோர்த்த நிலையில் பசுக்களின் முன் நட்டு வைத்து விடலாம். இந்த கட்டியை ஒன்றிரண்டு நாட்களில் பசுக்கள் சுவை பார்க்க கற்றுக் கொண்டு விடும்.

பார்ப்பதற்கு ஐஸ்கீரிம் போல் காட்சியளிக்கும் இந்த அமைப்பை மாடுகள் தேவையான நேரத்தில் சுவைக்க தொடங்கும். இதன் மூலம் இந்த கட்டியில் அடங்கியுள்ள தாதுஊட்ட சத்துக்களான, உப்பு, இரும்பு, துத்தநாகம், அயோடின், கோபால்ட், தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு  போன்ற சத்துக்கள் பசுக்களுக்கு கிடைக்கும்.


ஆனால் வழக்கமாக நாம் தீவனம் வைக்கும் போது இந்த சத்துக்களை எல்லாம் கவனித்து கொடுப்பதில்லை. அதனால் தான் மேலே சொன்ன பிரச்சனைகள் எல்லாம் கால்நடைகளுக்கு வருவதுண்டு. ஆனால் இப்படி குச்சி போன்ற அமைப்பில் தாதுஉப்பு கட்டியை வைத்து விடுவதால், கால்நடைகள் இவற்றை தேவையான போது நக்கி உண்ண பழக்கப்பட்டு விடுகின்றன.

இதில் கிடைக்கும்  இரும்பு சத்து, கால்நடைகளின் ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது. தாமிரச்சத்து கீமேகுளோபினை எடுத்து செல்கிறது. துத்தநாக சத்து உடலின் திசுக்களின் கண்ணறைகளை உருவாக்கவும், ரோமம், கம்பளி மற்றும் தோல் அதிக வளர்ச்சி பெறவும் உதவுகிறது.

அயோடின் சத்து தொண்டை அழற்சி நோய் வராமல் தடுக்கிறது. உயிர்சத்தின் ரசாயன மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மாங்கனீஸ் சத்து அதிக பால் சுரப்பதற்கும், கரு உருவாவதற்கும் உதவுகிறது. கோபாலட் சத்து, பசியின்மையை போக்குகிறது. இரத்த சோகையை நீக்குகிறது. மக்னீசியம் சத்து எலும்பு உருவாகிட உதவுகிறது.


பொதுவாக,  கால்நடைகளின் உணவில் இந்தசத்துக்கள் கிடைக்காத போது, அவை தொழுவத்தின் சுவர்களை நக்கும். மண்ணை  தின்னும். இதனால்  அவற்றின் உடல்வளர்ச்சி, வாழ்நாள் குறைந்து போகும்.  இந்த நிலையில் தாது உப்புக்களை ஒன்று கூட்டி, கட்டி போன்ற வடிவில் இதனை தயாரித்திருப்பதால் மாடுகளின் இயல்பான வழக்கமான நக்கி உண்ணும் பழக்கம் மேற்கண்ட  சத்துக்களை கிரகிக்க உதவுகிறது என்பது தான் இதில் சிறப்பு.

இந்த கனிம கால்நடை நக்கியை பால்சுரக்கும் மாடு, எருது, கன்றுக்குட்டிகள், ஆடு, பன்றி, குதிரை ஆகியவற்றுக்கு அதன் எடை அளவை பொறுத்து தரலாம். இந்த கட்டிகள் பண்ணையாளர்களின் மனத்துயரங்களை துடைக்கும் பஞ்சாக இருக்க போகிறது , என்கிறார் இவர். இவரது போன் 94865 77447

நம்ம பாடுபட்டு சேமிச்ச ரத்தத்தை குடிக்கும் கொசுக்களை குடும்பத்தோடு அழிக்கலாம் வாங்க!

2 கருத்துகள்

ஒசாமா பின்லேடனை கூட கண்டு பிடித்து விடுவோம் என்று சவால் விடும் அமெரிக்காவால் கூட இந்த கொசுவை ஒழிக்க வழி கண்டு பிடிக்க முடியவில்லை.குளிர் காலம் வந்திருச்சுல...கொசுவும் பெருகிபோச்சு. முன்னால நான் எழுதின பதிவு தான். இப்போ ரீப்ளே!
காட்டை மனிதன் அழித்தான். தங்களது இருப்பிடத்தை ஆக்கிரமித்த மனிதனை பழிவாங்க யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும் தமிழ்நாட்டின் வனங்களை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் நுழைந்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டன.
குளு குளு கொடைக்கானலில் காட்டெருமைகளை காட்டுக்குள் தான் காணமுடியும். இப்போது அவைகள் நடுரோட்டில் வலம் வருகின்றன. மனிதர்கள் மிரண்டு போய் நிற்க வேண்டியுள்ளது. வனத்தை அழிக்கும் போது அவை இரை தேடி நடு ரோட்டுக்கு வருவது இயற்கை தான். இந்த விலங்குகளுடன் சேர்ந்து மனிதனை மிரட்ட வந்த ஒரு ----ப்பூ......உயிரினத்தை மனிதர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது தான் துரதிர்ஷ்டம். அது தான் கொசு. நாம் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றியெல்லாம் இந்த கொசுவுக்கு கவலை இல்லை. காதுக்கருகில் வந்து நாரசாரமாக ங்கொய்................என்று பாட்டு பாடுவது, பாடி விட்டு ரத்த தாகம் எடுக்கும் போது கடிப்பது என்று மனிதனை பாடாய் படுத்துகின்றன.

காட்டுக்குள் குளிர்ச்சியான மரங்களில் தங்கியிருந்து வாயில்லா பிராணிகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்களை மனிதர்கள் தான் நகரத்திற்குள் நுழைய விட்டு விட்டார்கள்.
மரங்களை வெட்டியதுடன், கண்ட இடத்திலும் சாக்கடை, பள்ளங்களை தோண்டிய மனிதர்களை பார்த்து எள்ளி நகையாடிய கொசுக்கள் ஆற, அமர அவர்களை கடித்து இந்த கழிவுநீரி்ல் குடும்பம் நடத்தி கொள்ளுதாத்தா, பாட்டி தொடங்கி பச்சை பால் குடிக்கும் கொசு என்று பலுகி, பெருகி மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.


அணுகுண்டு தயாரிக்கும் விஞ்ஞானிகள் கூட சாதாரண கொசுவை கண்டு மிரண்டு போனார்கள். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்....சிக்குன் குனியா, டெங்கு படுத்திய பாட்டை பார்த்து இது இந்தியாவின் மேல் தொடுக்கப்பட்ட பயோவார் என்று அறிக்கை விட்டார்கள். ஆனால் நடந்தது என்ன.....சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற கதை போல கொசுக்கள் குடியிருந்த மரங்களை வெட்டியது தான் ,அவை நகரத்துக்குள் வர முக்கிய காரணம் என்பதை மறந்து போனார்கள்.


சரி....இனி கதைக்கு வருவோம். இந்த கொசுக்களை குடும்பத்தோடு அழிக்க எளிய வழி முறை இதோ..........


சாப்பாடு செய்வதற்கு முன்பு அரிசியை கழுவும் நீரை 100 மில்லி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு வாரம் வைத்திருக்கவும். நீரில் உள்ள அழுக்குகள் எல்லாம் அடியில் தங்கி விடும். நீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு லிட்டர் பாலை பாட்டிலில் ஊற்றுங்கள். பத்து நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
பதினோராம் நாள் பாட்டிலின் மேல் வாய்புறம் ஆடைபோல் இருக்கும். இதனை எடுத்து தூரபோட்டு விடுங்கள். அடுத்து 100 கிராம் நாட்டு சர்க்கரையை கரைத்து பாட்டிலில் ஊற்றுங்கள். இது தான் உள்ளே வளர்ந்து இருக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவு. 10 நாட்கள் வரை இந்த கலவையை அப்படியே வைத்திருங்கள்.
11 வது நாள் இருக்கும் கலவைக்கு பெயர் லாக்டோ ஆசிட் பாக்டீரியா. ஒரு பக்கெட் நீருக்கு 3 மூடி என்ற அளவில் இந்த ஆசிட்டை ஊற்றி உங்கள் சுற்றுப்புறத்தை கழுவுங்கள். துர்நாற்றம் தூரஓடும். அப்படி இது என்ன தான் செய்கிறது என்கிறீர்களா? லேக்டிக் ஆசிட் பாக்டீரியாவுக்கு கொசு முட்டை என்றால் பிரியாணி சாப்பிடுவது மாதிரி. அதனால் கொசுக்களின் சந்ததி குளோஸ்.
இதையெல்லாம செய்தும் உங்களை கொசுக்கடித்தால்.......அதை முடிந்தால் நீஙகள் திருப்பிக்கடிக்கலாம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம். முடிந்தால், ஒரு தவளையை வாங்கி வளருங்கள். தவளைகளின் முக்கிய உணவு. கொசுமுட்டைகள் தான்.
இதுவும் முடியாவிட்டால், ஒரு வேம்பு மரத்தை வளருங்கள். வேப்ப இலைகளை புகை போட்டால் கொசுக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும். அத்துடன் உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். அது தான் கொசுக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.

உடம்பெல்லாம் எரியுதா? இது சீதாப்பழ சீசன் மறக்கமா வாங்கி சாப்பிடுங்க.

1 கருத்துகள்
அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. 'இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது' ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது. வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால் ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் ஒவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.

இப்போது சீத்தாப்பழ சீசன். சின்னப்பிள்ளைகள் கையில கெடச்சா அப்படியே ஒவ்வொரு விதையிலயும் ஒட்டியிருக்கிற வெண்மை நிற கரகரப்பான இனிப்போட இருக்கிற சதையை சீதாப்பழத்துல இருந்து எடுத்து சாப்பிடற விதமே அழகு. இந்த பழத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு சீதாப்பழ மரத்தை நடுங்கள்.

சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர். இதன் மரப்பெயர் 'அனோனா ஸ்குவோமோசா'. தென்அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் பயிரானது. அதாவது இதன் தாய்வீடு அமெரிக்கா பகுதிகள் தான். இந்தியாவிலேயே தென்இந்திய பகுதிகளில் தான் ரொம்பவே செழிப்பா வளருது.
இந்த சப்போட்டா மரம் விதை,நெருக்கு ஒட்டு முறைகளால் கன்றுகளாக வளர்க்கப்பட்டு சிறிய மரமாக வளர வகை செய்யப்படுகிறது. எவ்வளவு தான் வெயிலிடிச்சாலும், மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்த்து சளைக்கமால் வளரும் இந்த சீதாப்பழம்.

விதையை வெச்சு சாகுபடி செஞ்சா சீதாசெடி மரமா வளர்ந்து வர்றதுக்கு 4 ஆண்டு ஆகும். நெருக்கு ஒட்டு மூலம பதியமா போட்டு வளர்த்தா,இரண்டாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஒரு மரத்தில இருந்து ஆண்டுக்கு 25 முதல் 30 கிலோ பழங்கள் கிடைக்கும்( நீங்க சாப்பிட்டது போக பக்கத்துக்கு வீட்டுக்கு காரங்களுக்கு விக்கலாம்)

சப்போட்டா மரத்துல இருந்து அது காயா இருக்கும் போதே பறிச்சு பழுக்க வெக்கணும். பழத்திலிருந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம்.
இதில இருக்கிற சத்துக்கள பார்ப்போம்.

புரதம் 1.6, கொழுப்பு 0.4,நார்ப்பொருள் 3.1,மாவுப்பொருள் 23.5,கால்சியம் 17 மிகி.இரும்பு 1.5 மிகி,தயமின் 0.07,ரைபோபிளவின் 0,17மிகி,நியாசின் 1,3 மிகி,வைட்டமின் சி 37 மிகி,மெக்னீசியம் 48 மிகி,பொட்டாசியம் 340 மிகி,தாமிரம் 0,52 மிகி,குளோரின் 37 மிகி,ஆக்சாலிக் அமிலம் 30 மிகி,சக்தி 104 கலோரிகள்.

மருத்துவ குணஙகள் இதில் அதிகமாக இருக்கிறது. சீதாப்பழ மரத்தின் இலை,பட்டை,காய்,பழம்,விதை அனைத்துமே மருந்து தான். காய்துவர்ப்பாக இருப்பதால் கழிச்சல்,சீதக்கழிச்சல் இருக்கும் போது சாப்பிடலாம். சற்று நேரத்தில் இந்த கழிச்சல் நோய் சரியாக போகும். பழம் இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால் ரத்தம் அதிகம் ஊற வழிசெய்யும்.

உடல் வெயிட் போட நினைப்பவர்கள் நிறைய சீதாப்பழம் சாப்பிட்டால் போதும். சில மாதங்களில் நன்றாக குண்டடித்து விடலாம். பழம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக இருப்பதால் உடல் எரிச்சல் இருப்பவர்கள் இதை வாங்கி சாப்பிட்டு உடலின் எரிச்சலை தணிக்கலாம்.

வாந்தி அதிகம் இருக்கும் போது சீதாப்பழம் சாப்பிட்டால் வாந்தி நின்று போகும். டி,பி என்ற காசநோய் இருக்கும் நோயாளிகள் சீதப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடணும். ரொம்ப நல்லது. காசநோயின் தீவிரத்தை குறைக்கும்.

சீதாப்பழத்தின் விதைகளை பொடியாக ஆக்கி ஆறாத புண்களின் மேல் போட்டால் அந்த புண்கள் நாளடைவில் காய்ந்து ஆறிவிடும். அதே போல் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து புண்களின் மேல் பற்று போல் போட்டாலும் புண்கள் ஆறிவிடும்.

பிரேசில் நாட்டில் இலைகளை அரைத்து பற்று போட்டு புண்களை குணப்படுத்துகிற பழக்கம் இப்போதும் உண்டு.தலையில் பேன்கள் அதிகம் இருந்தால் விதையின் பொடியை தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

தகவல் - பேராசிரியர்.கோ.அர்ச்சுணன்,தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழகம்.
க்ரீன் இந்தியா பவுண்டேசன் சார்பில் நன்றி பேராசியருக்கு உரித்தாகிறது.

What is Biodiversity: Video Explanation

0 கருத்துகள்
What is Biodiversity: Video Explanation, posted with vodpod

உன் வருமானத்தில் சிறிய பங்கை ஏழைகளுக்கு கொடு

0 கருத்துகள்

செய்யும் தொழிலில் பல லட்சங்களை, கோடிகளை குவிக்கும் பலர் எச்சில் கையால் காக்கை கூட விரட்டாதவர்களாக இருப்பதை காணலாம. ஆனால், இடது கை செய்யும உதவி வலது கைக்கு தெரியாமல் உதவிகள் செய்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.மதுரையில் செயல்படும் அக்ரோ கிளப் இதில் இரண்டாவது வகை.
இது, விவசாயம் தொடர்பான தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் இணைந்த ஒரு அமைப்பு.தொடங்கி 8மாதங்களே ஆன நிலையின் இநத அமைப்பின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. எந்த லாப நோக்கமும் இல்லாமல், கேள்விப்பட்ட உதவிகளை உடனே செய்து தருகிறார்கள்.


உன் வருமானத்தில் சிறிய பங்கை ஏழைகளுக்கு கொடு என்கிறது விவிலியம். இந்த வேதவாக்கை அப்படியே கடைபிடித்து தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளின் உதவிக்காக செலவிட்டு வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சிஙகராஜ். சிறிய அளவில் உரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை மதுரையில் நடத்தி வருகிறார்.
தங்கள் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பகிரிந்து கொண்டார்.
''இன்றைக்கு உலக அளவில் லயன்ஸ்கிளப், ரோட்டரி கிளப் போன்ற சேவை அமைப்புகள் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை பார்த்து எனக்கு இது போன்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. குறிப்பாக ஏழை குழந்தைளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம.
ஏற்கனவே உரம் தயாரிப்பாளர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கம் செயல்படுகிறது. அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எனது முடிவை தெரிவித்தேன். உறுப்பினர்களான சண்முகநாதன், ஹேமா உள்பட அனைவரும் உடனே இந்த அமைப்பை தொடங்கி பதிவு செய்வதென்று முடிவு செய்தார்கள். தற்போது மதுரை அக்ரோ கிளப் என்ற பெயரில் செயல் படடு வருகிறோம்.
இந்த அமைப்பின் மூலம் மதுரையில் உள்ள பார்வையற்ற குழந்தைகள் படிக்க உதவிடும் வகையில் பிரெய்லி புத்தகங்கள், உடைகள் உள்பட 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உதவி செய்தோம். இது தவிர மதுரை புதூர் பகுதியில் உள்ள அன்பகம் மனநலன் குன்றிய குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வீல்சேர், கல்வி உபகரணங்கள் கொடுத்தோம். இது தவிர அந்த குழந்தைகளை மகிழ்ச்சி படுத்த சிறிய தோட்டம் ஒன்றை உருவாக்கி தந்தோம்.


இத்துடன் மதர் தெரசா இல்லம், சரஸ்வதி பாலர் இல்லம் ஆகிய இடங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் சில உதவிகள் செய்தோம். சமீபத்தில் மதுரை விவேகானந்தா நர்சரி பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் டிவிடி பிளேயர் ஒன்றை வழங்கினோம்.இப்படியாக சில உதவிகளை செய்து வருகிறோம்.
வரும் காலத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் ஏழைக்குழந்தைகள் இலவசமாக படிப்பதற்காக ஒரு கட்டணமில்லா பள்ளியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.தற்போது மதுரை அளவில எங்களது உதவிகளை செய்து வருகிறோம். இது போல் பிறமாவட்டங்களில் உள்ள எங்களது சங்க உறுப்பினர்களும் உதவிகள் செய்ய ஆர்வமுடன் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இது போல் சேவைகளை செய்ய வேண்டும் என்ற நிலையில் திட்டமிட்டு, உறுப்பினர்களின் ஆர்வத்தை உறுதிப்படுத்தி அக்ரோ கிளப்பில் இணைத்து வருகிறோம்.நிச்சயமாக இந்த அமைப்பு மூலம் மாவட்டங்கள் தோறும் பலர் பயனடைவார்கள் என்பது நிச்சயம்.
எங்கள் அமைப்பில் சேரவிரும்புபவர்கள் விவசாயம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இது போன்ற சேவைகளுக்கு தர உறுதி அளிக்க வேண்டும. மேலும், சிறிதளவு நேரத்தையும் செலவிட தயாராக இருக்கவேண்டும, இது தான் விதிமுறை.இது போன்ற எண்ணமும், விருப்பமும் உள்ள நபர்களை வரவேற்கிறோம்'' என்கிறார்.
நீங்களும் சேவை செய்ய விரும்புகிறீர்களா.............

திரு.சிஙகராஜ அவர்களை 94437 74229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சம்பாதிக்கலாம் வாங்க...காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

23 கருத்துகள்

 காளான் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது.  தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் காளான்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார். அவ்வப்போது விருப்பம் உள்ளவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சியும் அளித்து வருகிறார்.

காளானில் லெண்டிக்காளான், சிப்பிக்காளான், முட்டைக்காளான். மார்செல்லா என்ற மண்ணுக்கடியில் விளையும் கருப்புக்காளான்கள் ஆகியவை உணவுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுக்காளான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். விஷக்காளான்கள் பல்வேறு நிறங்களில் இருக்கும். பால் வடியும் காளான்களும் உணவுக்கு  ஏற்றவை அல்ல.


காளான்களில் பலவகைகள் இருந்தாலும், குறைந்த முதலீட்டில், சிறிய இடத்தில் ஆண்டு முழுவதும் வளர்க்க கூடிய ரகமாக இருப்பது சிப்பிக்காளான் மட்டுமே. இந்த வகை காளான்களை சிறிய கொட்டகையில் எளிதாக வளர்க்க முடியும்.சிப்பிக்காளானில் பி.எப்.இ, கோ.13,ஏபிகே1, எம்டியு1 என்ற ரகங்கள் உள்ளன. இதில் பி.எப்.இ ரகம் பல்வேறு நாடுகளில உள்ள விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகிறது.

பேராசிரியர்.ராஜேந்திரன்
காளான் வளர்க்க விரும்புபவர்கள், வளர்க்க திட்டமிட்டுள்ள அளவிற்கு தக்க கொட்டகை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 10 கிலோ அளவிற்கு காளான்களை அறுவடை செய்ய வேண்டுமென்றால், 200 முதல் 250 சதுர அடியில் கீற்றுக் கொட்டகை அமைக்கலாம்.

கான்கீரிட், ஓடு வீடாக கூட இருக்கலாம். வடக்கு, தெற்கு வசம் பார்த்த நிலையில்  இருப்பது நல்லது. இதற்கடுத்து, இந்த இடத்தில் வெப்பதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும. காளான்  வளர்ப்பு இடத்தில் அதிக வெப்பம் இருக்க கூடாது.
வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில்,  முதலில் வீட்டின் தரையில் ஆற்றுமணலை 1 அடி உயரம் வரை இருக்கும்படி நிரப்ப வேண்டும்.  பின்னர் வீட்டின் சுற்றுச்சுவர்களில் சாக்கு படுதாக்களை கட்டி தொங்க விட வேண்டும். காளான் படுக்கைகளை வைப்பதற்கு தகுந்தபடி மரஅடுக்குகளை செய்து கொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு 10 கிலோ காளான் வளர்க்க வேண்டுமென்றால், 20 காளான் படுக்கைகள், 10 பாட்டில் காளான் விதைகள், 10 கிலோ வைக்கோல் தேவைப்படும். காளான் வளர்ப்பிற்கு ஊடகமாக, காய்ந்த நெல், கரும்பு சக்கை ஆகியவற்றை கூட பயன்படுத்தலாம். இருந்தாலும் வைக்கோலில் தான் விளை திறன் அதிகம்.


விளைவிக்கும் முறை
காளான் விளைவிக்க, காளான் படுக்கைகளை முதலில் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஊடகமாக பயன்படுத்த போகும் வைக்கோலை 5 முதல் 10 செ.மீ அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட வைக்கோல் துண்டுகளை நீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய வைக்கோலை அண்டாவில் இட்டு வேக வைக்க வேண்டும்.பின்பு தண்ணீரை வடித்து விட்டு,  கிருமி நாசினி கொண்டு  துடைக்கப்பட்டதரையில் 50 சதவிகிதம்  ஈரப்பதம் நீங்கும் வரை உலர்த்த வேண்டும்.


காளான் இடுதல்
இதற்கடுத்து காளான் விதைகளை முளைப்பதற்கு தயார் செய்ய, பாலீதின் பைகளில் வைக்கோலை நிரப்ப வேண்டும். சிறிது வைக்கோல் நிரப்பி பின்னர் அதன் மீது காளான் விதைகளை தூவ வேண்டும். பின்னர் இதன் மேல் சிறிது வைக்கோல் நிரப்பி, அதற்கு மேல் காளான் விதைகளை தூவி வரவேண்டும். இவ்வாறாக பாலீத்தின் பை நிரம்பும் அளவு செய்ய வேண்டும். இறுதியில்
பையின் வாய்ப்பகுதியை தைத்து விடவேண்டும்.


இப்படி விதை நிரப்பப்பட்ட பாலீதீன் பைகளை காளான் வீட்டிற்குள் இருக்கும் மரப்படுக்கைகளில் வைத்து விடலாம். காளான் அறையின் வெப்பநிலை சுமார் 24 முதல் 28 டிகிரி வரையும், ஈரப்பதம் 70 முதல் 80 சதவீதம் வரையும் இருக்க வேண்டும். இந்த நிலையில் காளான் விதைகள் முளைத்து மைசீலியங்கள் என்ற மொட்டுக்களை பை முழுவதும் பரப்ப தொடங்கும். இதற்கு பூசணம் பரவும் நிலை என்று பெயர்.

காளான் வீட்டின் வெப்பநிலையை சீராக வைக்க உள்ளே தொங்கவிடப்பட்ட சாக்கு பைகளின் மீதும், ஆற்று மணலின் மீதும் நாளொன்றுக்கு இரண்டு முறை  தண்ணீரை தெளித்து வர வேண்டும். இப்படி பராமரிக்கும் போது 5,6 நாட்களில் வளர்ச்சி பெற்ற காளான்கள் வரத்தொடங்கும். இவற்றை அறுவடை செய்யலாம்.

விளை திறனை அதிகப்படுத்தும் முறைகள்
வைக்கோலை ஊடகமாக பயன்படுத்தும் போது காளானின் விளை திறன் 80 சதவீதம் அளவு இருக்கும். ஆனால் வைக்கோலுடன் கானபயிறு பொடி, துவரைப்பொடி, தேங்காய் தண்ணீர், சாணஎரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட கரைசல் போன்றவற்றை சேர்த்து முளைக்க வைக்கும் போது 20 முதல் 40 சதம் வரை காளானின் விளை திறன் உயரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

காளான் அறுவடை
காளான்களை அதிகாலையில் அறுவடை செய்ய வேண்டும். பறித்த காளான்களில் வேர்ப்பகுதியை வெட்டி எடுத்து விடவேண்டும். பறிக்கும் போது பாலீதின் பையில் இருக்கும் மற்ற காளான் மொட்டுக்களுக்கு பாதிப்பு வராமல் எடுக்க வேண்டும். காளான்கள் பறித்த உடன் அழுக தொடங்கும். எனவே பறித்த உடனேயே அவற்றை பாலிதீன் பைகளில் போட்டு அடைத்து விட வேண்டும்.

காற்றோட்டத்திற்காக இந்தபையின் மேற்பரப்பில் பென்சில் முனை மூலம் சில துளைகளை இடலாம். இந்த பைகளை ஈரத்துணியில் சுற்றி குளிர்நத நிலையில் வைப்பதன் மூலம் 24 மணி நேரங்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம். 5முதல் 10 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்தால் 3 நாட்கள் வரை  பாதுகாக்கலாம்.

காளான் பைகளை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்ல ஐஸ்கட்டி நிரப்பிய பெட்டியில் எடுத்து செல்லலாம்.நீண்ட நாளைக்கு கெடாமல் இருக்க காளான்களை வேருடன் வெட்டி எடுத்து, மண்,தூசிகளை நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, நறுக்கிய துண்டுகளை வெள்ளைத்துணியி்ல் கட்டி கொதிநீரில் முக்கி எடுக்க வேண்டும். பின்னர் வெயியே எடுத்து நீரை வடித்து விட்டு டப்பாக்களில் அடைக்கலாம். பின்னர் மூடியை சீல் செய்து டப்பாக்களை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

நீங்கள்  பயிற்சி பெற தயாரா?ஒரு மின்னஞ்சல் (treesday@gmail.com)அனுப்புங்கள்.

எதிர்கால சென்னையில் வசிக்கப்போவது யார்?

0 கருத்துகள்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்து தமிழநாட்டின் சில கரையோற மாவட்டங்களில் கரையை தொட்டு பாதத்தை நனைத்து விட்டு போனது. ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் போயிருக்கும். காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்கள் கூட கடல் நீரால் சூழுப்பட்டு விடும் என்று சென்னைவாசிகளை உலுக்கும் செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது. அவர்கள் கட்டுரையில் சரியாக சொல்லாமல் விட்ட விஷயம்...சென்னைவாசிகளுக்கு இன்னும் சில ஆண்டுகளில் உணவு கிடைப்பது சிக்கலாக போகிறது என்பதை தான்.
இதன் சுருக்கம் இங்கே......

'உலகின் சுற்றுச்சூழல் சூப்பர் ஹீரோ' என்று பெயரெடுத்தவரும், 25 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய எட்டு நண்பர்களுடன் தனிக்கப்பலில் அண்டார்டிகா சென்று 'இதைப்பாதுகாப்பதே லட்சியம்' என்று தன் வாழ்நாளை அர்ப்பணித்த ராபர்ட் டிவைன் சுதந்திர தினத்தன்று சென்னை வந்திருந்தார். உலகமே போற்றும் ராபர்ட் ஸ்வானிடம் ஜு.வி பேட்டி கண்டிருக்கிறது. அப்போது அவர்,
" நான் நின்று பேசிக் கொண்டிருக்கும்இந்த இடம் இன்னும் 80 வருடங்களில் கடலுக்குள் இருக்கும். என் முன்னால் அமர்ந்திருக்கும் உங்கள் வீடுகளை எல்லாம் கடல் மூழ்கடித்திருக்கும்" என்றார். புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் மட்டம் மெள்ளமெள்ள உயர்ந்து கொண்டே போவதால் சென்னை மூழ்கடிக்கப்பட்டு விடும் என்றார்ராபர்ட்.
இது தவிர தமிழ்நாட்டு நிலங்களுக்கு புற்று நோய் வந்து விட்டது என்றும் சொல்லிவிட்டு போயிருக்கிறார் அவர். இது என்ன புது நோய்?

இந்த நிலப்புற்று நோய் பற்றி தெரிந்து கொள்ள எக்ஸனோரா நிர்மலை சந்தித்தது ஜு.விகடன்

"இந்தியாவில் விவசாய நிலங்கள் தொழில் புரட்சி, தொழில் முன்னேற்றம்,சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயர்களால் சூறையாடப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் விவசாய நிலத்தில் 10 சதவீதம் காணாமல் போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலங்களே இருக்காது. இதைத்தான் ராபர்ட் ஸவான்'நிலப்புற்று நோய்' என்கிறார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இணையாக ரியல்எஸ்டேட் மூலமும் விவசாய நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்பொழுது சென்னையை சுற்றியிருக்கும் விளைநிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட்டன. இப்போது அது அடுத்த கட்ட நகரங்களுக்கும் நகர ஆரம்பித்து விட்டது. இதனால் வேலைவாய்ப்பு பெருகும் தான். ஆனால் விவசாயம் இல்லாமல் போய்விடும்.
இதை ஒரளவுக்கு தடுக்கவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும்,விவசாயம் சார்ந்த தொழில்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தவும், உழவனின் மகன் விவசாயம் செய்யவும்,விவசாயம் சாராத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன் விவசாயம் செய்யவும் அரசாங்கம் ஊக்கப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார் நிர்மல்.

எக்ஸனோரா அமைப்பு இப்போது கூட்டுப்பண்ணை விவசாயத்தை பிரபலப்படுத்தி வருகிறது. ஒரு விவசாயி தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கருக்கு தன் மூளையை கசக்கிப் பயிரிட வேண்டும். இதற்கென தனிநபராக பணம் செலவழிப்பதுடன்,விளைந்த பொருள்களை விற்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. சிறிய நிலத்தில் நவீன உத்திகளை பயன்படுத்துவதும், தனிநபருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. அதுவே 10 பேர் தலா 10 ஏக்கர் என்று வாங்கி, மொத்தமாக 100 ஏக்கரில் கூட்டுப்பண்ணை ஆரம்பித்தால்,நவீன விவசாய உத்திகளை கையாள முடியும்.விவசாய ஆலோசனைக்கு சர்வதேச ஆலோசனைக்குழுவை கூட நியமித்துக் கொள்ளலாம்.

தண்ணீரை சேமிக்கும் லேட்டஸ்ட் பாசன வசதிகளை மேம்படுத்தலாம். இப்படி கூட்டு பண்ணையின் மூலம் விவசாயத்தின் மீது இருக்கும் தற்கால நம்பிக்கையின்மையை போக்கி அந்த நிலங்கள் கைமாறி தொழிற்சாலைகளாகவோ, அடுக்குமாடிக்குடியிருப்புகளாகவோ மாறிவிடாமல் தடுப்பதும் நிலப்புற்று நோய்க்கு எதிரான முக்கிய நடவடிக்கைகள். வனவிலங்குகளை பாதுகாக்க அரசு தனித்துறை வைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாய நிலங்களை பாதுகாக்க தனித்துறையோ,தனிச்சட்டங்களோ இல்லை என்பதும் நிலப்புற்று நோய் முற்ற ஒரு காரணம்.

இப்போது நஞ்சை நிலங்களில் தான் பரவலாக வீட்டு மனைகள் போடப்பட்டு வருகின்றன. இதை தடுக்க வேண்டியது மிகவும் அவசரம். நஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக்க தற்போது கிராம நிர்வாக அதிகாரிகள் அளவில் அனுமதி பெற்றாலே போதுமானது. கிராம அளில் இருக்கும் அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட நிலம் நீண்ட நாட்களாக விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது.அந்த நிலத்தில் உழவும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துவிட்டால் வீட்டு மனைகளாக ஆக்க முடியும். இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. இந்த அதிகாரத்தை இனி மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஒரு குழுவிடம் மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் மட்டுமே இது போன்ற விவசாய நிலங்களை 'பண்ணை வீடு' என்ற பெயரில் சிலர் முடக்குவதை தடுக்க முடியும். பல ஏக்கரில் ஒரு பங்களா கட்டி, நீச்சல்குளம் அமைத்து உள்ளே போகும் கரன்சி கர்த்தாக்கள் பிறகு ரிசார்ட்ஸ் என்ற பெயரில் விளைநிலங்களே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

தமிழக அரசு இலவச திட்டங்களில் புதுப்புது சட்டங்களில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மட்டும் செயல்படுத்த முடியவில்லை. காரணம்,தமிழ்நாட்டில் விவசாய நிலம் இல்லவே இல்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டதால் தான். இப்போதே சென்னையை சுற்றிலும் சர்வதேச தொழிற்சாலைகள் வந்து விட்டன.இதற்கே காஞசிபுரம்,திருவள்ளுர் மாவட்டத்தின் முக்கால் வாசி நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு விட்டன. இப்போதும் தினம் தினம் முதல்வரும், துணைமுதல்வரும் புதுப்புது பன்னாட்டு கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள். இந்த நிறுவனஙகளை விவசாய நிலங்கள் குறைவாக உள்ள தர்மபுரி,பெரம்பலூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

மத்திய அரசாங்கம் கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் விவசாயத்தை சாகடிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி,தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை சார்ந்திருக்கும் விவசாயிகளே விவசாயத்தை ஒரம் கட்டிவிட்டு இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு போகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை இல்லாத நாட்களில் தான் தினக்கூலிகளை அழைத்து விவசாயம் செய்கிறார்கள். இதெல்லாம் விவசாயம் அழிவதற்கான கண்கூடு.

நிலப்புற்று நோய்க்கு கடைசி காரணம், பாசனம் இல்லாததும் தான். ஊரில் பெய்யும் மழையை விட்டு விட்டு இன்று கடல்நீரை குடிநீராக்க பல கோடிகளை செலவழிக்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் கொடுத்த பல ஏரிகள் அழிக்கப்பட்டு ஏரி இருந்த இடங்களில் வீடுகள் முளைத்துள்ளன. காஞசிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன ஏரிகளை கணக்கெடுத்தால் தலைசுற்றும்.

விவசாயத்தை பற்றி நினைத்தால் தானே ஏரியையும் பாசனத்தையும் நினைப்பதற்கு!

எனவே, சென்னைவாசிகளுக்கு இனி எதிர்வரும் காலத்தில உணவுகிடைப்பதற்கு மற்ற மாவட்டங்களையோ,மாநிலங்களையோ நம்பி இருப்பார்கள். எளிதில் உணவு கிடைக்காது. காரணம், சென்னையிலும் சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும் விவசாயம் இருக்காது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை சராசரி மக்கள் தொட முடியாததாக இருக்கும். சென்னையில் கடுமையான எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டால் ஏற்படும் வெப்பத்தால் ஏர்கண்டிசன் இல்லாமல் வாழவே முடியாது. முடிவில சென்னை என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதியாக (ராபர்ட் ஸ்வான் சொன்னது போல் கடல் சூழந்து அழிக்காமல் இருந்தால்) மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இன்றைக்கு மதிய சாப்பாடு ஓட்டலில் 75 ரூபாய். இன்னும் சில ஆண்டுகளில் அது 250 ரூபாயாக கூட மாறலாம். அதற்கு மேலும் அதிகமானலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பூமி உருண்டை அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை ரியல்எஸ்டேட் கபாலீஸ்வரர்கள் நினைத்துக் கொண்டால் சரி.

வாருங்கள் பசுமை காப்போம்-எங்கள் நோக்கம்

0 கருத்துகள்

GREEN INDIA FOUNDATION

Vision:

GREEN INDIA with improved Socio-Economic, Environmental and Cultural living of all people of India.

Mission:

• Protection of Eco-system of India
• Keep the forest GREEN and clean
• Promotion of Herbal medicine
• Capacity building for ecological and environmental preservation
• Sensitizing the student community on Eco-system
• Organizing Eco-Tour for students
• Development of Eco-Clubs
• Improving the technical skills of youths to improve their earning capacity
• Promoting the living condition of aged, women, disabled and the destitute
• Providing Legal education to the needy to protect themselves and the environment
• Protecting the rights of the women and Children
• Prevention of Child labor and child abuse
• Prevention of AIDS and Providing medical assistance
GREEN INDIA FOUNDATION

has a vast experience in Promotion of GREEN-MADURAI, by closely associating with other NGOs and Government departments.


Since the inception of GREEN INDIA FOUNDATION we have organized a number of training camps for the students to generate environmental awareness.


Thousands of tree saplings were raised and distributed and planted in and around Madurai.


In order to protect the environment clean and safe, GREEN INDIA FOUNDATION has also initiated a new initiative of promotion of Bio-gas plant in schools, colleges and hostels. Conversion of human waste in to Bio-gas also protects the environment clean and safe!


To “Catch them Young” GREEN INDIA FOUNDATION has organized a number of training programs to the schools and college students on environmental issues.
GREEN INDIA FOUNDATION has adequate working experience with different organizations and institutions on different issues.


GREEN INDIA FOUNDATION also assist those who are willing to protect the environment Green, by providing tree saplings and promoting Nursery gardens.

How you can associate....?

The team of GREEN INDIA FOUNDATION will provide all necessary information to you in order to associate with our GREEN INDIA movement.

GREEN INDIA FOUNDATION can,
• Provide training
• Provide technical support
• Provide Tree saplings
• Construct Bio-gas plant
• Organize work-shops
• Organize Eco-clubs
• Organize Eco-Tours
• Promote alternative health care system
• and much more you want .....

JOIN YOUR HANDS WITH
GREEN INDIA FOUNDATION
treesday@gmail.com

மதுரை மீண்டும் கடம்பவனம் 2020

0 கருத்துகள்தமிழகத்தை பசுமை ஆக்கும் பணியை மதுரையில் இருந்து தொடங்குகிறோம்.
எனவே இங்கே மதுரையின் நிலையை சுட்டிகாட்டி இருக்கிறோம்.


மதுரை...இலக்கியங்களில் கடம்பவனமாக காட்சியளித்த நகர்.இன்றைக்கு காங்கீரிட் கட்டிடங்கள் பெருகி மூச்சு முட்டும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல், தூசி, புகை என்று எங்கும் சுற்றுச்சூழல் மாசு படிந்து காணப்படும் நகர். 
அழகிய மீனாட்சி அம்மன் கோயில் நகருக்கு பெருமை சேர்க்கிறது. ஆனால் வைகை வறண்டு கிடக்கிறது.மரம் வைத்தால் மழை பெய்யும். இது தான் வைகையில் மீண்டும் நீர் பெருக வழி.

மரங்களை நட்டால் மதுரையும் குளிர்ச்சியடையும். குளிர்ச்சியான சுற்றுச்சூழல் மக்களை மனிதர்களாக்கும்.இனிமையான பொழுது அமையும்.வெயிலில் தாக்கத்தால் நொந்து காயும் நிலை இருக்காது.
அந்தக்காலத்து அசோக மன்னர் கூட சாலையின் இருபக்கங்களிலும் மரங்களை நட்டார். ஆனால் இன்றைய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மின்சார வாரியமும் சாலையில் அசைந்தாடி நிழல் தரும் மரங்களை வெட்டித்தள்ளுகிறது.

காரணம் சாலையை அகலப்படுத்தவாம். ஒரு இலை துளிர்க்க ஒரு தாவரத்தினுள் எத்தனை ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது தாவரங்களை நேசிப்பவர்களுக்குத் தான் தெரியும். ஆனால் அரிவாளை எடுத்து ஒரு மரத்தை வெட்டித்தள்ள துளி நேரம் போதுமானதாக இருக்கிறது.

புல் கூட விநாயகருக்கு மாலையாக காப்பாற்ப்பட்டது. வில்வம் சிவனுக்கு ஆனது. துளசி பெருமாளுக்கு உகந்ததானது.மரங்களை காப்பாற்ற வேண்டும என்பதற்காகவே கோயில்களில் மரங்கள் தலவிருட்சங்களாக போற்றப்பட்டன.
மரங்கள் இயற்கையில் மாசுபடும் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு என்ற நச்சு கலந்த வாயுவை உறிஞ்சிக் கொண்டு மனிதன் சுவாசிக்க பிராணவாயுவை வெளிவிடுகிறது. நிழல் தருகிறது. மழை பொழிய குளிர்ச்சியான காற்றை வெளியிட்டு நீரை சுமந்து வரும் மேகக்கூட்டத்தில் மோதி மழை பொழிய வைக்கிறது.
மாதம் மும்மாரி பொழிந்ததா என்று மன்னர்கள் மந்திரி பிரதானிகளிடம் கேட்பார்கள். மழை பெய்தது என்று மந்திரிகள் பதில் சொன்னால் நாட்டு மக்களை பற்றி எதுவும் கேட்க மாட்டார்கள்.காரணம், மழை பெய்தால் மக்கள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது மன்னர்களுக்கு தெரியும். 

இன்றைக்கு நாம் கர்நாடகாவிடமும், ஆந்திராவிடமும் தண்ணீருக்காக கையேந்த வேண்டியிருக்கிறது. மரம் நட்டால் மழை வரும்.நிலம் குளிரும்.நிழல் கிடைக்கும்.ஆதவனின் கொடுமையில் இருந்து மீளலாம்.நிழலில் எங்கும் போய்வரலாம்.மற்ற மாவட்டங்களை விட மதுரை ஒரு முன்னோடியாக இருக்கட்டும் மரங்களை நடுவதில்.

2020 ல் இந்தியா வல்லரசு என்பது அப்துல் கலாம் அவர்களின் கனவு.2020 ல் மதுரை மீண்டும் ஒரு வனமாக கடம்பவனமாக மாறியிருக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. நகருக்குள் நுழைந்தால் கட்டிடங்கள் தெரியக்கூடாது. மரங்கள் தான் இருக்க வேண்டும். மரங்களுக்கு ஊடே தேடும் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்படட்டும்.
மரம் நடுவோம்.மனிதம் காப்போம்.எதிர்கால சந்ததிக்கு தூய்மையான உலகை விட்டுச்செல்வோம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today