நீங்கள் பிறந்த தமிழ் ஆண்டு தெரியுமா? யோகம் காத்திருக்கிறது.இயற்கையை காக்க மரங்களை நடவேண்டும் என்பதை நம் முன்னோர்கள் ஜாதகங்கள் வாயிலாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.இந்த ராசிக்கு,இந்த நட்சத்திரத்துக்கு குறிப்பிட்ட மரத்தை நட வேண்டும் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஜாதகமே இல்லாதவர்கள் எந்த மரத்தை நடுவது? இதற்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் பிறந்த தமிழ் ஆண்டு தெரிந்தால் போதும். அந்த ஆண்டுக்கென்று வகுக்கப்பட்டுள்ள மரத்தை நடலாம் என்கிறார்கள். இப்படி அவரவர் பிறந்த தமிழ் ஆண்டுக்குரிய மரத்தை நட்டால் யோகங்கள் கிடைக்குமாம்.

ஆனால், இப்படி மரம் நடும் முன் சில சடங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, நெல், கோதுமை,பச்சைப்பயறு,துவரை,உளுந்து,மொச்சை,கடலை,எள் ஆகிய 9 தானியங்களை தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு அதை பித்தளை பாத்திரத்திலோ அல்லது மரப்பாத்திரத்திலோ மண்பானையிலலோ ஊற வைத்து அந்த தண்ணீரை நாம் நட்ட மரக்கன்றுக்கு நட்ட அன்றோ அல்லது அடுத்த நாளோ ஊற்ற வேண்டியது முக்கியம். மரத்தை நட்ட பிறகு நாம் ஏற்கனவே தண்ணீரில் இட்டு ஊறவைத்திருந்த நவதானியங்களை எடுத்து பறவைகளுக்கு போட வேண்டும்.

இதற்கு பிறகு வழக்கமாக சாதாரணமாக அந்த மரக்கன்றுக்கு நீர்பாய்ச்சி வரலாம். திருமணமான தம்பதிகள் திருமணம் ஆனவுடனேயே தங்களது ராசிக்கோ அல்லது இப்போது நாம் சொல்லப்போகும் தமிழ் ஆண்டுப்படி அதற்குரிய மரங்களை நட்டால் வாழ்க்கயைில் துன்பங்கள் விலகி நல்ல வாழ்வு பெறலாம் என்கிறது சாத்திரங்கள்.

இனி தமிழ் ஆண்டு படி பிறந்தவர்கள் நடவேண்டிய மரங்களை பார்க்கலாம்.

பிரபவ- கருங்காலி மரம்
விபவ-அக்ரூட்மரம்
சுக்ல-அசோக மரம்
பிரஜோர்பத்தி-பேயத்தி மரம்
ஆங்கீரஸ்- அரசுமரம்
திருமுக-அரைநெல்லி
பவ-அலயாத்தி
யுவ-அழிஞ்சில் மரம்
தாது- ஆச்சாமரம்
ஈஸ்வர-ஆலமரம்
வெகுதான்ய-இலந்தை மரம்
பிரமாதி-தாளைபனைமரம்
விக்ரம-இலுப்பை மரம்
விஷு-ருத்திராட்சம்
சித்ரபானு- எட்டி மரம்
யுவபானு- ஒதியம்
தாரண- கடுக்காய் மரம்
பார்த்திவ- கருங்காலி மரம்
வியய- கருவேலமரம்
சர்வஜித்- பரம்பை மரம்
சர்வதாரி- குல்மோகூர்மரம்
விரோதி- கூந்தல் பனை
விக்ருதி- சரக்கொன்றை
கர- வாகை மரம்
நந்தன- செண்பகம்
விஜய-சந்தனம்
ஜய- சிறுநாகப்பூ
மன்மத- தூங்குமூஞசி மரம்
துன்முகி- நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி- நந்தியாவட்டை
விகாரி- நாவல்
சார்வரி- நுணாமரம்
பிலவ- நெல்லி மரம்
சுபகிருது- பலா மரம்
சோபாகிருது- பவழமல்லி மரம்
குரோதி- புங்கம் மரம்
விசுவாவக- புத்திரசீவிமரம்
பராபவ- புரசுமரம்
பிலவங்க- புளிய மரம்
கீலக- புன்னை மரம்
சவுமிய- பூவரசு மரம்
சாதாரண-மகிழமரம்
விரோதிகிருத- மஞ்ச கடம்பை
பரீதாபி- மராமரம்
பிரமாதீச- மருதமரம்
ஆனந்த-மலைவேம்பு
ராட்சஸ- மாமரம்
நள-முசுக்கொட்டை மரம்
பிங்கள- முந்திரி
காளயுக்தி-கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி -தேவதாரு
ரவுத்ரி- பனை மரம்
துன்மதி-ராமன்சீதா
துந்துபி-மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி-சிம்சுபா
குரோதன-சிவப்புமந்தாரை
அட்சய-வெண்தேக்கு.

9 கருத்துகள்: (+add yours?)

பெயரில்லா சொன்னது…

இந்த மரங்கள் எங்கே கிடைக்கும்

பெயரில்லா சொன்னது…

kothavaal saavadikku poneengana kidaikkum Mr Peyarillaa

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான குறிப்பிற்குப் பாராட்டுக்கள்.

sundararaman சொன்னது…

Migavum arumaiaana thagaval nandri aanaal 1) premadhoodha 2) vilambi mattrum rakthakshi varudathirku uriya marangal ? illaye vidupattu vittatha allathu theria villaye, therinthavar thagal alitthal migavum nandraga irrukkum.

Anathan Perumal சொன்னது…

04/06/1962 02:00 am. Pls give Tamil year date n year

Anathan Perumal சொன்னது…

04/06/1962 02:00 am. Pls give Tamil year date n year

பெயரில்லா சொன்னது…

எனது பிரப்புகுரிய மரமாக ஜாதகத்தில் வில்வம் கூறப்பட்டுள்ளது... அதை இங்கே கூறவே இல்லையே...??????????

Selvan Selvan சொன்னது…

கடம்பு மர கன்று கிடைக்குமா

Selvan Selvan சொன்னது…

கடம்பு மர கன்று கிடைக்குமா

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today