பத்திரிகையாளர்களுக்கு பேனா ஒரு ஆயுதம். பதிவர்களான நமக்கு மொபைல் போன் ... டிராபிக் சாமி...தமிழகத்தின் பொதுப்பிரச்சனை என்றால் கண்டுகொள்ளப்படும் பெயருக்கு சொந்தக்காரர்! தனியாக நின்று பல பொதுப்பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மக்களின் பிரச்சனைகள் தீர வழிவகுத்த ஒருவர். நாமும் நாள் தோறும் பல இடங்களுக்கு செல்கிறோம்.

அங்கெல்லாம் பொதுநலனுக்கு மாறாக எத்தனையோ விடயங்கள் கண்ணில் தட்டுப்பட்டும வழக்கம் போல் 'உச்' கொட்டி விட்டு வந்து விடுகின்றோம்.இது போன்ற பிரச்சனைகளுக்கு நம்மால் வழக்கு தொடுத்து தீர்வு காண முடியவில்லை என்றாலும், இங்கு அந்த காட்சிகளை பதிவாக்கி வைக்கலாமே என்ற ஒரு நோக்கத்தோடு இந்த முயற்சி. கை கொடுங்கள் நண்பர்களே!

உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் மிகவும் விவாதிக்கப்படும் பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது. தொழில்மயம் ஆக்கலில் இது போன்ற பிரச்சனைகள் இயல்பு தானே என்றெல்லாம் பேசப்பட்டு வந்த காலம் கடந்து வருகிறது. மாற்றங்கள் மனிதனை உயர்த்துவதை விட, மனிதனுக்கே எதிராக மாறி வருவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவிட்டிருக்கிறது. மனிதர்களை கழிவுச்சாக்கடைக்குள் இநங்கி சுத்தம் செய்வதை அனுமதிக்க கூடாது என்பதே அந்த உத்தரவு.

ஆனால் இது எந்த அளவில் கடைபிடிப்ப பட போகிறது என்று தெரியவில்லை. இப்படி கடைபிடிக்காமல் போனதால் நாம் இழந்து வருவது ஏராளம்.
வானை முட்டும் செல்போன் டவர்களால் இன்றைக்கு நகரத்தில் நாட்டுக்குருவிகளை காண முடியவில்லை. காணும் நிலங்கள் எல்லாம் நமக்கே சொந்தம் என்று நினைத்த சிலரால், ஆங்காங்கே இருந்த கண்மாய்கள்,குளங்கள் எல்லாம் கட்டிடங்களாக ஆகிவிட்டன. யார் எப்படி போனால் என்ன என்று கருதும் சிலர் ரோடுகளிலும், தெருக்களிலும் குப்பைகளை கொட்டி நாறடித்து நோயை பரப்பி விடுகிறார்கள்.

இது போல்,
 • ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் அரசின் வாகனங்கள் அடுத்தவருக்கு ஆஸ்துமா வரும் அளவு புகை கக்குவது,
 • மாநகராட்சி குப்பை வண்டியே குப்பைகளை ரோட்டில் வாரிவிட்டு செல்வது,
 • குண்டு பல்புகளை நீக்குங்கள் என்று சொல்லும் அரசு அலுவலகங்களில் பகல் வேளைகளில் கொளுந்து விட்டு எரியும் பல்புகள்,
 • மரம் நீங்கள் வளர்த்தால்..மரம் உங்களை வளர்க்கும் என்று சொல்லும் அரசு..ஆனால் மரத்தை வெட்டும் அரசு ஊழியர்கள்,
 • மருத்துமனைக்கு பக்கத்தில் மயானம் போல் சுண்ணாம்பு காளவாசல்,
 • தண்ணீரை பழித்தால் தாயை பழிப்பது போல் என்றாலும், ஆற்றில் மலக்கழிவு, இறைச்சிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் கழிவுகள்,
 • சினிமா போஸ்டரை மேயும் மாடுகள்,
 • நிலத்தடி நீரை சேமிப்போம் என்று அரசு கூறினாலும், தெருக்குழாயில் திருகு இல்லாமல் வீணாக ஓடும் குடிநீர்,
 • கழிப்பிடம் இல்லாமல் ரோடுகளில் சிறுநீர் கழிக்கும் மனிதர்கள்,
 • சாக்கடை குளமாக தேங்கிக் கிடக்கின்ற இடத்தில், நல்ல குடிதண்ணீருக்காக தெருக்குழாயில் மல்லுக்கட்டும் மக்கள்,
 • ஆட்டோக்களில் ஆடு,மாடுகள் போல் திணிக்கப்பட்ட மக்கள் கூட்டம்,
 • குப்பை மேட்டுக்கு அருகில் காய்கறி சந்தை
 • ஒட்டு மொத்தத்தில் இவை அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் சுகாதாரக் கேடு. மனிதருக்கும் கேடு.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சொல்வதுடன் நின்று விடக்கூடாதல்லவா....


போகிற போக்கில் உங்கள் மொபைல் போனில் இந்தக்காட்சிகளை எல்லாம் புகைப்படமாக எடுங்கள்,
அப்படியே treesday@gmail.com க்கு அனுப்புங்கள். நம் பல்வேறு மாவட்ட பதிவர்களின் புகைப்படங்கள் எல்லாம் ஒரு இடத்தில் குவியட்டும். அதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு அனுப்புவோம், தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன்!

ஆக,பத்திரிகையாளர்களுக்கு பேனா ஒரு ஆயுதம். பதிவர்களான நமக்கு மொபைல் போன் ஒரு கருவியாக இருக்கட்டுமே!
நீங்கள் எடுத்த புகைப்படங்களுடன் உங்கள் பெயர், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், எடுத்த நாள், நேரம் உள்பட விவரங்களை அனுப்புவது சிறப்பு.

1 கருத்துகள்: (+add yours?)

டி.சாய் சொன்னது…

நாட்டுகுடுவி அருகிப்போனதற்கும்? செல்போன் கோபுரங்களுக்கும் என்ன தொடர்பு?

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today