உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

ந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

 சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்து என்று பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

'ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.

4 கருத்துகள்: (+add yours?)

sanmugakumar007 சொன்னது…

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு

இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

sargunam.m சொன்னது…

sir, this is a useful information.
my blood group is o negative. let me know which type is suitable for me

Sathish Kumar P சொன்னது…

Only for Blood type B:

Foods to Avoid/தவிர்க்க வேண்டியவை

1 Corn சோளம்
2 Wheat கோதுமை
3 Sesame எள்ளு
4 Peanut வேர்க்கடலை
5 Garbanzo/Chickpea கொண்டைக்கடலை
6 Tomato தக்காளி
7 Ketchup சாஸ் / கெட்சப்
8 Lentils "பயறு/அவரையினம்/பருப்பு வகை"
9 Coconut தேங்காய்
10 Pomegranate மாதுளை
11 Pasta பாஸ்தா
12 Bread ரொட்டி
13 Chicken கோழி
14 Avocado வெண்ணெய் பழம்
15 Pumpkin பூசணிக்காய்
16 Black Beans கருப்பு பீன்ஸ்
17 Brandy பிராந்தி
18 Whiskey விஸ்கி
19 Rum ரம்
20 Gin ஜின்
21 Vodka ஓட்காFoods to Eat More/அதிகம் சாப்பிட வேண்டியவை

1 Goat ஆடு
2 Lamb ஆட்டுக்குட்டி
3 Rabbit முயல்
4 Venison மான் கறி
5 Yogurt தயிர்
6 Egg முட்டை
7 Cheese பாலாடைக்கட்டி
8 Low Fat Milk குறைந்த கொழுப்பு பால்
9 Oats ஓட்ஸ்
10 Rice அரிசி
11 Pepper Mint புதினா
12 Ginger இஞ்சி
13 Ginseng ஒரு வகை மருந்து வேர்
14 Sage - உணவுக்கு மணமூட்டப் பயன்படுத்தும் தோட்டச் செடி
15 Raspberry Leaf Tea
16 Pineapple Juice அன்னாசி
17 Grape Juice திராட்சை
18 Cranberries Juice குருதிநெல்லி
19 Broccoli ப்ரோக்கோலி
20 Cabbage முட்டைக்கோஸ்
21 Brussels Sprout முளைப்பயிர்
22 Kale
23 Collard Greens
24 Beets கிழங்குவகை
25 Yams வள்ளிக் கிழங்கு
26 Sweet Potatoes
27 Carrots கேரட்
28 Parsnips
29 Red Peppers/Cayenne Pepper மிளகு
30 Salmon Fish சால்மன் மீன்
31 Cod Fish பண்ணா மீன்
32 Halibut Fish போதா மீன்
33 Mackerel Fish காணாங்கெளுத்தி
34 Sole Fish Naaku Meen, Virahi,
35 Flounder Fish
36 sardines Fish மத்தி மீன்

Those which are not mentioned above are neutral for B positive
all these are only for B-positive Blood Group,
I have searched so many websites/libraries and had the list finally,
but this is also only about 95-98 percent accurate, coz, Some people say milk cannot consume, but most say Low fat milk is very useful for B-Type, most of the Tamil websites/blogs are not correct,

Thanks
Sathish Kumar - B.E., M.B.A.,
Working as Project Engineer - Electrical in Singapore

vijay prakash சொன்னது…

ஐயா, வணக்கம் நான் "B" possitive இரத்த வகையைக் கொண்டவன் நான் புரத சத்திற்காகவும் கால்சியத்திற்காககவும் எந்த வகையான உணவை உட்கொள்ளலாம்

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today