ஜனாதிபதியை மின்னஞ்சல் மூலம் நேரடி தொடர்பு கொள்ள வாருங்கள் பதிவர்களே!

2 கருத்துகள்

தொடுக்க கொம்பின்றி வாடிய முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னன், முற்றத்துக்கு வந்த குருவிக்கு தனக்கு வயிறுகாய்ந்த போதிலும் எடுத்து தூவி அவை தின்பதை அழகு பார்த்த பாரதி ...இவர்கள் இருந்த நாட்டில் இன்றைக்கு?
வயிற்று பிழைப்புக்காக கடலை நம்பி, 'போனால் திரும்புவோமா கரைக்கு' என்று தெரியாத நிலையில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை குருவிகளை சுடுவது போல் சுட்டு தள்ளுகிறது. இலங்கை கடற்படை சுடுவதும், மீனுக்கு பதிலாக தனது சகமீனவனின் உடலுடன் மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்புவதும் வழக்கமாகவே ஆகிவிட்டது.
 தமிழக முதலமைச்சர் கருணாநிதி' எல்லை தாண்டி மீன்பிடிக்க போனால் விளைவுகளை சந்திக்க தான் வேண்டுமென்று' ஏற்கனவே சொல்லியிருக்கிறார். எல்லை தாண்டி போனால் மீனவர்களை காப்பாற்ற முடியாது என்கிறார் வெளியுறவு துறை மகாராஜா எஸ்.எம்.கிருஷ்ணா. நாளைக்கே ஒரு தூதரை அனுப்பி ராசபக்சேவிடம் பேச சொல்கிறேன் என்கிறார் மன்மோகன் சிங். இந்த கட்டத்தில் பாரதியின் பாடல் தான் நம் செவிகளில் ஒளிக்கிறது
" நெஞ்சி லுரமுன்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்திற் கூடிநின்று
கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ-கிளியே
நாளில் மறப்பாரடீ

சொந்த அரசும் புவிச்
சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குணடாகுமோ?கிளியே
அலிகளுக் கின்பமுண்டோ?

அச்சமும் பேடிமையும்
அடிமைச்சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே

சொந்த சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை யிரங்காரடீ-கிளியே
செம்மை மறந்தாரடீ"

பதிவர்களே! உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து இந்திய ஜனாதிபதிக்கு மீனவர் பிரச்சினை பற்றி தெரிவியுங்கள். உங்கள் வசதிக்காகபதிவர் நீச்சல்காரன் பதிவிட்ட ஒரு கடித நகலை இங்கு இணைத்திருக்கிறேன்.இதை கோப்பி.பேஸ்ட் செய்து விடலாம்.
ஜனாதிபதியை இந்த மெயில் மூலம் நேரடி தொடர்பு கொள்ளலாம்.
உங்கள்  குறையை தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது (status) பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.


http://helpline.rb.nic.in/GrievanceNew.aspx

The Honourable
President of India

SUBJECT: Save Tamil Nadu fishermen

Fishermen of India are frequently killed, attacked and their fishing boats and their launches are confiscated by naval forces of Sri Lanka. Recently we have lost around 539 fishermen with least cost around Tamil Nadu coastal region. Enormous life and economic loss to the fishing communities particularly in Nagapatnam district leads to set emotions run high against Sri Lanka in the state. Coastal region of Tamilnadu stays with fear of life on every fishermen's family. We trust Indian force have tackled such issues successfully with Pakistan and Bangladesh in past years. Here we need such potent solution to remove such loss of Tamilnadu fishermen.

Here we from India and across the globe need such demands immediately:

Warn SriLankan government to stop attacking Indian fishermen. In our opinion, fishermen have right to fish in sea regardless of international boundaries

Ensure adequate patrolling of Palk Straits by Indian Navy to provide protection to Tamil Nadu fishermen and their properties

Katchatheevu should be returned to Indian sovereignty from Sri Lanka which is an important landing point for Tamil Nadu fishermen in their day to day fishing activities.If both the governments want to share katchatheevu as a common heritage ,then IMLB should be made flexible and the fishermen from both the sides should be allowed to fish freely.One more violation of the pact,India should consider cancelling its bilateral ties if it cares about its citizens and go to International court of justice.
Sincerely,

காணாமல் போன மண்வெட்டியை தேடுகிறோம் .......

1 கருத்துகள்2008...மழைக்காலம். காவிரி பாசனப்பகுதி விவசாயிகளுக்கு அது போதாத காலம். காவிரி ஆறு 36 பிரிவுகளாகவும், 1505 வாய்க்கால்களுமாக பிரிந்து வெள்ளத்தை சுமந்து சென்றது. பொன் விளைந்தது போல நெல் விளையும் பூமி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
23.11.08 அன்று தொடங்கிய நிஷா புயல் 1.12.08 வரை வாட்டி வதக்கியது. தமிழகத்தில் சராசரி மழையளவு 900 மி.மீ. ஆனால் நவம்பர் 23 ஆம் தேதி மட்டும் இரவு பகலாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை மட்டும் 494 மி.மீட்டர். அதற்கடுத்த நாள் பெய்த மழை அளவு 694 மி.மீட்டர்.
இப்படி அடித்து பெய்த மழையில் வீடுகள் இடிந்தன.

நாட்டு மக்களுக்கு உணவளிக்க வேண்டிய விவசாயிகள் சுமார் 200 பேர் உயிர் இழந்தார்கள். சென்னையில் டிசம்பர் 9 ம் திகதி வரை மழை நீடித்தது. 15.12.08 மீண்டும் ஒரு புயல் தாக்கியது. சேதம் 3789 கோடி என்று அரசு கணித்தது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லாம் அதிக சேதப்பட்டியலில் இருந்தன.

இங்கிருந்த ஆறுகளும், ஏரி, குளங்களும் கரை உடைந்து வெள்ளச்சேதத்தை பெரிதாக்கின. மூன்று ஆறுகள் கரை உடைந்து ஒன்று சேர்ந்து திரிவேணி சங்கமம் போல் வெள்ளப்பெருக்காக மாறியதால் பட்டுக்கோட்டை வட்டாரம் துண்டிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு தீவாக மாறியது. மூன்று லட்சம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போயின. இதற்கெல்லாம் அரசாங்கம் ஒரு இழப்பீடு கணக்கை போட்டு சில ஆயிரம் கோடிகளை கணக்கு காட்டியது.

உழவர்கள் உழைத்து பாடுபட்டு சாகுபடி செய்யவிருந்த பயிர்கள் எல்லாம் போனதால் இழப்பு விவசாயிக்கு மட்டுமல்ல. இந்த மாநிலத்துக்கும் தான். அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் நெல்லின் பெரும் பகுதியை விளைவிப்பது மேலே சொன்ன ஆறு மாவட்டங்கள் தான். இந்த ஆறு மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளானதால் கிட்டத்தட்ட 10 லட்சம் டன் நெல்வரவு பாதிப்புக்குள்ளானது.

வெள்ளமும், வறட்சியும் நாட்டில் மாறி மாறி வருகிறது. வடமாநிலங்களில் வறட்சி ஏற்படும் போது தென்மாநிலங்களில் பல உயிர்களை காவு கொள்கிறது. வடமாநிலங்களில் மழை கொட்டும் போது தென்மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. ஆக இந்த நிகழ்வுகளை எல்லாம்  அலசிப்பார்த்திருந்தால், கொட்டும் மழை மக்களுக்கு பாதிப்பில்லாமல் வழிந்து ஓட, அல்லது தேக்கி வைத்து பயன்படுத்த வழி கண்டுபிடித்திருக்க முடியும்.

 விவசாயிகளின் நலனையும், மக்களின் உணவுக்கான பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு இயற்கை சீற்றங்கள் பாதிக்காத படி சரியான வழிமுறையை இனியாவது கண்டுபிடிக்க வேண்டும்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்வது போல் ' நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அனைத்துக் காலி இடங்களும் மூன்றாக பிரிக்கப்பட வேண்டும். ஒரு பகுதி மரம் வளர்த்து காடாக்கப்பட வேண்டும். இரண்டாவது பகுதி மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட வேண்டும். மூன்றாவது பகுதி ஏரி அல்லது குளமாக மாற்றப்பட வேண்டும்' என்கிறார். ஆக. இதில் கவனித்தீர்களா..மரம் வளர்த்து காடாக்கப்பட்டால் எரிபொருள் ஏராளமாக கிடைக்கும். மழை வரும். அந்தப்பகுதியில் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். மற்றொரு பகுதி மேய்ச்சல் காடாக்கப்பட்டால், தீவன மரங்களை ஏராளமாக வளர்க்கலாம். புல் வளர்க்கலாம். இதனால் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் பெருகும். பால், தோல் என்று எல்லாம் கிடைக்கும்.

மூன்றாவது இருக்கும் பகுதியை ஏரியாகவோ, குளமாகவோ மாற்றினால் தண்ணீரை தேக்கலாம். இப்படி தண்ணீரை தேக்கும் போது கிராமத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். நீர்மட்டம் உயர்ந்தால் மழைக்காக வானத்தை நம்பி இருக்க வேண்டாம். ஆண்டு முழுவதும் விவசாயம் பண்ணலாம். இப்படியே இந்த குளத்தில் மீன்வளர்த்தால் உள்நாட்டு மீன் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். மூன்றே மூன்று வரிகளில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழியை சொல்லி விட்டார் இவர்.

அந்தக்கால மன்னர்கள் படித்திருக்கவில்லை. ஆனால் தாங்கள் ஆட்சி செய்த இடங்களில் ஏராளமான ஏரி,குளங்கள், கண்மாய்களையும் வெட்டினார்கள். இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் 39,000 ஏரிகளும் பல்லவர்கள், சோழர்கள் ஆகிய மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டவை தான்

நீரை தேக்கி நெல் விளைவித்து மக்களின் பசியை போக்க மன்னர்கள் வெட்டி வைத்து விட்டு போன ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் அந்த மன்னர்களின் காலத்திற்கு பிறகு மண்வெட்டியை பார்க்கவே இல்லை என்பது தான் இன்றைக்கு இருக்கும் நேர்மையான என்ஜினியர்களின் ஆதங்கம். இவர்கள் ஆதங்கப்பட்டு என்ன ஆகப்போகிறது. குளங்களுக்கும், ஏரிகளுக்கும், கண்மாய்களுக்கும் தூர்வார மண்வெட்டி போக வேண்டுமென்றால் அதற்கு நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள் அல்லவா திட்டம் போட்டு நிதி ஒதுக்க வேண்டும்.

தொலைத்து போன மண்வெட்டிகளை தேட முயல்வோம்!

தமிழக முதல்வருக்கு பனை மரம் அனுப்பும் கடிதம்...

4 கருத்துகள்ஐயா வணக்கம். என்னை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்கிறேன். காரணம், குமரியில் வானுயர சிலை அமைத்தீர்களே வள்ளுவர் அவர் என்ன சொன்னார் தெரியுமா?

" செம்பொருள் கண்டார்- என்றும்
ஞாலத்து அறம்பொருள் கண்டார்"

இதன் மறைமுக பொருள்,
" தத்துவ ஞானிகள் ( நமக்கும் மற்றவருக்கும் புலப்படாத ஒரு உண்மையை கண்டுபிடித்துக் கூறுபவர்கள்) தாம் தத்துவ ஞானிகள். இன்னும் விளக்கமாக சொன்னால்...திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சியர்  என்றும் இவர்களை சொல்லலாம்.  தத்துவஞானிகள் என்பவர்கள் உடல், உயிர்,இயக்கம்,பொருள், உலகம், சமுதாயம்,பிரபஞ்சம் ஆகியவற்றின் உண்மை நிலைகளையும், இவற்றிற்குள்ள தொடர்புகளையும், உறவுகளையும் ஆய்பவர்களே .


1724 ல் நவீன ஐரோப்பிய தத்துவ இயலின் தந்தையான இமானுவேல் கான்ட் என்பவர் இருந்தார். இவருக்கு அறிவியலை பற்றி தெரியாது. இவர் ஒரு தத்துவஞானி. இவர் என்ன சொன்னார் தெரியுமா? இந்த உலகமும், சூரியன் போன்ற கோள்களும் வானமண்டலத்திலுள்ள கடின வெண்மேகத்திலிருந்து (NEBULAR) உருவாகி இருக்கலாம் என்றார்.

பிற்காலத்தில் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளும் வானியல் நிபுணர்களும் அறிவியல் அடிப்படையில் இமானுவேல் கான்ட் சொன்னதை உண்மை என்று உறுதி செய்தனர். இதில் பிறந்தது தான் (NEBULAR HYPOTHESIS). அதாவது ஒரு மிகப்பெரிய அறிவியல் இயக்கத்தை அறிவியலே படிக்காத ஒரு தத்துவ மேதை எளிதாக சொல்லி விட்டிருக்கிறார்.

தத்துவஞானிகள் எப்போதும் இந்த உலகத்தின் நன்மைக்காக சிந்தித்த காரணத்தால் பிரபஞ்சம் அவர்களுக்கு எளிதாக புரிந்து போனது. இப்படிப்பட்ட அரிய ஆற்றல் பெற்ற தத்துவஞானிகள் தான் ஒவ்வொரு நாட்டையும் ஆளவேண்டும் என்று பிளாடடோ சொல்லியிருக்கிறார். 

ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன என்பது உங்களுக்கே தெரியும். தமிழர்கள் ரசாயன மதுவை  குடித்து குடித்து வயிறு புண்ணாகி வருகிறார்கள். ஆனால் தமிழர்களின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டான என்னை மறந்து போனதால் நானும் தமிழ்நாட்டை விட்டு மறைந்து வருகிறேன். இனி என்னை பற்றி விரிவாக உங்களுக்கு சொல்கிறேன். இதற்கு பிறகாவது நீங்கள் என்னை  காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

என் பெயர் 'பனைமரம்' என்பார்கள் தமிழர்கள்.  தமிழ் இலக்கியங்களில் என்னை பற்றி இருக்கும் வேறு பெயர்களை சொல்கிறேன்.

எனக்கு ' ஓடகம், தாலம், கரும்புறம், காமம்,பெண்ணை, போந்து, புற்பதி,புற்றாளி,தாளி,தருவிராகன் என்று பல பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் எனது தாவர பெயர் (borassus flabellifer). எனக்கு உங்கள் டாஸ்மாக் சரக்கு போல் இல்லாமல் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் என்னை தமிழர்கள் கற்பக விருட்சம் என்றார்கள். கூடவே எனது பதனீருக்கு பத்ரகாளியம்மன் அமுதம் என்றார்கள். கடுமையான வெயில் காலத்தில் நான் காய்ந்து போக கூடாது என்பதற்காக பானையில் தண்ணீர் சுமந்து என்னை காப்பாற்றினார்கள் தமிழர்கள்.

திருவள்ளுவருக்கு எழுத ஓலை தொடங்கி தமிழ்மக்களுக்கு கல்கண்டு, கருப்பட்டி, கட்டில், சொளவு, வீடு வேய தட்டி என்று எல்லாமும் நான் தான். வான் நோக்கி உயர்ந்து சென்று மழையை வரவழைக்கும் ஆற்றல் எனக்குண்டு. இப்போது ஓசேன் படலம் ஓட்டை விழுந்து விட்டது என்கிறார்களே....என்னை நீங்கள் காப்பாற்றினால் ஓசேன் படலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் பார்த்துக் கொள்வேன்.

இப்போது கிடைக்கும் பிராந்தி, விஸ்கி,ரம்கள் எல்லாம் தமிழர்களின் குடலில் புற்றுநோயையும், புண்ணையும் வரவழைகிறது.ஆனால், எனது பனஞ்சாற்றால் உடலுக்கு என்ன நல்லது கிடைக்கும் பனங்கள் உண்டால் எப்படி போதை கிடைக்கும் என்று என்னை பற்றி தெரிந்த சித்தர்கள் எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

" பனஞ்சாறு, பனங்கள் அல்லது பதநீர் அருந்த உடலின் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பெருகும். ஆரோக்கியத்தை தரும். மலச்சிக்கல் தீரும். மேகவெட்டை (gonnorrhoea). பெருங்கிரந்தி (syphilis) நோய்க்கு நல்லது. பனஞ்சாற்றை தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குணமாகும்.

உடலின் உட்சூடு தணியும். வெயில் காலத்தில் பதநீரை சாப்பிட கபம், நாள்பட்ட இருமல், குன்மம், தொண்டை நோய், தோல் நோய்கள் குணமாகும். சோகை தீரும். அம்மை நோயினால் ஏற்பட்ட வெப்பம் தீரும். இப்படி ஏராளமாக சொல்லியிருக்கிறார்கள்.

பனங்கள்ளை உண்டால் போதையும் மயக்கமும் உண்டாகும். நடைதளரும்.மந்தம் உண்டாகும். மதியை மயக்கும்.(இதெல்லாம் எனக்கு இருக்கும் கெட்ட குணங்கள் தான். நான் இல்லையென்று சொல்லவில்லை)
ஆனால்  கள்ள சாரயத்தை விட, 48 சதவீதம் ஆல்கஹால் கலந்த டாஸ்மாக் சரக்குகளை விடவா கெடுதல் செய்து விடப் போகிறேன்?

என்னை நம்பி தமிழ்நாட்டின் கிராமங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்போது என்னில் இருந்து பதநீரை கூட இறக்குவதில்லை. காரணம், கள் இறக்க போவதாக சொல்லி  காவலாளிகள் கைது செய்து வழக்கு போட்டு விடுகிறார்கள். சிவகிரி தாலுகாவில் நூற்றுக்கணக்கான பனை ஏறும் தொழிலாளர்கள் மீது இப்படி  வழக்கு புனையப்பட்டதால் அவர்களது அரை வயிற்று கஞ்சிக்கும் இப்போது அடிவிழுந்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.

பனையால் தொழில் செய்ய கூடாது என்று தமிழர்களை நீங்கள் தடுத்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தின் பல கிராமங்களில் பசியும்,பஞ்சமும் பரவலாக வரத்தான் போகிறது. வறுமை பட்டியல் நீளத்தான் போகிறது.

உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். பிராந்தி, விஸ்கி, பீர்களை விட நான் ஒன்றும் தமிழர்களுக்கு கெடுதல் செய்வதில்லை. இதை விஞ்ஞானிகளும் என்னை சோதனை செய்து பார்த்து நிரூபித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது, பதனீர் இறக்குவதை தடை செய்வது, பனைத்தொழிலாளர்கள் மீது  வழக்கு போடுவது, அவர்களின் குடும்பங்களை பட்டினி போடுவது நியாயம் இல்லை.

இந்தாருங்கள் கல்கண்டு. நீண்ட நேரம் படித்த களைப்பு நீங்க கொஞ்சம் பதனீர் தருகிறேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிந்தியுங்கள் ! ஐயா என்னால் எப்படி வருமானம் வரும் என்று சொல்கிறேன்

திண்டிவனத்திலிருந்து குச்சிக் கொளத்தூர் செல்லும் வழியில் என்னை நட்டிருக்கிறார்கள். ஏரிக்கரையில் வளர்க்கப்பட்டுள்ள என்னால் அந்த கிராமத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வருவாய் கிடைக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் என்னால் தரப்படும் நுங்குகளால் 50 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

இதை உங்கள் பனை தொழில் வாரியத்தில் கேட்டுபாருங்கள். இப்படி என்னை தமிழகம் எங்கும் உள்ள ஆறுகள், தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள், குளக்கரைகளில் வளர்த்தால் என்னால் 40 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் (டாஸ்மாக் வருமானத்தை விட அதிகம்) கிடைக்கும்.

நான் சொல்லும் இந்த கணக்கு மிகை அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால் பனைவாரியத்தில் நல்ல வேளாண்மை அதிகாரிகளையும், விஞ்ஞானியையும்  நியமித்து என்னை வளர்க்க வேண்டிய திட்டங்களை தீட்டுங்கள்.

இப்படிக்கு
பனைமரம் என்ற பரிதாபமாக நிற்கும் தமிழர் அடையாளம்.

இது உப்பு பெறாத விஷயம் என்று இனி சொல்லாதீர்கள்

4 கருத்துகள்

.

யோடைஸ்டு சால்ட்- அதாவது அயோடின் கலந்த உப்பு. இதைத்தான் நாம் உணவு சமைக்க பயன்படுத்தி வருகிறோம். கடலில் இருந்து எடுக்கப்பட்டு பின் தொழிற்சாலைகளில் வைத்து அயோடின் என்ற திரவம் கலக்கப்பட்டு வரும் இந்த உப்பு தான் நமது உடலுக்கு உகந்ததா? நிச்சயமாக இது நூறு சதவீதம் சரியென்று சொல்லி விட முடியாது. இதில் இந்துப்பு (Halite or Rock Salt)தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. ஆக..இனி இந்துப்பை பற்றி பார்க்கும் முன்பு பொதுவாக உப்பு பற்றிய செய்திகளை இங்கு தருகிறேன்.
உப்பு வந்த கதை
மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிட கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ,அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாக கொண்டவை என்கிறார்கள்.
இப்படி உப்புக்கு பெரிய வரலாறு இருக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. உப்பை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் பயன்படுத்தி வந்ததாக சான்றுகள் இருக்கின்றன. எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்கியிருக்கிறது. காரணம், எகிப்தியர்கள் சகாரா பாலைவனத்திலிருந்த உப்பை வெட்டி எடுத்து ஒட்டகத்தின் மேல் ஏற்றி வந்து சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் விற்பனை செய்து செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட The Book Of Job என்ற நூலில் உப்பை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பைபிளில் உப்பை பற்றி 30 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பை நேர்மைக்கும், நீதிக்கும் ஒரு அடையாள சின்னமாக அதில் குறிக்கப்படுகிறது. இந்துக்களிடம் கூட சத்தியத்தை உறுதி செய்ய உப்பின் மேல் சத்தியம் பெறும் வழக்கம் இருக்கிறது.
இப்படி பல நாடுகளிலும் உப்புக்கு இருக்கும் வரலாற்றை பல நூறு பக்கங்களுக்கு சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இந்தியாவில் கிடைக்கும் உப்பையும், குறிப்பாக இந்துப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் உப்பு
இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியரின் அமைச்சரவையில் இருந்த கெளடியல்யர் அர்த்த சாஸ்திரத்தை எழுதி புகழ் பெற்றார். இவருக்கு சாணக்கியர் என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் இந்தியாவில் கிடைக்கும் பல வகை உப்புக்களை பற்றி அவர் எழுதியிருக்கிறார். நாம் இங்கு சொல்ல வந்த "சைந்தவா" என்று அழைக்கப்படும் இந்துப்பு சிந்து மாகாணத்தில் கிடைப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

இது தவிர, "சமுத்ரா" அதாவது கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, "உத்பேஜா" அல்லது உப்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும் ஒரு உப்பு, "ரோமகா" உறைந்து படிவங்களாக கிடக்கும் உப்பு, "ஒளத்பிதா" என்று ஒரு உப்பு. இப்படி 5 வகை உப்புகள் இந்திய நாட்டில் கிடைப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த உப்பானது பாறை போலவும், படிகங்களாகவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் இருந்து வந்துள்ளது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த இந்துப்பை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் எடுத்து மேலே கொண்டு வருவார்கள். இந்தியாவில் இமாசலபிரதேசத்தில் மன்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்தாலும் இந்துப்பு பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
சாதாரண (கடல்) உப்பின் நன்மையும், கெடுதலும்
இந்துப்பு பற்றி எனக்கு தெரிந்த சித்த மருத்துவர்களிடம் நான் கேட்டு தெரிந்துள்ளதை விட "தினமணி" ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையை இங்கு தருகிறேன்.

கேள்வி: என் வீட்டு சமையலில் உப்பை சரியான அளவில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அதன் அளவு போதாது என்று கூறி அதிகமான உப்பு போட்டு சாப்பிடுகிறேன். இது எனக்கு கேட்டை விளைவிக்குமா?
ராஜேந்திரன், புதுச்சேரி.
பதில்: தண்ணீரிலிருந்து தான் சுவை தோன்றுகிறது. அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள். வருடம் என்ற காலம், ஆறு பருவங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்சமகா பூதங்களான நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றின் குணங்களின் ஏற்றத்தாழ்வினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த சுவையாக தோற்றம் அடைகிறது.
நீர் மற்றும் நெருப்பின் அதிக சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு, உப்புச்சுவை உமிழ்நீரை பெருக செய்யும் தன்மை கொண்டது. உணவிற்கு சுவையூட்டுகிறது. அதிக சேர்க்கை தொண்டையையும், தாடைகளையும் எரிக்கிறது. உங்களை பொறுத்த வரை உப்புச்சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை, உடலின் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
உப்பு சரியான அளவில் சேர்க்கும் போது, பசித்தீயை தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது. உண்ட உணவை சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களை சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரந்து பரவும் திறன் உடையது. உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளை சுத்தப்படுத்திவிடும். ஊடுருவும் தன்மையும், சூடான வீரியமும் உள்ள உப்புச்சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் இந்த உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் தலைவழுக்கை, நாவறட்சி,உடல் எரிச்சல், வீக்கம், இசிவு எனும் கைகால்களில் உண்டாகும் வலிப்பு நோய், பித்தம் ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பித்த நோய் போன்றவை உருவாகும்.இவை எல்லாம் சாதாரண உப்பில் உண்டாகும் கேடுகள்.

இந்துப்பு
ஆனால் மனிதன் பயன்படுத்த தக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
 • இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
 • ஆண்மையை வளர்ப்பது.
 • மனதிற்கு நல்லது.
 • வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.
 • இலேசானது.
 • சிறிதளவு உஷ்ணமுள்ளது.
 • கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.
 • எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் பயன்படுத்துங்கள். இன்றைக்கு அயோடின் கலந்த உப்பின் தேவையும் உடலுக்கு தேவை என்பதால் அத்துடன் இந்துப்பையும் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி அவர் பதிலளித்திருக்கிறார்.
இந்துப்பு பொதுவாக நாட்டுமருந்துக்கடைகளில்.காதி கிராப்ட்டில் கிடைக்கும். தூத்துக்குடியிலிருந்து சிலர் இந்த இந்துப்பை வாங்கி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆகவே நண்பர்களே, இனி இந்துப்பை வாங்கி பயன்படுத்துவோம். உடலுக்கு மிகவும் நல்லது. எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும். கால்.கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள்," உப்பை குறைங்க" என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை.


இந்துப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியாவில் பாருங்கள்

இந்திய ஏழைகளே, நடுத்தரவர்க்கமே .........

7 கருத்துகள்

என்டோசல்பானை தடை செய்ய கேட்டு விடுக்கப்பட்டுள்ள போஸ்டர்
poster by- pesticide action network asia and pacific 
ண்டோசல்பான்-பொதிகை தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு தோன்றும் விவசாய அதிகாரிகள் 'கத்திரிக்காயில் தோன்றும் காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தவும், பருத்தியில் இலைசுருட்டுப்புழு தாக்காமல் தடுத்து மகசூலை பெறவும் விவசாயிகள் எண்டோசல்பானை பயன்படுத்தி லாபம் பெறுமாறு ' இந்த மருந்தை பயன்படுத்த சொல்லி விவசாயிகளை கேட்டுக்கொள்வார்கள். விவசாயியும் எண்டோசல்பானை செடிகளுக்கு தெளித்து கத்தரிக்காயையும், பருத்தியையும் புழுக்களிடமிருந்து காப்பாற்ற படாத பாடுபடுவார்கள்.

இந்த மருந்தைப் பற்றியோ, இதன் விஷத்தன்மை பற்றியோ ரசாயனங்களை பற்றிய அறிவாற்றல் இல்லாத விவசாயிகளுக்கு தெரிந்திருக்க போவதில்லை. ஆனால் இந்த எண்டோசல்பனால் மனித குலம் சிறிது சிறிதாக ஊனமாகி விடும் என்று மனித உரிமை ஆணையம் சமீபத்தில் கண்டித்துள்ளது. எண்டோசல்பான் மருந்தை பயிர்களுக்கு தெளிப்பதை உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

ஜனவரி 1 ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தால் இந்த வேண்டுகோள் உலகநாடுகளுக்கு விடுக்கப்பட்டது. இந்த ஆணையம் சமர்பித்த அறிக்கையில், " தெளிப்பான்கள் (sprayers) மூலம் எண்டோசல்பான் மருந்தை பயிர்களுக்கு தெளிப்பதால், இந்த பயிரில் விளைந்த உணவுப்பொருளை உண்ணும் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். பிறக்கும் குழந்தைகள் மனநிலை தவறி பிறக்க வாய்ப்புண்டு. மேலும் பல்வேறு உருமாற்றங்களுடனும் கூடிய குழந்தைகள் பிறக்கவும் நேரிடலாம். இத்துடன் இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்,பெண் இனப்பெருக்க வேறுபாடுகள் தோன்றும் போது அது மாறுபட்ட குணநலன்களை கொண்டதாக இருக்கலாம். இந்தியாவில் கேரளா அரசு மட்டும் தான் தனது மாநிலத்தில் விவசாயிகள் எண்டோசல்பானை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
என்டோசால்பான் மருந்தின் விளைவு இப்படி தான் இருக்கும் !!!
 இந்தியா முழுவதும் இந்த நச்சுமருந்து பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். நாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த நச்சு மருந்து பற்றி மேற்கொண்ட ஆய்வில் இந்த மருந்து ஏற்படுத்திய கொடிய விளைவுகள் தெரிய வந்துள்ளது. இன்னும் அதிக அளவு பாதிப்பை இந்திய குடிமக்களிடையே இந்த மருந்து ஏற்படுத்துவதற்குள் இந்த மருந்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்".
இப்படி மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் கோரியுள்ளது.

எண்டோசல்பான் மருந்தை தடை செய்ய உலகநாடுகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு தெரிவித்த ஓட்டளித்தநிலையிலும், இந்த மருந்தை தடை செய்வதை எதிர்த்து  ஓட்டளித்தது இந்திய அரசு . 2002 ஆம் ஆண்டில் 60 நாடுகள் இந்த மருந்தை தடை செய்து விட்டன. அந்த நாடுகளில் விவசாயத்தில் இந்த மருந்து இம்மியளவு கூட பயன்படுத்தப்படுவதில்லை. எண்டோசல்பானால் இதுவரை தீயவிளைவுகள் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று ஒரு பதிலை சொல்லியிருக்கிறது இந்தியா.

நாம் தினமும் வாங்கும் காய்கறிகளில் என்டோசல்பான்இருக்கலாம்.கவனம்.
முடிந்தால்  இயற்கை முறை விவசாயத்தில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள்.
அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

7 கருத்துகள்

நம்மாழ்வார்
துரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் " மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இப்போதைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளாக இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதில் பன்னாட்டு நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். கலையை ரசித்து பார்க்க கூடிய அளவிற்கு விவசாயிகளின் வாழ்க்கை இல்லை. அவர்களது வாழ்நிலை மோசமாக இருக்கிறது. கிராமப்புறங்கள் தரிசாகி வருகின்றன. நிலத்தை உழுத மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

சாலையோர மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. நம்நாட்டின் வளம் முழுவதும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்படுகிறது. தமிழகத்தில் 10 ல் 4 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. புரட்சி என்பது சிவப்பாகத் தான் இருக்கும். பசுமையாக இருக்காது. தமிழத்தில் பசுைப்புரட்சி ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அது எப்போது? தமிழத்தின் தேவை வெளி மாநிலங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆறுகள் மாசுபடுத்தப்படுகின்றன. விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பதுக்கல் வர்த்தகம் நடைபெறுகிறது.
விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணைப்பற்றியோ மக்களை பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மான்சான்டே போன்ற வெளிநாட்டு விதை கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கூடங்களாக மாறி விட்டன. அரிசியிலிருந்து 12 பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு வருங்காலத்தில அரிசி இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அரிசிக்கே ஆபத்து வரக்கூடிய சூழல் உள்ளது. இப்போது திராட்சை பழம் பூச்சிக் கொல்லி மருந்துகளால் நிரம்பி இருக்கிறது. திராட்சை பழங்களை உண்ணாதீர்கள்.
இவ்வாறு நம்மாழ்வார் பேசினார். என்ன நடக்குமோ இனி எதிர்காலத்தில்!
நமது கருத்து
நமது விவசாயிகள் விதைத்து வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் அனைத்தும் கண்காட்சி பொருளாக மாறிவிட்டன. நாட்டு ரக நெல் விதைகளை இப்போது யாரும் விதைப்பதில்லை. இப்போது இருப்பவை பெரும்பாலும் வீரிய ரகங்கள் தான். இப்படி அனைத்திலும் புதிய கண்டுபிடிப்புகளும், வீரிய ரகங்களும் வந்துள்ளன. இவற்றை தாக்கும் பூச்சிகளை ,நோய்களை விரட்ட புதிய புதிய மருந்துகளை விவசாயிகள் வாங்கி குவிக்க வேண்டியதிருக்கிறது.

எல்லாவற்றையும் முடித்து விட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு போனால் விவசாயிக்கு கிடைப்பது நாமம் தான் என்றே பொதுவான பேச்சு இருக்கிறது. இப்படி இருந்தால் யார் விவசாயம் செய்ய முன்வருவார்கள்? ஆக..அரிசிக்கு ஆபத்து தான் இனி!

சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு

3 கருத்துகள்பருவ நிலை மாற்றத்திற்கு தக்க உணவுகளை உண்டு வந்தால் உடல் நலன் மேம்படும் என்ற அடிப்படையில் இந்த பதிவு. பொதுவாக சீசனில் கிடைக்கும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை செய்பவை. இந்த பதிவு ஒரு நாளிதழில் வந்தது. ஆனாலும் இதில் குறிப்பிட்டுள்ள காய்கறிகளையும், பழங்களின் மருத்துவக்குணங்களையும் அலசிப்பார்த்தால் அவை அந்தந்த மாதங்களின் சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை என்பதால் அந்த இதழில் வந்த உள்ளடக்கத்தை இங்கு தருகிறேன்.
ஜனவரி
கோதுமை உணவுகள் இந்த மாதத்திற்கு அதிகம் ஏற்றது. காபி கொட்டையை வறுத்து மல்லியோடு சேர்த்து தூளாக்க வேண்டும். அதில் மிளகு சேர்த்து காபி தயாரித்து பருகவேண்டும். கரும்புச்சாறு பருகலாம். உளுந்து சேர்த்த உணவுகள் அதிகம் சாப்பிடலாம். ரசம் தயாரிக்கும் போது புளியை குறைவாக சேர்த்து மிளகு அதிகம் சேருங்கள். சாம்பார் தயாரிக்கும் போது மஞ்சள் தூள் அதிகம் சேர்த்திடுங்கள்.
பிப்ரவரி
வாழைத்தண்டு கூட்டு, மல்லி இலை துவையல்,நெல்லிக்காய்,முருங்கை இலை மற்றும் இதர கீரை வகைகளை அதிகம் உணவில் சேருங்கள். பாகற்காய் கூட்டு நல்லது. எருமைப்பால் சேர்த்த பால் கஞ்சி பருகலாம்( ஆவின் பால் என்றால் அது பசும் பால் என்று நினைத்து விடாதீர்கள். அதிலும் எருமைப்பால் இருக்கிறது. ஊரில் இருக்கும் பசு,எருமை என்று வித்தியாசமில்லாமல் சேகரித்து பால் பிளாண்டில் சூட்டிலும், பிறகு அதிக குளிர் அறையிலும் பதனப்படுத்தி தான் ஆவின் பால் என்று பாக்கெட்டுகளில் வருகிறது)
பப்பாளி, வெள்ளரிக்காய்களை சாப்பிடலாம்.
திராட்சை, கேரட்டில் ஜுஸ் தயாரித்து சாப்பிடலாம்
கார உணவு வகைகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள்.
மார்ச்
கொதித்து ஆறிய நீரில் தேன் கலந்து பருகுங்கள்.
மோர் அதிகம் குடிக்கலாம்.
தர்ப்பூசணி சாறு குடிக்கலாம்
வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்
தேங்காய், வெண்டைக்காய்,சுரைக்காய், கோவைக்காய் போன்றவற்றை சேருங்கள்.
எருமைப்பாலில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குளிர வைத்து பருகலாம்.
இளநீர் பருகலாம்
உணவில் அதிக புளிப்பு இனிப்பு சேர்க்க கூடாது
ஊறுகாய் வகைகள்,வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஏப்ரல்
பேரீச்சம் பழம்,வாழைப்பழம்,திராட்சை பழம் போன்றவைகளை அதிகம் சாப்பிடலாம்
வாழைப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு மண்பாத்திரத்தில் போட்டு புளிக்க வையுங்கள். அந்த சாறை வடித்து இன்னொரு மண்பாத்திரத்தில் ஒரு மணிநேரம் வைத்திருந்தூ விட்டு பருகுங்கள்.
தேங்காய் தண்ணீர் அதிகம் பருகலாம்.
தண்ணீரில் கருங்காலி கட்டை, சந்தனம், வெட்டி வேர் கலந்து பருகலாம். இந்த தண்ணீரை மண்பாணையில் வைத்து பருகுவது நல்லது.
கோழி முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிருங்கள்.
சிறிய வகை மீன்களான கூட்டு, குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.
மே
எள், உளுந்து, பெரும்பயறு போன்றவைகளை உணவில் அதிகம் சேருங்கள்.
தேன் நல்லது. ஆட்டுப்பால் கிடைத்தால் கண்டிப்பாக பருகுங்கள். இஞ்சியின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்.

ஜுன்
கொய்யா, பப்பாளி பழம் அதிகம் சாப்பிடலாம்.
ஆடு,கோழி சூப் பருகுங்கள்.
பழச்சாறுகளை குளிர வைத்து சாப்பிடலாம்.
தேன்,சீரகம் கலந்த நீர் பருகுங்கள்.
மாம்பழம், அன்னாசி பழம் சாப்பிடலாம்.
கரும்புச்சாறு, எருமைப்பால் சர்க்கரை சேர்த்த பால் நல்லது. திராட்சை,சீதாப்பழம் சாப்பிட வேண்டாம்.
ஜுலை
கீரை வகைகளை உணவில் அதிகம் சேருங்கள்.
பெரும்பயறு,கடலை,கொள்ளு போன்றவற்றை வேக வைத்து சூப் தயாரித்து பருக வேண்டும்.
வெண்டைக்காய்,முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு,கேரட் போன்றவற்றை குறைத்து பயன்படுத்துங்கள்.
பாலில் சர்க்கரை சேர்க்காமல் பருகுங்கள்.
ஆகஸ்ட்
சிறிதளவு புளி, உப்பு, தேன், நெய் ஆகியவை சேர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
புழுங்கல் அரிசி உணவு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
காய்கறிகளை உணவில் அதிகம் சேருங்கள்.
முருங்கை இலை தவிர மற்ற கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செப்டம்பர்
சிறுபயறுகளை உணவில் அதிகம் சேருங்கள்.
புடலங்காய் அதிகம் சேருங்கள்.
அக்டோபர்
நெல்லிக்காயை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ அடிக்கடி சேருங்கள்.
புடலங்காயை அதிகம் சேர்க்கலாம்.
நவம்பர்
அரிசி மாவு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
கோதுமை உணவுகளையும் சேர்க்கலாம்.
உளுந்து சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்
கிழங்கு வகைகளையும் உணவில் சேர்க்கலாம்.
டிசம்பர்
சேணைக்கிழங்கை உணவில் அதிகம் சேருங்கள்.
மல்லியும், சீரகமும் அதிகம் பயன்படுத்துங்கள்.
சுக்கு,இந்துப்பு,பூண்டு போன்றவைகளின் அளவையும் அதிகப்படுத்தலாம்.
அரிசி மாவு, வெல்லம் சேர்க்கும் உணவுகள் நல்லது. கோதுமையுடன் பால் சேர்க்கும் உணவுகளை அதிகமாக தயாரித்து சாப்பிடுங்கள்.
மல்லி காபி பருகலாம்,
மிளகை உணவில் அதிகம் சேருங்கள்.

எளிய முறையில் சத்து மிகுந்த காய்கறி சூப்
காய்கறிகளை சூப் வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் திரவ வடிவில் எளிதில் கிடைக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். கீழ்க்கண்ட வடிவில சூப்பை நீங்கள் எளிதாக தயாரிக்கலாம். நான் இங்கு உதாரணத்திற்காக தக்காளி, பீட்ரூட் சூப் தயாரிப்பது பற்றி கொடுத்துள்ளேன்.
தேவையான பொருட்கள்
தக்காளி சாறு- சிறிதளவு, வேகவைத்து துருவிய பீட்ரூட்-250 கிராம், துருவிய காரட்-1, வெங்காயம்-1, கிரீம்- 1 டேபிள்ஸ்பூன், வெண்ணை- சிறிதளவு, தண்ணீர்-6 கப், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு.
செய்முறை
பீட்ரூட் தவிர மற்ற எல்லா காய்கறிகளையும் வெண்ணையில் வதக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி இவற்றை வேகவைத்து பிறகு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதை விட தயிர் மத்து இருந்தால் மண்கலயத்தில் போட்டு நன்றாக கடைந்து கொள்ளவும். இப்படி கடைந்த காய்கறியுடன் தக்காளி சாறு, உப்பு,மிளகு, துருவி வைத்துள்ள பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கீரிம் சேர்த்து சூடாக பரிமாறவும். பீட்ருட்டுக்கு பதிலாக நீங்கள் வேறு எந்த காய்கறியும் சேரத்துக் கொள்ளலாம் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி.
சத்து மிகுந்த சூப் ரெடி.
உடற்பயிற்சி முடித்த சிறிது நேரம் கழித்து இந்த சூப்பை குடித்து பாருங்கள். அபாரமாக இருக்கும். உடம்பில் ஒரு புத்துணர்வு இருக்கும்.
(தற்போது நாம் உணவில் சேர்க்கும் சாதாரண உப்பால் உடலில் ஏராளமான நோய்கள் வருகின்றன. இதற்கு பதிலாக இந்துப்பு என்ற பாறை உப்பை பயன்படுத்தலாம். இந்த உப்பு நாட்டு மருந்துக்கடைகளிலும், இயற்கை உணவு கடைகளிலும் கிடைக்கும். இதன் பயன் உடலுக்கு அதிகமான நன்மை தரும். இந்துப்பு பற்றிய பதிவை தனியாக இடுகிறேன்.)

உங்கள் கிராமத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இதனை சொல்லுங்கள் நண்பர்களே!

3 கருத்துகள்

5 ஆயிரம் முதலீட்டில் சுகுணா கோழி பண்ணை தொடங்கிய சவுந்திரராஜன் இன்றைக்கு 2000 கோடி மதிப்புள்ள சுகுணா பவுல்ற்றியின் முதலாளி

மிழக சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் "நாட்டுக்கோழிகளின் இனம் அழிந்துவருகிறது" ஏன்? என்ற கேள்வியை அமைச்சரிடத்திலே எழுப்பப்பட்டது. அந்த கோழிகளை அரசியல்வாதிகள் நிறைய சாப்பிடுவதால் அழிந்து வருவதாக கூசாமல் பதிலும் சொல்லப்பட்டது. இது பத்திரிகைகளிலும் வந்தது. இதனையடுத்து இந்த பதிவை இங்கு இடுகிறேன்.

என்னதான் விளைந்தாலும் விளைச்சலுக்கு பலன் இல்லை. எல்லாம் இடைத்தரகர்கள் பிடுங்கி கொண்டு போய் விடுகிறார்கள். "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்' என்று சும்மாவா பாடினார்கள் பழைய படத்தில்! பசுமைப்புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கடுமையான ரசாயனங்களை கொட்டி மண்ணை மரணத்திற்கு கொண்டு போய்விட்டார்கள். மண்ணில் இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் மண்ணை உழுது கொண்டிருந்த பாக்டீரியாக்கள் முதல் உழவனின் நண்பனான மண்புழுக்கள் வரை அனைத்தும் மடிந்து போய் மண் மலடியாக மாறி விட்டது.

இந்த நிலையில் ஒரளவுக்கு மேல் மண்ணிலிருந்து பலனை எதிர்பார்க்கவும் முடியவில்லை. இதனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களும், அது சார்ந்த விவசாயமும் நாளுக்கு நாள் நம்பிக்கையை இழந்து வருகின்றன. விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்பதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் எதுவும் புலப்படவில்லை.

ஆக..இப்படி இருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு கையில் பணம் புரள ஏதாவது செய்தாக வேண்டும். நகரங்களில் ஐடி கம்பெனிகளில் இரவும் பகலும் கண்விழித்து சம்பாதிக்கும் இளைஞர்கள் உழைத்து பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களை தவிர பிசினஸ் பண்ணும் நபர்களிடமும் பணம் புழங்குகிறது. இது தவிர அரசியல் வாதிகளிடமும், லஞ்சம் வாங்கி கொழுக்கும் அரசு ஊழியர்களிடமும் பணம் புழங்குகிறது. அதாவது சமூகத்தின் வாங்கும் சக்தி அதிகம் உடைய தரப்பினர் இவர்கள் தான்.

 இவர்களிடம் எதையாவது விற்க முடிந்தால் அதை விற்பவரின் பாக்கெட்டுக்கு பணம் வந்து நிரம்பும்.மேற்குறிப்பிட்ட இந்த தரப்பினர் அனைவரும் சிக்கனம் பார்க்காமல் செலவழிப்பது சாப்பாட்டுக்குத் தான். சரவணபவனும், திண்டுக்கல் வேலு பிரியாணியும்,ஆரிய பவனும் இவர்களால் தான் அதிகம் நிரம்பி வழிகிறது. சத்து இருக்கிறது என்றால் எதையும் வாங்கி சாப்பிட இவர்கள் முன்வருவார்கள். இவர்களுக்கு எதை விற்பது தான் கேள்வி?
'நாட்டுக் கோழி' என்றாலே முருங்கைக்காய் போல் அந்த விடயத்துக்கு பலத்தை சேர்ப்பது என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இது ஓரளவு உண்மையும் கூடத்தான். ஆனால் நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.

நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.

இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.

இதையெல்லாம் கணக்கில் கொண்டால் நாட்டுக்கோழிகள் பலசாலிகள் தான். இவற்றின் இறைச்சியும் குழம்பும் ருசியாக இருக்கும். அதனால் அரசியல்வாதிகள் இவற்றை ஆயிரக்கணக்கில் கபலீகரம் செய்வதாக பேசப்படுகிறது. இது இருக்கட்டும். இந்த கோழிகளை சாப்பிட சாமானியர்களுக்கும் கசக்குமா என்ன? ஆனால் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விலை அதிகம்.

ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.
இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.

இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கு விளக்கம் தேவையா?

2 கருத்துகள்

மகனுடன் டாஸ்மாக்கில் பொங்கல் கொண்டாடிய கலிகால அப்பா!!!

உங்கள்  கருத்துக்களே விளக்கட்டும்.

சர்க்கரை பொங்கலுடன் குடிப்போம் கஞ்சியும், கூழும்!!!

3 கருத்துகள்


பொங்கல் கொண்டாட்டத்தில் இருக்கிறோம். ஆனால் சர்க்கரை வியாதியளர்களுக்கு சர்க்கரை பொங்கல் நிச்சயம் கசக்க தான் செய்யும். வீட்டில் அனைவரும் பொங்கல் சாப்பிட, சர்க்கரை நோயாளர்களுக்கு மட்டும் பிரேத்யேகமாக ஏதாவது உணவு செய்ய வேண்டியதிருக்கும். பொதுவாக நாம் இன்றைக்கு பலம் குன்றியவர்களாக மாறியதற்கு காரணம் பாரம்பரிய உணவுகளை மறந்து போனது தான். மக்காச்சோளத்தையும், பருத்திக்கொட்டையும் அற்புதமான உணவுகள். பருத்திப்பாலை அருந்தினால் கபம் என்னும் சளி கரைந்து போகும். குரல் இனிமையாக மாறும். மக்காச்சோளத்தில் அபாரமான பலம் இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் இப்போது கோழிகளும் மாடுகளும் தான் சுவைத்துக் கொண்டிருக்கின்றன. காரணம், இவை கால்நடை தீவனங்களாம்.

ஆக...நாம் சாப்பிட வேண்டியதை எல்லாம் ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் சாப்பிட்டு பலமாக இருக்கின்றன.நாம் வழக்கம் போல் சோற்றை சாப்பிட்டு விட்டு பல நோய்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். குறிப்பாக சென்னைவாசிகளின் பேவரைட் உணவாக இப்போது இருப்பது ஓட்ஸ் கஞ்சி, இதில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்றே தெரியாமல் தொடர்ந்து இதை சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும். முழுவதும் நார்ச்சத்து மட்டுமே நிரம்பி இருக்கும் ஓட்ஸ் உடலை வற்றச் செய்யும் என்பது ஒரளவு உண்மை. ஆனால் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களுக்கு நாம் எங்கே போவது?
எனவே, உணவானது சரி சமமான சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இதற்கு இரும்புச்சத்து நிறைந்த கேழ்வரகு, கம்பு உள்பட பல சிறுதானியங்களை கொண்ட உணவை தயாரித்து உண்பது தான் சரியாக இருக்கும்.


இந்த காலத்தில் இந்த கஞ்சிகளை எல்லாம் காய்ச்ச யாருக்கு தெரியும் என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். இதற்காகவே தஞ்சையை சேர்ந்த சித்த மருத்துவர் முனைவர்.பிரேமா ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். "குடித்து பழகுவோம் கஞ்சி" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த நூலில் பல வகையான கஞ்சியின் தயாரிப்பு முறைகள்,அவற்றின் மருத்துவ குணங்களை விவரித்திருக்கிறார் ஆசிரியர். "கஞ்சி" என்றால் இனிதாக காய்ச்சுதல் என்று இந்த புத்தகத்தின் முன்னுரை தொடங்குகிறது. கஞ்சிகளை தயாரிக்கும் முறை, அவற்றை சாப்பிடுவதால் தீரும் நோய்களை விலாவாரியாக விளக்கியிருக்கிறார். இந்த புத்தகத்தில் அசைவ உணவுக்காரர்களுக்கான பிரேத்யேமாக கஞ்சிகள் செய்முறையும் விளக்கப்பட்டிருக்கிறது.கோழிக்குஞ்சு கஞ்சி,ஆட்டின் கால் வைத்து தயாரிக்கும் கஞ்சி என்று அசத்தியிருக்கிறார் ஆசிரியர்.
அரிசியை குறைத்து சிறுதானியங்களை நாம் சாப்பிட தொடங்கினால் அவற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நமக்கும் உடல் நலம் சிறப்பாக அமையும்.
ஆக...இந்த கஞ்சி தயாரிப்பு பற்றிய புத்தகத்தை வாங்க கீழ் உள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்: முனைவர்.பிரேமா,
வெளியீடு: தேவா பப்ளிசிங் ஹவுஸ்,
2634, தெற்கு மெயின் தெரு,
தஞ்சாவூர்-9
போன்: 04362-232919
விலை: 50 ரூபாய்

இனி நீங்கள் சாப்பிடப் போவது நைஜீரியா அரிசி!!

10 கருத்துகள்


 நைஜீரியா நாட்டில் போய் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அரிசி,பருப்பு விளைவித்து இந்திய நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தஆலோசனை செய்து வருகிறோம் என்கிறார் இந்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவார்.

இதெல்லாம்  எப்போது என்று தெரியவில்லை. ஆனால், நாமே வீட்டில்ஒரு காய்கறி தோட்டம் அமைத்துவிட்டால் அன்றாடம் புத்தம் புதிய காய்கறிகளை பறித்து சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி தோட்டம் அமைக்க ஏக்கர் கணக்கில் நிலம் இருக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் செட்கள், களை பிடுங்க விவசாய கூலி ஆட்கள் என்று இத்தியாதிகள் எல்லாம் தேவையே இல்லை.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,இந்தோனேசியா நாடுகளில் ஒரு சதுரமீட்டர் இடத்தை பயன்படுத்தி வைட்டமின் சத்து மிகுந்த சோயாபீன்ஸ் பயிர்களை வீட்டு தோட்டங்கள் அமைத்து பயிரிட்டு சாப்பிடுகிறார்கள். விவசாயத்தில் முன்னோடிகளான நாம் இன்றைக்கு அதையெல்லாம் மறந்து போனோம். பாரதி கவிதை எழுதினாலும் கூட அவனது கனவு காணி நிலமாகத் தான் இருந்தது. காரணம், பயிர் செய்வதில் மனநிம்மதி, ஆரோக்கியம் எல்லாமே கிடைக்கும்.

சிறிய தோட்டம் அமைக்க வீட்டில் இருக்கும் மாடிபடிக்கட்டுகள், தாழ்வாரங்கள் என்று கிடைக்கும் இடத்தில் அமைத்து விடலாம். வீட்டில் பாத்திரம் கழுவ உதவும் தண்ணீரை (சோப் கலவாதது) செடிகளுக்கு பாய்ச்சலாம். இனி வீட்டில் காய்கறி தோட்டம் போட எதுவெல்லாம் வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். அபார்ட்மெண்டுகளில் வசிப்பவர்களுக்கு புழங்குவதற்கு பொதுவான இடம் விட்டிருப்பார்கள். இந்த இடத்தின் அளவு சுமார் 3 சென்ட் அளவு காலியான இடம் இருத்தால் அபார்ட்மெண்டுகளில் வசிப்பவர்கள் அத்தனை பேருக்கும் காய்கறி கிடைக்கும்.

இங்கு முதலில் 1 சென்ட் நிலம் இருந்தால் அந்த இடத்தை எப்படி பிரித்து காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்று பார்க்கலாம்.
காய்கறி பயிரிட தேர்வு செய்துள்ள 1 சென்ட் நிலத்தில் ஒரு ஓரமாக 3 முதல் 4 மீட்டர் நீளம் மற்றும் அகலத்தில் உள்ள இடத்தை நீண்ட கால பயிர்களான முருங்கை( முருங்கைக்காயின் தற்போதைய விலை 10 ரூபாய்), கறிவேப்பிலை (கொஞ்சம் ஓசி கிடைத்தால் குழம்பை மணக்க வைத்து விடலாம் என்று வியாபாரிகளிடம் இப்போதும் கறிவேப்பிலைக்காக கெஞ்சுகிறோம்), எலுமிச்சை( வெயில் காலத்தில் ஜூஸ் கலக்க), வாழை, பப்பாளி போன்றவற்றை பயிர் செய்ய ஒதுக்கி விடலாம்.
எங்கள் வீட்டு தக்காளி தொட்டி(இதற்கு நீர்  தாங்கு ஊடகமாக தென்னை நாரை பயன்படுத்தி இருக்கிறேன்
 இப்போது 1 சென்ட் இடத்தில் 4 அடி போக மீதம் இருக்கும் உள் சதுரத்தை எந்த காய்கறிகளுக்காக பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த இடத்தில் அரை மீட்டர் அகலத்திற்கு நடைபாதை ஒன்றை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதாவது நாம் விளைவிக்கும் காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, அதன் வளர்ச்சியை கண்காணிக்க நடந்து செல்வதற்கு இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த பாதையால், எஞ்சியிருந்த இடம் இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.

இந்த ஒவ்வொரு பாதியையும் மிகச்சரியான 6 பகுதிகளாக (ஒவ்வொரு பகுதியும் ஒன்றரை மீட்டர் நீளம், ஒருமீட்டர் அகலமுள்ள பாத்திகளாக) பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் பிரிக்கும் போது 12 பாத்திகள் கிடைத்திருக்கும். இப்போது காய்கறி பயிரிடவுள்ள இந்த பாத்திகளை பயிர் செய்ய தயார் செய்ய போகிறோம்.

முதலில் நிலத்தை நன்றாக மண்வெட்டியின் உதவியால் ஒரு அடி ஆழத்திற்கு நன்கு கொத்தி கிளறி விடவேண்டும்.
அப்படி கிளறும் போது மண்ணில் இருக்கும் கற்கள், கட்டிகள்,களைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இப்படி மண்ணை நன்றாக கிளறி விட்ட பிறகு நிலம் உயிரோட்டாக காட்சியளிக்கும். அப்போது ஒரு சென்ட் பரப்பளவிற்கு 100 கிலோ என்ற அளவில் மக்கிய தொழுஉரம் (உரக்கடைகளில் கிடைக்கும்) வாங்கி வந்து நிலத்தில் போட்டு நன்றாக மண்ணோடு மண்ணாக கலக்கும்படி செய்ய வேண்டும்.
பிறகு நாம் பிரித்துள்ள பாத்திகளை 45 செமீ அல்லது 60 செமீ இடைவெளியில் சிறுசிறுபார்களாக (ஒரு கேக்கை மேல்புறத்திலிருந்து வெட்டி ஒதுக்குவது போல்) அமைக்க வேண்டும். இப்போது நிலத்தை தயார் செய்யும் வேலை முடிந்து விட்டது. இனி பயிரிட போகிறோம்.
இயற்கை உரம் பயன் படுத்த பட்ட எனது வீட்டு ரோஜா செடி இது


விதைப்பு மற்றும் நடவு செய்யும் முறை
பயிர்களில் நேரடி விதைப்பு மற்றும் நாற்று விட்டு நடவு முறை என்று இரண்டு முறை இருக்கிறது. இதில் நேரடி விதைப்பு காய்கறிகளான வெண்டை, குத்து அவரை,கொத்தவரை,தட்டைப்பயறு ஆகியவற்றை பார்களின் ஒரு புறம் 30 செமீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். முளைக்கீரை, தண்டுக்கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவற்றை 1 பங்கு விதைக்கு 20 பங்கு மணல் கலந்து பாத்திகளில் தூவி விதைக்க வேண்டும். சிறிய வெங்காயத்தை நடைபாதை ஒரங்களில் விதைக்கலாம்.

இதற்கடுத்து நாற்று விட்டு நடும் பயிர்களை நடவு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தக்காளி, கத்திரி, பெரிய வெங்காயம் போன்ற செடிகளை ஒரு மாதத்திற்கு முன்பே மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து விதைக்க வேண்டும்.(இது பெரிய விடயமல்ல. தனியாக ஒரு இடத்தில் விதையை போட்டு செடி வளர்ந்து நிற்கும். பிறகு அதை பிடுங்கி எடுத்து வந்து நாம் அமைத்துள்ள பார்களில் மறுபடியும் ஊன்ற வேண்டும். இது தான் நாற்று விட்டு நடும் முறை)

இப்படி விதைத்த பின் 30 முதல் 40 நாட்களில் நாற்றுக்களை பறித்து பார்களின் ஒரு புறத்தில் 45 செமீ இடைவெளியில் குத்துக்கு 2 நாற்றுக்கள் வீதம் நடவேண்டும். நடவுக்கு பின் நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 3 ஆம் நாள் மறுபடியும் நீர்பாய்ச்ச வேண்டும். வீடுகளில் தொட்டிகளில் இந்த பயிர்களை வளர்த்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர்பாய்ச்ச வேண்டும்.
பூசணி, பரங்கி போன்ற தரையில் வளரும் கொடிகளை பாத்திக்கு 2 குழிகளில் விதைகளை விதைத்து கொடிகளை தரையில் படரவிட வேண்டும்.
இது தான் காய்கறி தோட்டம் அமைக்கும் முறை.

 குறிப்புகள்

நீண்டகால காய்கறிகளான கறிவேப்பிலை, முருங்கை,அகத்தி,தவசிக்கீரை,எலுமிச்சை, பப்பாளி,வாழை போன்றவற்றை நடுவதற்கு எடுக்கும் குழியின் அளவு குறைந்த பட்சம் 1 அடி குழி எடுத்து ஊன்ற வேண்டும். ஒரு தாவரத்திற்கு மற்றொரு தாவரத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருப்பது நல்லது. அப்போது தான் சூரிய ஒளி ஒவ்வொரு தாவரத்திற்கும் நன்றாக கிடைத்து ஒளிச்சேர்க்கை நடைபெற்று தாவரம் நன்றாக வளரும்.
விதைகளை நடும் முன் குழிகளில் 10 மக்கிய தொழுஉரம்,100 கிராம் பி.எச்.சி. மற்றும் 50 கிராம் யூரியா,100 கிராம் சூப்பர்,50 கிராம் பொட்டாஷ் கலந்து குழிகளில் நிரப்பி நீர் ஊற்ற வேண்டும்.
பின்னர் பப்பாளி,எலுமிச்சை உள்பட தேர்வு செய்துள்ள கன்றுகளை நடலாம். பொதுவாக இது போல் மரக்கன்றுகள் எல்லாம் நர்சரிகளில் கிடைக்கின்றன. வாங்கி நடலாம்

மொட்டை மாடியில் காய்கறி சாகுபடி
காலியிடம் இல்லாத நிலையில் மொட்டை மாடிகளில், வராந்தாவில், மரப்பெட்டிகள்,காலிடப்பாக்கள், உடைந்த குடங்கள் ஆகியவற்றில் காய்கறி சாகுபடி செய்யலாம். இதற்கு இந்த டப்பாக்களில் செம்மண், மணல் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சமஅளவு கலந்து நிரப்பி நன்கு வெயில் இருக்கும் இடங்களில் பாலீத்தின் காகிதத்தை விரித்து அவற்றின் மேல் அடுக்க வேண்டும்.
இவற்றில் தொட்டிக்கு 2 விதை வீதம் நேரடி விதைப்பு பயிர்களையோ, 2 நாற்றுக்கள் வீதம் நாற்று விடும் பயிர்களையோ நடவு செய்ய வேண்டும். இது போன்று பயிர் செய்யும் போது நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மண் நன்றாக காய்ந்த பிறகு தான் நீர் பாய்ச்ச வேண்டும். இடவசதிக்கு தக்கபடி தொட்டிகளை வைத்துக் கொள்ளலாம்.

செங்குத்து தோட்டம்
வீட்டின் முன்புறத்திலும்,பின்புறத்திலும் மேலும் மொட்டை மாடியிலும் கூட இடம் இல்லாதவர்கள் சூரியவெளிச்சம் வரும் இடத்தில் காய்கறிகள் பயிரிட முடியும். இதற்கு தேவை 7 அடிநீளம், 4 அடி உயரம் இரண்டு படிக்கட்டு அமைப்பையும் கொண்ட இரும்பு ஸடாண்டு தான். இதில் தொட்டிகளை தாங்க கூடிய வளையங்கள் போன்ற அமைப்பை பொருத்தியிருக்க வேண்டும். அதில் பத்து விதமான காய்கறிகளை பத்து தொட்டிகளில் பயிரிட்டு பயன்பெறலாம். இதை செங்குத்து தோட்டம் என்பார்கள்.

பயிர் பாதுகாப்பு
பொதுவாக இப்போது வீரிய பயிர் எதிர்ப்பு விதைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நடுங்கள். பூச்சி தாக்குதல் அவ்வளவாக இருக்காது.
புழுக்கள் பயிர்களில் தென்பட்டால் அவற்றை கையால் எடுத்து அழிக்கவும். வேப்பெண்ணை, வேப்பங்கொட்டை சாறு வேப்பம் பிண்ணாக்கு சாறு கலந்து பயிர்களில் தெளித்தால் புழுக்கள் கட்டுப்படும்.

மருந்து தெளித்தால் பிறகு 10 நாட்களுக்கு காய்கறிகளை பறித்து பயன்படுத்தக் கூடாது. எந்த பயிருக்கு என்ன மருந்து பயன்படுத்தலாம் என்று உரம் பூச்சி மருந்து கடையில் கேட்டால் தருவார்கள். எல்லாவற்றும் மேலாக பஞ்சகவ்யா பயன்படுத்துவது நல்லது. பஞ்சகாவ்யா பயன்படுத்தி விளைவித்தால், இயற்கை விவசாய காய்கறிகளாக நீங்கள் சாப்பிடலாம்.
தேவ அமிர்தம் சாப்பிடலாம் வாருங்கள் நண்பர்களே!!!

5 கருத்துகள்

Last Forest Honey(Nilgiris)

படத்தில் காணப்படும் தேன் மலைத்தேன், இது நீலகரி மலையின் உயரமான பாறைக்குன்றுகளில் இருந்தும், மரங்களிலிருந்தும் ஆதிவாசி மக்களால் எடுக்கப்படுகிறது.

இந்த தேனை நான் வாங்கி வந்த போது தேனின் மருத்துவகுணங்களை பதிவாக விடுக்க தோன்றியது. அந்த அடிப்படையில் இதனை சமர்பிக்கிறேன். வீட்டில் இனி பலசரக்கு பொருட்கள் வாங்கும் போது அந்த பட்டியலில் தேனும் இடம்பெறட்டும். மறக்கமாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தேனை சாப்பிட சொல்லி ஊக்கப்படுத்தி உடல்நலத்தை மேம்படுத்துங்கள். நன்றி. இவ்வாறு நீங்கள் தேன் வாங்குவதால் இந்த தேனை சேகரிக்கும் ஆதிவாசி மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவுகறீர்கள் பதிவர்களே! 
"ஊளைச்சதை குறையும் வாந்தி
உள் வெப்பம் மாறுபசியுடன் ருசி கூடும்
கேளப்பா விக்கல் முக்க பரோகம் போம்
ஆமய்யா மரப்பொந்தின் தேனால்"- வைத்திய அந்தாதி

தாய்ப்பால் தலைசிறந்தது. அதற்கு இணையானது பசும்பால் என்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் மேலானது என்றால் அது தேன். தேனில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்கள் வேறு எதிலும் இல்லை என்பதை இந்த வைத்திய அந்தாதியும், தேவாரமும் விளக்குகின்றன. அதாவது மரப்பொந்தின் தேனை அருந்தி வந்தால், தனது உடலையே தான் தூக்க முடியாமல் நடக்கும் சிலரின் ஊளைச்சதை குறையும். பசி ருசி அதிகமாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும். விக்கல், இருமல், சயரோகம் என்னும் எலும்புருக்கி நோய் குணமாகுமாம்.

"ஐவகையிரு மலீனை விக்க லக்சிப்பிண்
மெய்யானவே தீரும் பசியும் வரும் கண்
பொய்யு மிலையிது மலைத்தேனே
உய்யும் மருந்திற் களுபானமாகும் மானே"- தேவாரம்

பெரிய மலைகளில் இருக்கும் பாறைகளில் மேல் உள்ள இடுக்குகளில் கட்டப்பட்டுள்ள கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேனுக்கு மலைத்தேன் என்று பெயர். இந்த மலைத்தேனை குறிஞ்சித் தேன் என்றும் சொல்வார்கள். இந்த மலைத்தேனை அருந்தினால் ஐந்து வகை இருமல்களான சிலேத்மகாசம்,சுவாசகாசம்,ஈளைஇருமல்,அள்ளு மாந்தம், சுக்கிருமல் ஆகியவை குணமாகுமாம்.

"வாமமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத் தேனே"-புலிப்பாணி
மாமரம், வேப்பமரம் போன்ற மரங்களின் உச்சாணிக் கொம்பில் ஒய்யாரமாய் தொங்கும் தேன்கூட்டில் எடுக்கப்படுவது கொம்புத்தேன். இந்த தேனை அருந்தினால் வாத நோய் குணமாகும். பித்தநோய்கள் மாறும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய் மறையும். பசியையும் ருசியையும் அதிகப்படுத்தும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
இப்படி தேனின் மருத்துவகுணம் பிரமிக்க வைக்கிறது.
இப்போது குறிப்பிட்ட வகையான தேனை சேகரிக்க தேன்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு தேன் சேகரிக்கப்படுகிறது. தேவ அமிர்தம் என்று கூறியிருக்கிறார்கள் தேனை. இந்த தேனில் என்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். நீர் 18 சதவீதம், கார்போஹைட்ரேட் 76 சதவிகிதம்,குளுபார்க்மி திரவ பிசின் 0.4 சதவீதம், உலோக சத்துக்கள் 0.2 சதவீதம் மற்றும் சர்க்கரை சத்துக்களும், பூக்களின் சத்துக்களும் உள்ளன. சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ்,டெக்ஸ்ட்ரியன் ஆகிய சர்க்கரை சத்துக்கள் உள்ளன.
டாஸ்டேஸ், கார்டலேஸ், லிப்பேஸ்,பெராக்ஸைடோஸ் ஆகிய நொதிப்பொருட்களும் உள்ளன. மக்னீசியா, பாஸ்பரிக்,இரும்பு,சுண்ணாம்பு சத்து ஆகியவும் சிறிதளவு உள்ளன. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய அளவு தேன் சிறிய உணவாக திகழ்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனில் 10 டீஸ்பூனில் இருக்க கூடிய பாலின் வலிமை அடங்கியிருக்கிறதாம்.300 கிராம் மாமிசத்தின் சத்துக்களும், 8 ஆரஞ்சுப்பழங்களின் சத்துக்களும் ஒரு டீஸ்பூன் தேனில் கிடைக்கின்றன.
தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். தேனை குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். பேதியை நிறுத்தும். இரத்த சோகை நோயை போக்கும். நரம்புகளுக்கு வலிமை தரும். தூக்கத்தை தரும். நீர்க்கோவையை சரிசெய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
தோல் சம்பந்தமான நோய்களை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமிநாசினியாக வேலை செய்யும். பற்கள், கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தீச்சுட்ட புண்கள், சிரங்குகள், ஆறாத இரணங்கள் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றல் பெற்றது.
உடல் பருமனை குறைக்கும். இரத்த அழுத்த நோய்களை குணமாக்கும். சூல ரோகங்களை போக்கும். நீண்ட ஆயுளை தரும்.பெண்களின் கருப்பை நோய்களை குணமாக்கும். உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.
இப்படி தேனை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ஆங்காங்கே தேன்பெட்டிகளை வைத்து விதவிதமான தேன்களை சேகரிக்கிறார்கள். என்ன வகையான தேன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
நாவல் மரத் தேன்
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து. காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் நெல்லிப்பொடி, 2 ஸ்பூன் நாவல் தேன் கலந்து குடித்தால் சர்க்கரை நோய், சிறுநீரக நோய்,கண் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். பற்கள் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
குங்குமப்பூ தேன்
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.உடல் பலம் மற்றும் நிறம் பெறும். இரத்தம் சுத்தமாகும்.
லிச்சி மரத்தேன்
லிச்சி பழம் தமிழ்நாட்டு பழங்களின் ராணி என்று கூறப்படுகிறது. இந்த பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட தேன் பல நோய்களை தீர்க்கிறது.
பூண்டுத் தேன்
இரத்தக் கொதிப்பை நீக்கும்.உடலில் கொழுப்பை கரைக்கும். இதயத்தை பாதுகாக்கும். நெஞ்சுச்சளி நீக்கும். உடல் எடையை குறைக்கும்.
இஞ்சித்தேன்
பல்வலி,வயிற்றுவலி,தலைவளி,சளி,இருமல்,ஆஸ்துமா,தொண்டைப்புண்ணை குணமாக்கும்.
துளசித்தேன்
இரத்தக்கொதிப்பை நீக்கும்.கல்லீரல்,மண்ணீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.பல்,எலும்புகளை பலப்படுத்தும்.
உலர்பழத்தேன்
உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி தரும்.இரத்தம் விருத்தியாகும்.நினைவாற்றல் அதிகரிக்கும்.மலச்சிக்கல் வராது.
அத்திப்பழ தேன்
மூலவியாதிக்கு நல்ல மருந்து.தலைவாதம்,தோல்நோய்,சிறுநீரக நோய்,கல்லீரல் பெருக்கம்,உடல்வெப்பத்தை சரிசெய்யும்.மூளைக்கு பலம் தரும். ஆண்மை விருத்திக்கு நல்லது.
ஆப்பிள் தேன்
நரம்புக்கும், மூளைக்கும் நல்ல பலம் தரும்.கீழ்வாதம், முடக்குவாதம்,தொண்டைப்புண்ணை நீக்கும்.காய்ச்சல்,சளி போன்றவை சரியாகும்.சீரண உறுப்பில் ஏற்பட்டிருக்கும் இரணங்களை நீக்கும்.
மாம்பழ தேன்
வைட்டமின் ஏ அதிகம் செரிந்தது என்பதால், கண் பார்வைக்கு நல்லது. கூந்தலை அதிகப்படுத்தும்.கணையம், கல்லீரலை பலப்படுத்தும். இதயத்திற்கு புத்துணர்வு அளிக்கும்.மூட்டுவலி, இரத்தக்கொதிப்பை நீக்கும்.
பேரீட்சை தேன்
வைட்டமின் சத்துக்களும்,தாதுக்களும் அதிகம் உள்ள தேன். இது ஒரு முழு உணவு. ஆண்மைக்குறைவை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
ரோஜாத்தேன்
உடல்பொலிவு பெற உதவும். கழிவு மண்டலம் சிறப்பாக இயங்க உதவும். மூலநோய் வராமல் இருக்க தொடக்க நிலை மருந்தாக பயன்படுத்தலாம்.காசநோய் குணமாக சிறந்த நிவாரணி.

இந்த தேன் சேகரிப்பாளர்களின் முகவரி
Last Forest
PB no-35
Kotagiri,
Nilgiris-17
phone: 4266 272277
துணுக்கு செய்தி-சோவியத் ரஷ்யாவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் நோயின்றி வாழ்ந்தவர்களை ஆய்வு செய்ததில் அவர்களின் பிரதான உணவாக தேன் இருந்தது தெரியவந்தது. தேன் சாதாரணமாக 50 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது. நமது நண்பர்களும் நலமாக வாழ இந்த தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்பபோமே!

தேனீப்பெட்டி, தேன் வளர்ப்பு பற்றிய விவரங்கள் அறிய
திருமதி.ஜோஸ்பின் செல்வராஜ்
விபிஸ் இயற்கை தேன் உற்பத்தியாளர்கள்,
புதூர்,மதுரை.
98655 55047.

தொழில் முனைவோர் உருவாக உதவிடுவோமே!!

2 கருத்துகள்


'புதிய தலைமுறை' பத்திரிகையாளர் மாலன் தலைமையில் செயல்படும் ஒரு இதழ். கல்விக்காகவும், தொழில் முயற்சிகளையும் பற்றிய விடயங்களை தாங்கி வருகிறது. 'விதைகள்'( Self Employed Enterpreneur Development Scheme) என்ற திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் சுயதொழில் முனைவோரை உருவாக்கி வருவதும் இவர்களது பணிகளில் ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்த திட்டம் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல திட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது . திட்டப்பணியாளரின் பணி என்பது, இளைஞர் குழுக்களை தொடங்குதல், பராமரித்தல், பயிற்சியளித்தல், தொழில்முனைவோர் மேம்பாட்டு திறன் மற்றும் பயிற்சியளித்தல் போன்றவை ஆகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய தலைமுறை அறக்கட்டளையுடன் 'ரெப்கோ' வங்கியின் அங்கமான ரெப்கோ நுண்கடன் நிறுவனமும் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கீழ்க்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வி: 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு,ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி குறிப்பாக M.Sc(Agri).,MSW,M.A.,Social Welfare Administration,M.A(Rural Development.M.com Co-op Management,B.Sc.,Computer Science,B.Sc.Food &Nutrition, B.Sc.Agri இருத்தல் நலம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
விதைகள் வேலை வாய்ப்புத் திட்டம்,
புதிய தலைமுறை,
த.பெ.எண்-4990,
நெ.24.ஜி.என்.செட்டி தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
மின்னஞ்சல்:rfmcptf@gmail.com
puthiyathalaimuraivv@gmail.com

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.01.2011

தமிழக முதல்வருக்கு ஒரு பழைய சோறுக்கு வெங்காயம் வைத்து சாப்பிடும் தமிழனின் கடிதம்

6 கருத்துகள்


வெங்காயம் சாமானிய மக்களின் கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலையில் பறந்து கொண்டிருகிறது.  காலையில் எழுந்து தூக்கு சொம்பில் பழைய சோற்றையும் கடிக்க வெங்காயமும சுமந்து கொண்டு கட்டிட வேலைக்கு சென்றாவது தனது குழந்தைகளை படித்து பெரிய நிலைக்கு வரவைக்க வேண்டும் என்று கனவையும் சேர்ந்து சுமக்கிற குப்பாயிக்கும், சுப்பாயிக்கும் தான் இந்த விலை உயர்வு கவலை. காரணம், அவர்கள் தூக்கி போகும் அந்த சோத்து சட்டியில் ஊறிக்கிடக்கும் பழைய சோற்றுக்கு தொட்டுக்கடிக்க சரியான சைடு டிஸ் 'வெங்காயம்' மட்டுமே!

தமிழக முதல்வர் அவர்களே! பழைய சோத்தை தூக்குசட்டியில் போட்டு உதிரி வேலைக்கு போய் வயிற்றை நிரப்பும் சாமானியன் எழுதும் கடிதம்...வறட்சி தான் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். முன்பெல்லாம் நாட்டை ஆண்ட மன்னர்கள் அமைச்சர்களிடம் 'மாதம் மும்மாரி மழை பொழிந்ததா'? என்று கேட்க தவற மாட்டார்கள். காரணம், மழை பொழிந்து விட்டால் நாட்டில் வறட்சி இருக்காது. மக்களுக்கு போதிய உணவு கிடைத்து விடும். நாட்டில் பசி,பட்டினி இருக்காது.அதனால் கொலை,கொள்ளை, திருட்டு போன்ற சமாச்சாரங்கள் இருக்காது. இது தான் மன்னர்கள் அமைச்சர்களிடம் மும்மாரி பொழிந்ததா என்று விசாரிக்க காரணம்.

அந்தக்காலத்திலும் வறட்சி இல்லாமல் இல்லை. அவ்வப்போது மழை பொய்த்து போனது. யோசித்து பார்த்த கரிகாலன் போன்ற மன்னர்கள் கல்லனை போல் அணைகளை கட்டி தண்ணீரை தேக்கினார்கள். மக்கள் மழை இல்லாத காலத்தில் அணையிலிருந்து தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள். ஆக, மக்கள் சுபிட்சமுடன் வாழ திட்டமிட்டு ஆட்சி செய்தார்கள்.


மழை வருவதற்கு முன் கர்நாடக அரசிடம் தண்ணீர் தாருங்கள் என்று கையேந்தினோம். ஆனால் அந்த பேச்சுக்கே இடமில்லை என்றார்கள். மத்திய காங்கிரஸ் அரசிடம் முறையிட்டோம். அவர்கள் தண்ணீரை தர உத்தரவிட்டார்கள். ஆனால் காவிரியிலே தண்ணீர் வரவில்லை. ஆக எதுவும் நடக்கவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கும் முன்வரை இது தான் தமிழகத்தின் நிலை. அதற்கு பிறகு மழை மட்டும் வந்திருக்காவிட்டால், தமிழகத்தில் விவசாய பயிர் விளைந்திருக்க வாய்ப்பில்லை என்பது உங்களுக்கு தெரியும்.

கடந்த இரண்டு மாதங்களாக மழை கொட்டி தீர்த்தது. எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. ஆற்றிலே வந்த வெள்ளம் ஆற்றோடு ஓடி கடலிலே கலந்து விட்டது. இப்போது மழை முடிந்த முடியாது இருக்கும் தமிழகத்தில் என்ன நிலைமை இருக்கிறது?

வைகைப் பாசனப் பகுதியிலே பாசனத்திற்கு தண்ணீர் இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது. அணையில் இருக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு முறை வைத்து திறந்து விடப் போகிறார்களாம்  அதிகாரிகள். விதைத்திருக்கும் பயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் விவசாயி தனது முறை வரும் வரை வாய்க்கால் மேல் விழி வைத்து காத்திருக்க வேண்டுமாம். இது தான் இன்றைய நிலைமை.

வைகை அணையின் நீர்மட்டம் 72 அடி. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீரை வைத்து தான் மதுரை, சிவகங்கை,மானாமதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீரை பெறுகின்றன. தற்போது பெய்த மழையை கடலிலில் கலக்கவிடாமல் அணையிலோ, குளத்திலோ, கண்மாய்களிலோ, ஏரிகளிலோ முழுமையாக தேக்கியிருந்தால் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுமட்டுமல்லாது பல போக விவசாயத்திற்கும், குடிநீருக்கும், மின்உற்பத்திக்கும் அதை பயன்படுத்தியிருக்கலாம் என்பதே எதார்த்தமும், நிச்சயமான உண்மையும் கூட.

வைகை அணை காமராஜர் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில் ஒரளவு தான் தண்ணீரை தேக்க முடியும். சில நேரங்களில் கடுமையான மழை பெய்யும் போது வைகை அணையில் தண்ணீர் வேகமாக நிரம்பி விடுகிறது. அப்படி நிரம்பும் தண்ணீரானது திறந்து விடப்படும் போது, அந்த உபரி தண்ணீர் வைகை ஆற்றின் வழியே ஒடி முடிவாக இராமநாதபுரத்தில் இருக்கும் பெரிய கண்மாயை சென்று அடைகிறது. இந்த வைகையானது பொதுவாக கடலில் சென்று கலப்பதில்லை. கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு என்பது தான் இதன் தனித்தன்மை.

ஆனால் சமீபத்தில் பெய்த மழையில் வைகை அணையும் நிரம்பி அங்கிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரானது இராமநாதபுரம் பெரிய கண்மாயையும் அடைந்து அந்த கண்மாயும் நிரம்பி கடைசியில் கடலில் சென்று கலந்தது. இது எப்போதோ நடக்கும் அபூர்வமான விடயம். ஆனால் வைகை அணை பாசனத்தை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் இப்படி தண்ணீர் வீணாக வெளியேறாமல் இருக்க தற்போது இருக்கும் வைகை அணைக்கு மேல் தலை வைகை அணை என்ற ஒரு அணையை புதிதாக கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளால் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதை கேட்பார் தான் இல்லை. சமீபத்தில் பெய்த மழையால் காவரியிலும், வைகையிலும் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரை சேமித்திருந்தால் அந்த நீரைக் கொண்டு பல முறை வைகை அணையை நிரப்பியிருக்கிறார்களாம் என்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?

தமிழக மற்றும் தென்மாநில மக்களின் முக்கிய உணவான அரிசிக்கும், வெங்காயம்  போல் தட்டுபாடு நேர்ந்ததால் எப்படி இருக்கும்? தஞ்சை மாவட்டத்தை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்கிறோம். அங்கேயும் அக்டோபர் மாதம் வரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. திருச்சியிலும், தஞ்சையிலும் பாயும் காவிரி அதீத சூட்டுடன் தண்ணீரை எதிர்பார்த்து ஏங்கிவறண்டு கிடந்தது. விவசாயிகள் எல்லாம் கவலையுடன் காவிரியில் தண்ணீர் வரும் என்று காத்திருந்தார்கள். ஆனால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாக தெரியவில்லை.

ஆனால் யார் செய்த புண்ணியமோ, அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து தஞ்சையில் மழை கொட்டி தீர்த்தது. காவிரியில் தன்னிச்சையாக தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. இதனால் மேட்டூர் நீர் தேக்கம் நிரம்பியது. இந்த நிலையில் ஒரளவுக்கு மேல் மேட்டூர் அணையில் நீரை தேக்க முடியாததன் காரணமாக, அணையிலிருந்து நீரை திறந்து விட்டார்கள். இதனால் ஏற்கனவே மழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த தஞ்சை டெல்டா பகுதி விவசாய நிலங்கள் எல்லாம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டன. ஒன்று வறட்சி இல்லாவிட்டால் அதிக மழை. இது தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையின் நிலைமை.

தமிழகத்தின் மக்களுக்கு நெல்லை தரும் தஞ்சாவூர் மட்டும் இல்லையென்றால், வெங்காயம் போல் அரிசிக்கும் தாளம் போட வேண்டியதிருக்கும். இப்படிப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பெய்யும் மழையையும், தஞ்சையிலிருந்து வீராணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஏரிகளிலிருந்தும் பல வாரங்களாக கோடிக்கணக்கான கனஅடி தண்ணீர் வீணாக வழிந்து கடலிலே சென்று கலந்து கொண்டு தான் இருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் மழை பொழியாத போது கர்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி கையேந்துவதும், அவர்கள் தண்ணீர் தரமறுத்தால் மத்திய அரசிடம் முறையிட்டு கதறுவதும், பிறகு கர்நாடக அரசு போனால் போகிறதென்று திருவோட்டில் சில்லறைக்காசு போடுவது போல் சில கனஅடிகள் தண்ணீரை திறந்து விடுகிறார்கள் என்பதும் நமக்கு தெரிந்து தான் இருக்கிறது. இப்படி கர்நாடகவிடம் கெஞ்சுவதை தவிர்க்க, கண் முன்னே பெய்யும் மழையை தேக்கி ஒரு சொட்டு மழை நீரை கூட கடலில் சென்று கலந்து வீணாகாமல் செய்தால் நம்மிடமே உபரி நீர் இருக்கும்.

இன்றைக்கு உலகின் சுத்தமான நகரமாக இருக்கும் சிங்கப்பூர் ஒரு காலத்தில் அசிங்கமான நகரம். இன்றைய அதன் வளர்ச்சி எப்படி சாத்தியமானது? எல்லாம் அறிவுப்பூர்வமான திட்டமிடல். அணுகுண்டால் பாழாய்போன ஜப்பான் நாட்டில் கப்பலின் மேல்தளத்தில் விவசாயம் செய்கிறார்கள். இஸ்ரேல் நாட்டில் அடுக்கு முறை விவசாயம். அதாவது, நமது வீட்டு புத்தக ஷெல்ப் போன்று அமைத்து விவசாயம் செய்கிறார்கள். இப்படி தங்களை தரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் உழைத்தால் நமக்கு கஞ்சி என்பது தான் எதார்த்தமான சாமானியனின் உள்ளத்தின் உள் பொதிந்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற தமிழ்நாட்டில் பாலைவனங்களாக மாறிக்கொண்டிருக்கும் நதிகளின் மீது உங்கள் பார்வையை திருப்புங்கள்.

என்னை போன்ற பழைய சோறும் வெங்காயமும் சாப்பிடும் சராசரி மனிதர்களுக்கு சோறு போடும் விவசாயி, அவன் நெற்றி வேர்வை சிந்தி நிலத்தில் உழைத்து தனது உணவை பெற்றுக் கொள்ள நதிகளை இணைக்க முயலுங்கள். இது தான் இப்போது முக்கியமானது. அவசியமானது. அவசரமானதும் கூட.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.....
 • 1. விவசாய நிலங்களை எவரும கட்டிடங்களாக, வீட்டடி மனைகளாக மாற்ற விற்பனை செய்யக்கூடாது. அப்படி செய்தால் சிறைதண்டனை என்று கேரள பாணியில் சட்டம் கொண்டு வாருங்கள்.
 • 2. 2005 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளச்சேதத்தின் அளவு 32 ஆயிரம் கோடி. 2007 ஆம் ஆண்டும் வெள்ளம் வந்தது. இப்போது 2011 லிலும் மீண்டும் வெள்ளச்சேதம். ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. இந்த வெள்ள நீரை எல்லாம் தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் உள்பட அனைத்து நீர்தேக்கங்களையும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்டு இவற்றில் தண்ணீரை தேக்கி இருந்தால் தமிழகத்தின் பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்காது. எனவே பொதுப்பணித்துறையை முடுக்கிவிட்டு  நீர்தேக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.
 • 3.தமிழகத்தில் மிகுந்த அறிவாற்றில் கொண்ட பொறியாளர்களான ஏ.சி காமராஜ் தலைமையில் இயங்கும் 'தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டம்' என்பது முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமால் பாராட்டப்பட்ட ஒரு திட்டம். அந்த திட்டம் என்பது, ' மாபெரும் மழை நீர் சேமிப்பு திட்டம்'. அதாவது தமிழகத்தில் ஓடும் நதிகளை எல்லாம் ஒன்றோடு மற்றொன்றை இணைத்து விடுவது. இதன்படி, அனைத்து நதிகளையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்படி இணைத்து விட்டால் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய நீர்வழியான சாலை போன்ற கட்டமைப்பு உருவாகிவிடும். ஒரு மாவட்டத்தில் கடுமையாக மழை பெய்து அங்குள்ள ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது கடலில் கலக்கும் இடத்தில் ஒரு கால்வாயை வெட்டி கடலுக்குள் போகும் தண்ணீரை திருப்பி மற்றொரு மழை இல்லாமல் காய்ந்து கிடக்கும் மற்றொரு மாவட்ட ஆற்றுக்கு தண்ணீரை திருப்பி விடுவது. இதன்படி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் அனைத்திலும் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.
 •  எந்தக் காலத்திலும் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. ஆறுகளில் எப்போதும் தண்ணீர் இருந்தால் அங்கு படகு போக்குவரத்தை நடத்தலாம். படகில் சரக்குகளை கொண்டு சென்றால் சாலைகளில் ஓடும் கனரக சரக்கு வாகனங்களை குறைத்து விடலாம். இதனால் சாலை விபத்தும் கட்டுப்படும். இன்றைக்கு லாரிகளுக்கு போடும் அதிகப்படியான டீசல் செலவையும் குறைத்து விடலாம். 
 •  இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம், வெள்ளப்பூண்டும், வெல்லமும் கிடைக்கும்.
  4.இப்படி ஆறுகளை இணைக்கும் போது சில இடங்களில் வடியும் தண்ணீரில் டைனமோக்களை அமைத்து விட்டால் மின்சாரம் தயாரிக்கலாம். 
 • 5.சைனாவில் எண்ணெய் செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுமார் 1,23,000 கி.மீட்டர் அளவுக்கு நீர்வழிச்சாலை அமைத்துள்ளார்கள். இதனால் கப்பல் போக்குவரத்து மேம்பட்டு சாலைகள் நெருக்கடி குறைந்துள்ளன. எரிபொருளை சேமிக்க தொடங்கி விட்டார்கள்.  எனவே நீங்களாவது சைனா போல தமிழ்நாட்டில் ஆறுகளை இணைத்து நீர்வழி சாலை திட்டத்தை தீட்டுங்கள்.
  6.வரும் 2011 ஆம் ஆண்டில் நீரை சேமிக்க சைனா 1,30,000 கோடி செலவிட முடிவெடுத்துள்ளது.ஆனால் கர்நாடகமும் எப்போதும் தண்ணீர் தரமறுத்து கைவிரிக்கும் நிலையில், கேரளா புதிய அணை கட்டுவதாக பயமுறுத்தும் நிலையில் நாம் என்ன செய்ய போகிறோம்?
அன்று அரசர்கள் குளங்களையும், ஏரிகளையும் வெட்டினார்கள். தண்ணீரை தங்கமாக கருதி சேமித்தார்கள். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை உங்கள் ஆட்சியிலும் பலனளித்துக் கொண்டிருக்கிறது. அவனது புகழை கல்லணை பறைசாற்றுகிறது.

 " வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்று மழையை வருணித்திருக்கிறான் வள்ளுவன். அந்த அமிழ்தத்தை வீணாக்குவதை நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா? நதிநீர் இணைப்பாவது தமிழ்நாட்டின் முதல் சிறந்த திட்டமாக இருக்கட்டும்

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today