தேவ அமிர்தம் சாப்பிடலாம் வாருங்கள் நண்பர்களே!!!

Last Forest Honey(Nilgiris)

படத்தில் காணப்படும் தேன் மலைத்தேன், இது நீலகரி மலையின் உயரமான பாறைக்குன்றுகளில் இருந்தும், மரங்களிலிருந்தும் ஆதிவாசி மக்களால் எடுக்கப்படுகிறது.

இந்த தேனை நான் வாங்கி வந்த போது தேனின் மருத்துவகுணங்களை பதிவாக விடுக்க தோன்றியது. அந்த அடிப்படையில் இதனை சமர்பிக்கிறேன். வீட்டில் இனி பலசரக்கு பொருட்கள் வாங்கும் போது அந்த பட்டியலில் தேனும் இடம்பெறட்டும். மறக்கமாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தேனை சாப்பிட சொல்லி ஊக்கப்படுத்தி உடல்நலத்தை மேம்படுத்துங்கள். நன்றி. இவ்வாறு நீங்கள் தேன் வாங்குவதால் இந்த தேனை சேகரிக்கும் ஆதிவாசி மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவுகறீர்கள் பதிவர்களே! 
"ஊளைச்சதை குறையும் வாந்தி
உள் வெப்பம் மாறுபசியுடன் ருசி கூடும்
கேளப்பா விக்கல் முக்க பரோகம் போம்
ஆமய்யா மரப்பொந்தின் தேனால்"- வைத்திய அந்தாதி

தாய்ப்பால் தலைசிறந்தது. அதற்கு இணையானது பசும்பால் என்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் மேலானது என்றால் அது தேன். தேனில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்கள் வேறு எதிலும் இல்லை என்பதை இந்த வைத்திய அந்தாதியும், தேவாரமும் விளக்குகின்றன. அதாவது மரப்பொந்தின் தேனை அருந்தி வந்தால், தனது உடலையே தான் தூக்க முடியாமல் நடக்கும் சிலரின் ஊளைச்சதை குறையும். பசி ருசி அதிகமாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும். விக்கல், இருமல், சயரோகம் என்னும் எலும்புருக்கி நோய் குணமாகுமாம்.

"ஐவகையிரு மலீனை விக்க லக்சிப்பிண்
மெய்யானவே தீரும் பசியும் வரும் கண்
பொய்யு மிலையிது மலைத்தேனே
உய்யும் மருந்திற் களுபானமாகும் மானே"- தேவாரம்

பெரிய மலைகளில் இருக்கும் பாறைகளில் மேல் உள்ள இடுக்குகளில் கட்டப்பட்டுள்ள கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேனுக்கு மலைத்தேன் என்று பெயர். இந்த மலைத்தேனை குறிஞ்சித் தேன் என்றும் சொல்வார்கள். இந்த மலைத்தேனை அருந்தினால் ஐந்து வகை இருமல்களான சிலேத்மகாசம்,சுவாசகாசம்,ஈளைஇருமல்,அள்ளு மாந்தம், சுக்கிருமல் ஆகியவை குணமாகுமாம்.

"வாமமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத் தேனே"-புலிப்பாணி
மாமரம், வேப்பமரம் போன்ற மரங்களின் உச்சாணிக் கொம்பில் ஒய்யாரமாய் தொங்கும் தேன்கூட்டில் எடுக்கப்படுவது கொம்புத்தேன். இந்த தேனை அருந்தினால் வாத நோய் குணமாகும். பித்தநோய்கள் மாறும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய் மறையும். பசியையும் ருசியையும் அதிகப்படுத்தும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
இப்படி தேனின் மருத்துவகுணம் பிரமிக்க வைக்கிறது.
இப்போது குறிப்பிட்ட வகையான தேனை சேகரிக்க தேன்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு தேன் சேகரிக்கப்படுகிறது. தேவ அமிர்தம் என்று கூறியிருக்கிறார்கள் தேனை. இந்த தேனில் என்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். நீர் 18 சதவீதம், கார்போஹைட்ரேட் 76 சதவிகிதம்,குளுபார்க்மி திரவ பிசின் 0.4 சதவீதம், உலோக சத்துக்கள் 0.2 சதவீதம் மற்றும் சர்க்கரை சத்துக்களும், பூக்களின் சத்துக்களும் உள்ளன. சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ்,டெக்ஸ்ட்ரியன் ஆகிய சர்க்கரை சத்துக்கள் உள்ளன.
டாஸ்டேஸ், கார்டலேஸ், லிப்பேஸ்,பெராக்ஸைடோஸ் ஆகிய நொதிப்பொருட்களும் உள்ளன. மக்னீசியா, பாஸ்பரிக்,இரும்பு,சுண்ணாம்பு சத்து ஆகியவும் சிறிதளவு உள்ளன. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய அளவு தேன் சிறிய உணவாக திகழ்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனில் 10 டீஸ்பூனில் இருக்க கூடிய பாலின் வலிமை அடங்கியிருக்கிறதாம்.300 கிராம் மாமிசத்தின் சத்துக்களும், 8 ஆரஞ்சுப்பழங்களின் சத்துக்களும் ஒரு டீஸ்பூன் தேனில் கிடைக்கின்றன.
தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். தேனை குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். பேதியை நிறுத்தும். இரத்த சோகை நோயை போக்கும். நரம்புகளுக்கு வலிமை தரும். தூக்கத்தை தரும். நீர்க்கோவையை சரிசெய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
தோல் சம்பந்தமான நோய்களை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமிநாசினியாக வேலை செய்யும். பற்கள், கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தீச்சுட்ட புண்கள், சிரங்குகள், ஆறாத இரணங்கள் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றல் பெற்றது.
உடல் பருமனை குறைக்கும். இரத்த அழுத்த நோய்களை குணமாக்கும். சூல ரோகங்களை போக்கும். நீண்ட ஆயுளை தரும்.பெண்களின் கருப்பை நோய்களை குணமாக்கும். உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.
இப்படி தேனை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ஆங்காங்கே தேன்பெட்டிகளை வைத்து விதவிதமான தேன்களை சேகரிக்கிறார்கள். என்ன வகையான தேன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
நாவல் மரத் தேன்
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து. காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் நெல்லிப்பொடி, 2 ஸ்பூன் நாவல் தேன் கலந்து குடித்தால் சர்க்கரை நோய், சிறுநீரக நோய்,கண் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். பற்கள் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
குங்குமப்பூ தேன்
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.உடல் பலம் மற்றும் நிறம் பெறும். இரத்தம் சுத்தமாகும்.
லிச்சி மரத்தேன்
லிச்சி பழம் தமிழ்நாட்டு பழங்களின் ராணி என்று கூறப்படுகிறது. இந்த பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட தேன் பல நோய்களை தீர்க்கிறது.
பூண்டுத் தேன்
இரத்தக் கொதிப்பை நீக்கும்.உடலில் கொழுப்பை கரைக்கும். இதயத்தை பாதுகாக்கும். நெஞ்சுச்சளி நீக்கும். உடல் எடையை குறைக்கும்.
இஞ்சித்தேன்
பல்வலி,வயிற்றுவலி,தலைவளி,சளி,இருமல்,ஆஸ்துமா,தொண்டைப்புண்ணை குணமாக்கும்.
துளசித்தேன்
இரத்தக்கொதிப்பை நீக்கும்.கல்லீரல்,மண்ணீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.பல்,எலும்புகளை பலப்படுத்தும்.
உலர்பழத்தேன்
உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி தரும்.இரத்தம் விருத்தியாகும்.நினைவாற்றல் அதிகரிக்கும்.மலச்சிக்கல் வராது.
அத்திப்பழ தேன்
மூலவியாதிக்கு நல்ல மருந்து.தலைவாதம்,தோல்நோய்,சிறுநீரக நோய்,கல்லீரல் பெருக்கம்,உடல்வெப்பத்தை சரிசெய்யும்.மூளைக்கு பலம் தரும். ஆண்மை விருத்திக்கு நல்லது.
ஆப்பிள் தேன்
நரம்புக்கும், மூளைக்கும் நல்ல பலம் தரும்.கீழ்வாதம், முடக்குவாதம்,தொண்டைப்புண்ணை நீக்கும்.காய்ச்சல்,சளி போன்றவை சரியாகும்.சீரண உறுப்பில் ஏற்பட்டிருக்கும் இரணங்களை நீக்கும்.
மாம்பழ தேன்
வைட்டமின் ஏ அதிகம் செரிந்தது என்பதால், கண் பார்வைக்கு நல்லது. கூந்தலை அதிகப்படுத்தும்.கணையம், கல்லீரலை பலப்படுத்தும். இதயத்திற்கு புத்துணர்வு அளிக்கும்.மூட்டுவலி, இரத்தக்கொதிப்பை நீக்கும்.
பேரீட்சை தேன்
வைட்டமின் சத்துக்களும்,தாதுக்களும் அதிகம் உள்ள தேன். இது ஒரு முழு உணவு. ஆண்மைக்குறைவை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
ரோஜாத்தேன்
உடல்பொலிவு பெற உதவும். கழிவு மண்டலம் சிறப்பாக இயங்க உதவும். மூலநோய் வராமல் இருக்க தொடக்க நிலை மருந்தாக பயன்படுத்தலாம்.காசநோய் குணமாக சிறந்த நிவாரணி.

இந்த தேன் சேகரிப்பாளர்களின் முகவரி
Last Forest
PB no-35
Kotagiri,
Nilgiris-17
phone: 4266 272277
துணுக்கு செய்தி-சோவியத் ரஷ்யாவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் நோயின்றி வாழ்ந்தவர்களை ஆய்வு செய்ததில் அவர்களின் பிரதான உணவாக தேன் இருந்தது தெரியவந்தது. தேன் சாதாரணமாக 50 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது. நமது நண்பர்களும் நலமாக வாழ இந்த தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்பபோமே!

தேனீப்பெட்டி, தேன் வளர்ப்பு பற்றிய விவரங்கள் அறிய
திருமதி.ஜோஸ்பின் செல்வராஜ்
விபிஸ் இயற்கை தேன் உற்பத்தியாளர்கள்,
புதூர்,மதுரை.
98655 55047.

5 கருத்துகள்: (+add yours?)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

vadai.............

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒரிஜினல் தேன் கிடைக்க மாட்டேங்குதே....

Thoothan சொன்னது…

உபயோகமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி. தேனை சுத்தம் செய்வதற்க்காக சூடாக்குவதினால்(தண்ணீர் பாத்திரத்தில் வைத்து சூடாக்குதல்) தேனின் குணம் மாறிவிடும் என்று படித்துள்ளேன். "Last forest" தேன் எப்படி பட்டது ஐயா?

கிரீன்இந்தியா சொன்னது…

அன்பு நண்பரே! சுத்தமான தேன் என்பதற்கு தகுதி என்பது அது "அக்மார்க்" தேன் தான் என்கிறது நமது அரசாங்கள். ஆனால் உண்மையில் மலைவாழ் மக்கள் மலைஉச்சியில் எடுக்கும் தேனில் அந்த தேனீயின் இறக்கை, கால்கள், கொடுக்கு உள்ளிட்டவைகள் இருக்கும் என்கிறார்கள். ஆனால் நான் பார்த்த வரைக்கும் அப்படி எதுவும் காணப்படுவதில்லை. தேனை ஏன் நீங்கள் சூடாக்க தேவையிருக்கிறது என்று தெரியவில்லை. சுத்தமான தேனை கண்டுபிடிக்க அந்த தேனை ஒரு பிளாட்டிங் பேப்பரில் விட வேண்டும். அப்போது அந்த தேன் சிதறிநகராமல் முத்தாக நின்றால் அது சுத்தமான தேன். பேப்பர் முழுவதும் விரவி பரவினால் அது கலப்பட தேன். அது போல் தேனை நாயின் முன் விட்டால், அந்த தேனை அது முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்தால் அது சுத்தமான தேன். நாய் நக்கினால் அது கலப்பட தேன் என்று எடுத்துக் கொள்ளலாம்

Thoothan சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பரே. தேனில் உள்ள தேனீயின் இறக்கை, கால்கள், கொடுக்கு, மற்றும் தூசுகளை நீக்குவதற்காக அதை சூடு செய்வார்கள்.தேனை நேரடியாக சூடு செய்ய கூடாது என்பதற்காக அதை சுடு தண்ணீர் பாத்திரத்தில் வைத்து சூடக்குவார்கள். ஆனால் இப்படி சூடக்குவதினால் தேனின் குணம் சற்று மாறிவிடும். நீங்கள் கூறுவதில் இருந்து "Last Forest" தேனும் இப்படி சுத்தம் செய்ய பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறன். தேனடையில் இருந்து தேனை எடுத்து அப்படியே குப்பிகளில் அடைத்து விற்கப்படும் தேன் எதாவது உண்டா? இப்படிப்பட்ட தேன் உடலுக்கு குளுர்ச்சி என்று ஒரு ஆயுர்வேத நூலில் படித்துள்ளேன்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today