சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவுபருவ நிலை மாற்றத்திற்கு தக்க உணவுகளை உண்டு வந்தால் உடல் நலன் மேம்படும் என்ற அடிப்படையில் இந்த பதிவு. பொதுவாக சீசனில் கிடைக்கும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை செய்பவை. இந்த பதிவு ஒரு நாளிதழில் வந்தது. ஆனாலும் இதில் குறிப்பிட்டுள்ள காய்கறிகளையும், பழங்களின் மருத்துவக்குணங்களையும் அலசிப்பார்த்தால் அவை அந்தந்த மாதங்களின் சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை என்பதால் அந்த இதழில் வந்த உள்ளடக்கத்தை இங்கு தருகிறேன்.
ஜனவரி
கோதுமை உணவுகள் இந்த மாதத்திற்கு அதிகம் ஏற்றது. காபி கொட்டையை வறுத்து மல்லியோடு சேர்த்து தூளாக்க வேண்டும். அதில் மிளகு சேர்த்து காபி தயாரித்து பருகவேண்டும். கரும்புச்சாறு பருகலாம். உளுந்து சேர்த்த உணவுகள் அதிகம் சாப்பிடலாம். ரசம் தயாரிக்கும் போது புளியை குறைவாக சேர்த்து மிளகு அதிகம் சேருங்கள். சாம்பார் தயாரிக்கும் போது மஞ்சள் தூள் அதிகம் சேர்த்திடுங்கள்.
பிப்ரவரி
வாழைத்தண்டு கூட்டு, மல்லி இலை துவையல்,நெல்லிக்காய்,முருங்கை இலை மற்றும் இதர கீரை வகைகளை அதிகம் உணவில் சேருங்கள். பாகற்காய் கூட்டு நல்லது. எருமைப்பால் சேர்த்த பால் கஞ்சி பருகலாம்( ஆவின் பால் என்றால் அது பசும் பால் என்று நினைத்து விடாதீர்கள். அதிலும் எருமைப்பால் இருக்கிறது. ஊரில் இருக்கும் பசு,எருமை என்று வித்தியாசமில்லாமல் சேகரித்து பால் பிளாண்டில் சூட்டிலும், பிறகு அதிக குளிர் அறையிலும் பதனப்படுத்தி தான் ஆவின் பால் என்று பாக்கெட்டுகளில் வருகிறது)
பப்பாளி, வெள்ளரிக்காய்களை சாப்பிடலாம்.
திராட்சை, கேரட்டில் ஜுஸ் தயாரித்து சாப்பிடலாம்
கார உணவு வகைகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள்.
மார்ச்
கொதித்து ஆறிய நீரில் தேன் கலந்து பருகுங்கள்.
மோர் அதிகம் குடிக்கலாம்.
தர்ப்பூசணி சாறு குடிக்கலாம்
வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்
தேங்காய், வெண்டைக்காய்,சுரைக்காய், கோவைக்காய் போன்றவற்றை சேருங்கள்.
எருமைப்பாலில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குளிர வைத்து பருகலாம்.
இளநீர் பருகலாம்
உணவில் அதிக புளிப்பு இனிப்பு சேர்க்க கூடாது
ஊறுகாய் வகைகள்,வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஏப்ரல்
பேரீச்சம் பழம்,வாழைப்பழம்,திராட்சை பழம் போன்றவைகளை அதிகம் சாப்பிடலாம்
வாழைப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு மண்பாத்திரத்தில் போட்டு புளிக்க வையுங்கள். அந்த சாறை வடித்து இன்னொரு மண்பாத்திரத்தில் ஒரு மணிநேரம் வைத்திருந்தூ விட்டு பருகுங்கள்.
தேங்காய் தண்ணீர் அதிகம் பருகலாம்.
தண்ணீரில் கருங்காலி கட்டை, சந்தனம், வெட்டி வேர் கலந்து பருகலாம். இந்த தண்ணீரை மண்பாணையில் வைத்து பருகுவது நல்லது.
கோழி முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிருங்கள்.
சிறிய வகை மீன்களான கூட்டு, குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.
மே
எள், உளுந்து, பெரும்பயறு போன்றவைகளை உணவில் அதிகம் சேருங்கள்.
தேன் நல்லது. ஆட்டுப்பால் கிடைத்தால் கண்டிப்பாக பருகுங்கள். இஞ்சியின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்.

ஜுன்
கொய்யா, பப்பாளி பழம் அதிகம் சாப்பிடலாம்.
ஆடு,கோழி சூப் பருகுங்கள்.
பழச்சாறுகளை குளிர வைத்து சாப்பிடலாம்.
தேன்,சீரகம் கலந்த நீர் பருகுங்கள்.
மாம்பழம், அன்னாசி பழம் சாப்பிடலாம்.
கரும்புச்சாறு, எருமைப்பால் சர்க்கரை சேர்த்த பால் நல்லது. திராட்சை,சீதாப்பழம் சாப்பிட வேண்டாம்.
ஜுலை
கீரை வகைகளை உணவில் அதிகம் சேருங்கள்.
பெரும்பயறு,கடலை,கொள்ளு போன்றவற்றை வேக வைத்து சூப் தயாரித்து பருக வேண்டும்.
வெண்டைக்காய்,முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு,கேரட் போன்றவற்றை குறைத்து பயன்படுத்துங்கள்.
பாலில் சர்க்கரை சேர்க்காமல் பருகுங்கள்.
ஆகஸ்ட்
சிறிதளவு புளி, உப்பு, தேன், நெய் ஆகியவை சேர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
புழுங்கல் அரிசி உணவு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
காய்கறிகளை உணவில் அதிகம் சேருங்கள்.
முருங்கை இலை தவிர மற்ற கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செப்டம்பர்
சிறுபயறுகளை உணவில் அதிகம் சேருங்கள்.
புடலங்காய் அதிகம் சேருங்கள்.
அக்டோபர்
நெல்லிக்காயை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ அடிக்கடி சேருங்கள்.
புடலங்காயை அதிகம் சேர்க்கலாம்.
நவம்பர்
அரிசி மாவு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
கோதுமை உணவுகளையும் சேர்க்கலாம்.
உளுந்து சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்
கிழங்கு வகைகளையும் உணவில் சேர்க்கலாம்.
டிசம்பர்
சேணைக்கிழங்கை உணவில் அதிகம் சேருங்கள்.
மல்லியும், சீரகமும் அதிகம் பயன்படுத்துங்கள்.
சுக்கு,இந்துப்பு,பூண்டு போன்றவைகளின் அளவையும் அதிகப்படுத்தலாம்.
அரிசி மாவு, வெல்லம் சேர்க்கும் உணவுகள் நல்லது. கோதுமையுடன் பால் சேர்க்கும் உணவுகளை அதிகமாக தயாரித்து சாப்பிடுங்கள்.
மல்லி காபி பருகலாம்,
மிளகை உணவில் அதிகம் சேருங்கள்.

எளிய முறையில் சத்து மிகுந்த காய்கறி சூப்
காய்கறிகளை சூப் வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் திரவ வடிவில் எளிதில் கிடைக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். கீழ்க்கண்ட வடிவில சூப்பை நீங்கள் எளிதாக தயாரிக்கலாம். நான் இங்கு உதாரணத்திற்காக தக்காளி, பீட்ரூட் சூப் தயாரிப்பது பற்றி கொடுத்துள்ளேன்.
தேவையான பொருட்கள்
தக்காளி சாறு- சிறிதளவு, வேகவைத்து துருவிய பீட்ரூட்-250 கிராம், துருவிய காரட்-1, வெங்காயம்-1, கிரீம்- 1 டேபிள்ஸ்பூன், வெண்ணை- சிறிதளவு, தண்ணீர்-6 கப், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு.
செய்முறை
பீட்ரூட் தவிர மற்ற எல்லா காய்கறிகளையும் வெண்ணையில் வதக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி இவற்றை வேகவைத்து பிறகு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதை விட தயிர் மத்து இருந்தால் மண்கலயத்தில் போட்டு நன்றாக கடைந்து கொள்ளவும். இப்படி கடைந்த காய்கறியுடன் தக்காளி சாறு, உப்பு,மிளகு, துருவி வைத்துள்ள பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கீரிம் சேர்த்து சூடாக பரிமாறவும். பீட்ருட்டுக்கு பதிலாக நீங்கள் வேறு எந்த காய்கறியும் சேரத்துக் கொள்ளலாம் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி.
சத்து மிகுந்த சூப் ரெடி.
உடற்பயிற்சி முடித்த சிறிது நேரம் கழித்து இந்த சூப்பை குடித்து பாருங்கள். அபாரமாக இருக்கும். உடம்பில் ஒரு புத்துணர்வு இருக்கும்.
(தற்போது நாம் உணவில் சேர்க்கும் சாதாரண உப்பால் உடலில் ஏராளமான நோய்கள் வருகின்றன. இதற்கு பதிலாக இந்துப்பு என்ற பாறை உப்பை பயன்படுத்தலாம். இந்த உப்பு நாட்டு மருந்துக்கடைகளிலும், இயற்கை உணவு கடைகளிலும் கிடைக்கும். இதன் பயன் உடலுக்கு அதிகமான நன்மை தரும். இந்துப்பு பற்றிய பதிவை தனியாக இடுகிறேன்.)

3 கருத்துகள்: (+add yours?)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெளிநாட்டுல இருக்குற எங்களுக்கும் டிப்ஸ் சொல்லுங்க.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐ வடையும் எனக்கே..........

D.R.Ashok சொன்னது…

மிகவும் உபயோகமான பதிவு

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today