இந்திய ஏழைகளே, நடுத்தரவர்க்கமே .........

என்டோசல்பானை தடை செய்ய கேட்டு விடுக்கப்பட்டுள்ள போஸ்டர்
poster by- pesticide action network asia and pacific 
ண்டோசல்பான்-பொதிகை தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு தோன்றும் விவசாய அதிகாரிகள் 'கத்திரிக்காயில் தோன்றும் காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தவும், பருத்தியில் இலைசுருட்டுப்புழு தாக்காமல் தடுத்து மகசூலை பெறவும் விவசாயிகள் எண்டோசல்பானை பயன்படுத்தி லாபம் பெறுமாறு ' இந்த மருந்தை பயன்படுத்த சொல்லி விவசாயிகளை கேட்டுக்கொள்வார்கள். விவசாயியும் எண்டோசல்பானை செடிகளுக்கு தெளித்து கத்தரிக்காயையும், பருத்தியையும் புழுக்களிடமிருந்து காப்பாற்ற படாத பாடுபடுவார்கள்.

இந்த மருந்தைப் பற்றியோ, இதன் விஷத்தன்மை பற்றியோ ரசாயனங்களை பற்றிய அறிவாற்றல் இல்லாத விவசாயிகளுக்கு தெரிந்திருக்க போவதில்லை. ஆனால் இந்த எண்டோசல்பனால் மனித குலம் சிறிது சிறிதாக ஊனமாகி விடும் என்று மனித உரிமை ஆணையம் சமீபத்தில் கண்டித்துள்ளது. எண்டோசல்பான் மருந்தை பயிர்களுக்கு தெளிப்பதை உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

ஜனவரி 1 ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தால் இந்த வேண்டுகோள் உலகநாடுகளுக்கு விடுக்கப்பட்டது. இந்த ஆணையம் சமர்பித்த அறிக்கையில், " தெளிப்பான்கள் (sprayers) மூலம் எண்டோசல்பான் மருந்தை பயிர்களுக்கு தெளிப்பதால், இந்த பயிரில் விளைந்த உணவுப்பொருளை உண்ணும் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். பிறக்கும் குழந்தைகள் மனநிலை தவறி பிறக்க வாய்ப்புண்டு. மேலும் பல்வேறு உருமாற்றங்களுடனும் கூடிய குழந்தைகள் பிறக்கவும் நேரிடலாம். இத்துடன் இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்,பெண் இனப்பெருக்க வேறுபாடுகள் தோன்றும் போது அது மாறுபட்ட குணநலன்களை கொண்டதாக இருக்கலாம். இந்தியாவில் கேரளா அரசு மட்டும் தான் தனது மாநிலத்தில் விவசாயிகள் எண்டோசல்பானை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
என்டோசால்பான் மருந்தின் விளைவு இப்படி தான் இருக்கும் !!!
 இந்தியா முழுவதும் இந்த நச்சுமருந்து பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். நாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த நச்சு மருந்து பற்றி மேற்கொண்ட ஆய்வில் இந்த மருந்து ஏற்படுத்திய கொடிய விளைவுகள் தெரிய வந்துள்ளது. இன்னும் அதிக அளவு பாதிப்பை இந்திய குடிமக்களிடையே இந்த மருந்து ஏற்படுத்துவதற்குள் இந்த மருந்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்".
இப்படி மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் கோரியுள்ளது.

எண்டோசல்பான் மருந்தை தடை செய்ய உலகநாடுகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு தெரிவித்த ஓட்டளித்தநிலையிலும், இந்த மருந்தை தடை செய்வதை எதிர்த்து  ஓட்டளித்தது இந்திய அரசு . 2002 ஆம் ஆண்டில் 60 நாடுகள் இந்த மருந்தை தடை செய்து விட்டன. அந்த நாடுகளில் விவசாயத்தில் இந்த மருந்து இம்மியளவு கூட பயன்படுத்தப்படுவதில்லை. எண்டோசல்பானால் இதுவரை தீயவிளைவுகள் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று ஒரு பதிலை சொல்லியிருக்கிறது இந்தியா.

நாம் தினமும் வாங்கும் காய்கறிகளில் என்டோசல்பான்இருக்கலாம்.கவனம்.
முடிந்தால்  இயற்கை முறை விவசாயத்தில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள்.
7 கருத்துகள்: (+add yours?)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பதிவுக்கு நன்றி விஷயம் அறிந்து கொண்டோம்...

கிரீன்இந்தியா சொன்னது…

திரு நாஞ்சில் மனோ தங்கள் வருகைக்கு கருத்துக்கு நன்றிகள்.
வணக்கம்

பெயரில்லா சொன்னது…

என்ன செய்வதென்று தெரியவில்லை

உங்களில் ஒருவன் சொன்னது…

சார், நான் இதை 1 மாதம் முன்பே we ate poison என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டேன், ஆனால் மக்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. எனக்கும் வெறுத்துபோய் விட்டது இந்தியாவில் இருக்க, வெளிநாட்டு காரனுக்கு எதிராக நடந்த சுதந்திரப்போர் போல இன்னொரு சுதந்திரப் போர்தான் செய்யவேண்டும் உள்நாட்டு மக்களிடம் நம் மக்களை காப்பாற்ற. வேறு வழியில்லை

விஜய் சொன்னது…

//முடிந்தால் இயற்கை முறை விவசாயத்தில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள்.//

சென்னைவாசிகளான எங்களுக்கு இயற்கை முறையில் பயிர் செய்யப்பட காய்கறிகள் கிடைப்பது அரிது. :-(
நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

உமாபதி சொன்னது…

payanulla pathivu

vasan சொன்னது…

இந்த‌ கொள்ளையில் போகிற‌வ‌ர்க‌ளுக்கு இடையே கொஞ்ச‌ம் ந‌ம்பிக்'கை'ஊட்டும் ம‌னித‌ர் ஜெய‌ராம் ரமேஷ் அவ‌ர்க‌ள். பி டி க்கும், ஸ்டெர்லைட்டுக்கும், லாவாசாவிக்கும் அவ‌ர் லாவ‌ணி பாடாம‌லிருப்ப‌து கொஞ்ச‌ம் ஆறுதல். சுர‌ங்க‌த்தின் முடிவில் சிறு வெளிச்ச‌ம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today