சணலில் பல அதிசயம்-நீங்களும் பயன்படுத்தி பார்க்கலாமே!சணலை வைத்து பெரிதாக என்ன செய்து விட முடியும்? மிஞ்சிப் போனால் பொட்டுக்கடலை மடிக்க முடியும் என்பது தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலை. தற்போது சுற்றுச்சூழலை காக்க மனிதனின் முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிய புதிய சூழலுக்கு உகந்த பொருட்களை கண்டுபிடிப்பதில் தாவுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் தற்போது பாலித்தீன் பைகளுக்கு தடைவிதித்திருக்கிறார்கள்.

காரணம், பாலித்தீன் இந்த பூமிப்பந்தில் மக்கி போகாமல் பல கெடுதல்களை விளைவிக்கிறது. ஆனால் மழை பெய்யும் போது இயற்கையாகவே பூமியில் விழும் தண்ணீரானது மீண்டும் பூமிப்பந்துக்குள் செல்கிறது. இப்படி போகும் மழைநீரை பூமிக்குள் இறங்க விடாமல் தடுப்பது எதுதெரியுமா?பாலித்தீன்பைகள் தான். 
பாலித்தீன் பைகள் அதிகரித்தால் பூமிக்குள் தண்ணீர் செல்லாமல் பூமியின் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு போய் விடும். இதுவரை தெரிந்தோ தெரியாமலோ பாலித்தீன் பைகளை பயன்படுத்தி விட்டோம். இனி வருங்காலங்களில் இதன்பயன்பாட்டை குறைக்க முயல்வோம்.

சரி...பாலித்தீன் பைகளுக்கு மாற்று தான் என்ன?
மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கைவினைப்பொருட்கள் விலையும் ஒரளவு கட்டுப்படியாகும் படி தான் இருக்கிறது.காய்கறி வாங்க உதவும் சிறிய பைகள், டிபன் பாக்ஸ் வைக்க, மொபைல் போன் வைக்க, அலுவலக பைல்களை வைக்க, மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ்ஸ் பயன்படுத்த என்று விதவிதமான சணலால் ஆன பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.


நீங்கள் இவற்றை வாங்கி பயன்படுத்தி சுற்றுசூழலுக்கு சிறிய பங்களிப்பை தரலாமே!இவற்றை வாங்க விரும்பினால் jayanthibalakrishnan@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

1 கருத்துகள்: (+add yours?)

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today