வெயிலின் கொடுமையை சமாளிக்க மூங்கில் காட்டன் கலந்து நெய்யப்பட்ட சேலைகள்புல்லாங்குழலின் இசையால் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கோகுலத்து கண்ணனின் கையிலும் தவழுவது புல்லாங்குழலே. இயற்கையின் அதிசயமான மூங்கில் மரத்தை எடுத்து அதில் சிறிய துளைகள் இட்டால் அசத்தும் ராகத்தை அது எழுப்புகிறது. மூங்கில் மனிதனுக்கு பல பயன்களை தருகிறது. தற்போது பணக்காரர்கள் உருவாக்கும் பண்ணை வீடுகள் பல மூங்கிலை பிரதானமாக வைத்தே கட்டப்படுகிறது.

இளம்பச்சை நிறத்தில் பார்க்க ரம்மியமாக காட்சி தரும் மூங்கில் தற்போது பெண்கள் உடுத்தும் சேலையாக மாறியிருக்கிறது. மூங்கிலை எப்படி சேலையாக கட்ட முடியும்? முடியும் என்று நிருபித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே எனது பேப்பர் ஜுவல்லரி தயாரிக்கும் சென்னை ஸ்ரீகீர்த்தி பேஷன் பொட்டீக் பற்றி எழுதியிருந்தேன்.

http://greenindiafoundation.blogspot.com/2011/03/blog-post_03.html
முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேஷன் பொருட்களை மட்டுமே தயாரித்தும், வாங்கியும் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பு தான் மூங்கில்+காட்டன், வாழை நார்+ காட்டன் கலந்த சேலைகள், இயற்கை சாயத்தால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான டாப்ஸ் மற்றும் ஆண்களுக்கான நவீன சட்டைகள். பார்க்க மிகவும் அழகாகவும், மிகவும் எடை குறைவாகவும் இருக்கும் இந்த ஆடைகள் நம்மை அசத்துகின்றன.


தற்போது தொடங்கியிருக்கும் வெயிலின் கொடுமையை சமாளிக்க இந்த ஆடைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். குறிப்பாக மூங்கில் காட்டன் கலந்து நெய்யப்பட்ட சேலைகள் மிகவும் ரம்மியமாக இருக்கின்றன.  இது போல் வாழை நாரும் காட்டனும் கலந்து நெசவு செய்யப்பட்ட சேலைகளும் மனதை கொள்ளை கொள்ளுகின்றன.

நாம் வழக்கமாக உபயோகிக்கும் பாலியஸ்டர் உடைகள் சுற்றுச்சூழலை வெப்பமாக்கி வருகின்றன என்கிறார்கள். எனவே இந்த பாலியஸ்டர் மற்றும் நைலான் உடைகளின் பயன்பாட்டை குறைத்து இது போன்ற ஆடைகளையும் தேர்வு செய்வோமே!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள இந்த ஷோரூம் எண்-
99624 00820, 99623 00820

 உங்கள் பார்வைக்காக இங்கே சில மூங்கில், வாழை நார் மற்றும் காட்டன் கலந்த சேலை மற்றும் இயற்கை சாயத்தில் தோய்த்து தயாரிக்கப்பட்ட டாப்ஸ்களின் மாடல்கள்.....

1 கருத்துகள்: (+add yours?)

பெயரில்லா சொன்னது…

Good

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today