கோடையை சமாளிக்க சுங்குடிக்கு மாறலாமே!


உஷ்....அப்பாடா! எப்போது தான் கத்தரி வெயில் முடியுமோ என்று அலுத்துக் கொள்கிறீர்களா? இயற்கையை சொல்லி குற்றமில்லை. அதனிடமிருந்து நம்மை தக்க வைத்துக் கொள்ள சில மாற்றங்களை நாமே ஏற்படுத்திக் கொள்வதன் வழியாக மட்டுமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுவாக கோடை வெப்பத்திற்கு பருத்தி ஆடைகள் தான் சிறப்பு. பருத்தி ஆடைகள் உடலின் வியர்வயை உறிஞ்சி விடுகிறது. உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. உடம்பில் இருப்பதே தெரியாது.

இதனால் தான் முன்னெப்போதையும் விட தற்போது 100% காட்டன் ஆடை ரகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. இந்த கட்டத்தில் மதுரையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான " சுங்குடி சேலைகள்" பற்றி குறிப்பிடுவது அவசியம். உடலில் இருப்பதே தெரியாத மென்மை, வெப்பத்தை உடலுக்கு கொண்டு வராத திறன் என்பது இதன் சிறப்பு.

இதில் தற்போது பாலி காட்டன் என்ற பெயரில் செயற்கை இழை கலந்தும் தயாரிக்கிறார்கள். காலத்திற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்படி தயாரிக்கப்பட்டாலும் காட்டன் சுங்குடி பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.
இந்த வகை சுங்குடி சேலைகளை மதுரை அவனியாபுரம், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் பலரும் கைநெசவாக உற்பத்தி செய்கிறார்கள்.


இந்த சுங்குடி முழுவதும் இயற்கை சாயத்தால் ஆன நூலால் நெய்யப்படுவது இதன் தனிச்சிறப்பம்சம். இதைத் தான் தற்போது ஆர்கானிக் காட்டன் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல் கண்காட்சி அறைகளில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்து விற்பனை செய்கிறார்கள். முந்தி வேலைப்பாடுகள் அசத்துகின்றன. ஆர்டர் கொடுத்தால் விருப்பமான கலர்களில் நெய்து கொடுக்கிறார்கள்.

ஒரு தடவை உடுத்தி விட்டு மறுமுறை துவைக்கும் போது கஞ்சி போட்டு காயப்போடும் போது அதன் தன்மை புதியது போல் இருக்கிறது. சில சுங்குடி சேலைகளின் வேலைப்பாடு காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கூட விஞ்சும் வகையில் இருக்கிறது.

முன்பெல்லாம் சுங்குடி என்றாலே, வெறும் பொட்டு அல்லது ப்ளைன் என்ற அளவில் தான் வேலைப்பாடுகள் இருக்கும். ஆனால் தற்போது எம்ப்ராய்டர், ஜரிகை, பீட்ஸ், முந்தியில் சிறப்பான வேலைப்பாடுகள் என்று நவீனப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுக்கு ஏற்ற பிளவுஸ்களும் கூடவே இணைக்கப்பட்டுள்ளன.

சின்னாளப்பட்டி சுங்குடி என்று ஒரு ரகம் நீண்டகாலமாக சந்தையில் தனி மதிப்பை பெற்றிருக்கின்றன. பட்டு நூல் கலந்து தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகளை மிகப்பெரிய பணக்காரர்களும் வாங்கி உடுத்துகிறார்கள். இவற்றை டிரை வாஷ் பண்ணி உடுத்தும் போது மிக அழகாக எப்போதும் ஒரே பொலிவுடன் இருப்பது கண்கூடு. தற்போது அவ்வளவாக ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தொழில் இன்னும் குடிசைத் தொழிலாகவே இருந்து வருகிறது.

ஆனால் ஒரு சிலர் இந்த சுங்குடிகளை மலேசியா, சிங்கப்பூர் என்று ஏற்றுமதியும் செய்து வருகிறார்கள். இந்த சேலைகளின் விலை 250 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையும் இருக்கிறது.

நீங்களும் இது போல் சிறு தொழில் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுத்தல் இந்த தொழில் சிறக்கும். வெயில் காலத்திலாவது இதுபோன்ற சேலைகளை உடுத்தி உடலை காத்துக் கொள்ளலாமே!

இந்த சுங்குடி சேலைகளை மொத்தமாக வாங்க ஒரு மின்னஞ்சல் (treesday@gmail.com)அனுப்புங்கள். இது பற்றிய டிசைன்கள், விலை விபரங்களை உங்களுக்கு அனுப்ப முடியும்.


உங்களுக்கு தெரியுமா? பட்டு சேலைகளை பாதுகாக்க பத்தமடை பெட்டி
தமிழ்நாட்டிலேயே ஒன்றிரண்டு இடங்களில் தான் பத்தமடை பெட்டி தயாரிக்கப்படுகிறது. சரி..பத்தமடை பெட்டி என்றால் என்ன என்பது தானே உங்கள் கேள்வி. பத்தமடை என்பது ஒரு வகை புல்.

இதிலிருந்து படுக்க பயன்படும் பாய் தயாரிக்கிறார்கள். ஆனால் இந்த பாயை கொண்டு நீண்டகாலமாக சேலைகளை பாதுகாக்க பயன்படும் பெட்டியும் தயாரிக்கப்படுகிறது. கேரளா, மும்பை, பெங்களுர் தொடங்கி அமெரிக்கா வரை கூட இந்த பெட்டி பறக்கிறது.


மிகவும் விலை மதிப்புள்ள பட்டு சேலைகளை இரும்பு பீரோக்களில் வைக்கும் போது, அந்த இரும்பு பீரோக்கள் வெளிப்புற வெப்பத்தை வாங்கி பீரோவின் உள் வைத்துக் கொள்கிறது. இந்த வெப்பம் பீரோவின் உள்புறத்தில் பாதுகாக்கப்படும் சேலைகளை பாதிக்கிறது.

இதனால் பட்டு சேலை மிக விரைவில் நிறம் மங்கி விடுகிறது. ஜரிகை பொலிவை இழந்து போகிறது. ஆனால் இந்த விலை உயர்ந்த பட்டு சேலைகளை பத்தமடை பாயினால் ஆன பெட்டியில் வைத்து பாதுகாக்கும் போது, இந்த சேலைகள் சுற்றுப்புற வெப்பம் மற்றும் அதீதமான குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.


இதனால் பட்டு சேலைகள் எப்போதும் புத்தம் புதிய தோற்றத்தை தருகின்றன. இந்த பெட்டிகளை நீங்கள் வாங்கி உங்கள் உயர்ந்த விலையுள்ள சேலைகளை பாதுகாக்க வேண்டுமா........ஒரு மின்னஞ்சல் (treesday@gmail.com) அனுப்புங்கள். இதன் விலை 500 ரூபாய்.

2 கருத்துகள்: (+add yours?)

இராஜராஜேஸ்வரி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இராஜராஜேஸ்வரி சொன்னது…

உபயோகமான குறிப்புகளுக்குப் பாராட்டுக்கள்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today