பாம்புகள் கடித்தால் எளிதான மருந்து இது.அரசு கவனிக்குமா ?தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டால் பாம்புக்கடியும் அதிகமாகி விடுவதுண்டு. வயலுக்கு செல்லும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவது வழக்கம். பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அவசர சிகிச்சைக்கு உட்படுத்ததாத நிலையில் மரணம் நிச்சயம். பொதுவாக ஆங்கில மருத்துவம் எங்கும் தீவிரமாக வியாபித்து பரவியிருக்கும் நிலையில் அது தான் சிறந்த மருந்துகளை தரும் என்பதும் பரவலான நம்பிக்கை.

ஆனால் ஓமியோபதியில் ஏராளமான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்துகள் இருக்கின்றன. மருந்து தயாரிப்பு மாபியாக்கள் இந்தியாவை பொறுத்தமட்டில் இது போன்ற குறைந்த செலவில் குணப்படுத்தும் மருத்துவத்தை எழுச்சி பெறவிடாமலே வைத்திருக்கின்றனர் என்பது சமூவியலாளர்களின் கருத்து. கடுமையான இதய நோய் பாதிப்பு, கடுமையான சர்க்கரை நோயாளர்கள் கூட ஓமியோபதியின் சிறப்பான மருந்துகளால் நலமாக இருப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா
 இது போல் பாம்புக்கடியால் மரணத்தை தழுவ இருப்பவர்களை ஓமியோபதி மருந்துகள் எளிதாக குணப்படுத்தக்கூடும். அரசு மருத்துவமனைகள் எங்கோ நகரத்தில் இருக்கும் போது, கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு முதலுதவி கிடைப்பது கடினம். இந்த நேரத்தில் ஓமியோபதி சிறந்த உயிர்காப்பானாக இருக்க முடியும். தமிழகத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனை கருத்தில் கொண்டு ஓமியோபதி மருத்துவத்தை கிராமங்களுக்கு பரப்பினால் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படும்.

சிவன் கழுத்தில் பாம்பு எப்போதும் ஒரு சின்னம். இந்த பாம்புகள் மனிதனுக்கு மிகமிக உதவிகரமான ஒரு ஊர்வன இனம். இந்த பாம்புகள் மனிதனை ஒரு போதும் விரோதியாக பார்ப்பதில்லை. பதிலாக, மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களை அழிக்கும் எலிகளை கொன்று வாழ்கின்றன. வாழ்ந்து மடிவதற்குள் ஆயிரக்கணக்கில் குட்டிகளை போட்டு மனிதனின் பயிர்களை அழிக்கும் இந்த எலிகளை குறி வைத்து தான் பாம்புகள் வாழ்கின்றன. ஆனால் நண்பனாக இருக்கும் இந்த பாம்புகளை மனிதன் விரோதியாக நினைப்பது தான் வேதனை. 

எலியை தேடி
பாம்புகளுக்கு தான் ஊர்ந்து போவது மனிதன் வகுத்த வாய்க்கால் வரப்பு என்றோ, அவன் உழைத்து உணவை உருவாக்கும் வயல் என்பதோ தெரிவதில்லை. அவை எலியை தேடி வயலுக்கு வருகின்றன. அவ்வளவு தான். அப்படி வரும் இடத்தில் மனிதன் அவற்றை எதிர்கொள்ளும் போது மனிதனுக்கும், பாம்புக்குமான போராட்டத்தில் பாம்பு மனிதனால் அடித்துக் கொல்லப்படுகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இப்படி பாம்பால் கடிபடுபவர்களும், பாம்புகள் மனிதரால் அடித்துக் கொல்லப்படுவதும் தாராளமாக நடக்க தொடங்கும். நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டது போல் அனைத்து பாம்புகளும் விஷமுள்ளவை அல்ல.

அதைவிட வயல் என்றால் பாம்பு வரத்தான் செய்யும். நாம் தான் அதை கவனித்து நடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்க வேண்டும். பாம்புகளை அழித்தால் நாளடைவில் வயல்களில் எங்கு நோக்கினும் எலிகள் ஆயிரக்கணக்கில் நிறைந்து விடும். பிறகு விளைந்த நெல்மணிகளை எல்லாம் எலியின் வளைக்குள் தான் அறுவடை செய்ய வேண்டியதிருக்கும். எனவே, பாம்புகளை மட்டும் அடித்துக் கொல்லாதீர்கள். சிறிது கவனமெடுத்து அவற்றை விட்டு விலகி நில்லுங்கள். பாம்புகள் பொதுவாக தானே விலகிச் சென்றுவிடும் இயல்பு கொண்டவை.

நிச்சயம் மருந்து இருக்கிறது
 அதையும் மீறி பாம்புகள் கடித்தால் நிச்சயம் மருந்து இருக்கிறது. தற்போது நாம் எதற்கெடுத்தாலும் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்று தான் முடிவுக்கு வருவதுண்டு. ஆனால் பல்வேறு நோய்களை ஆங்கில மருத்துவம் முழுமையாக குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை. பாம்பு கடிக்கு உடனடி நடவடிக்கையாக கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் அதன் விஷத்தை முறிக்கும் எதிர் மருந்துகளை டாக்டர்கள் செலுத்தி கடிபட்டவரை முடிந்த வரை பிழைக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் இந்த மருந்துகளை விட ஓமியோபதி மருத்துவத்தில் மிக எளிதாக பாம்பு விஷத்தையும், பாம்பு தீண்டியதால் ஏற்படும் துயரத்தையும் விரைவாக குறைக்க முடியும் என்று தெரிகிறது. 

நஞ்சுள்ள நாகம் தீண்டினால் மற்ற முறைகளை காட்டிலும் ஓமியோபதியில் சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க முடியும். முதலில் கடிவாய்க்கு இரண்டு அங்குலம் மேலே ஒரு கயிற்றால் இறுக்கமாக கட்ட வேண்டும். இந்த கட்டுக்கு மேல் மேலும் இரண்டு மூன்று கட்டுக்களை கட்டலாம். பிறகு கடிவாயில் கடிபட்டவரோ அல்லது உதவியாளரோ வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும். அப்படி உறிஞ்சி எடுப்பவரின் வாயில், நாக்கில், உதட்டில் புண்கள் இருக்கக்கூடாது. இப்படி உறிஞ்சி எடுத்த பிறகு கடிவாயைக் கத்தியால் ஆழமாய் கீறி எடுத்து அந்த இடத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட்டினால் அரை மணி நேரத்திற்கு மேல் நன்றாக கழுவ வேண்டும். இதன் பிறகு அந்த கட்டுக்களை அவிழ்க்கலாம். ஆனால் கடிபட்டவரை தூங்க அனுமதிக்கக்கூடாது.
பிராந்தி, விஸ்கி
 மேலே கூறியபடி இறுக்கமான கட்டுக்களை கட்டி விஷத்தை உறிஞ்சிய பிறகு முடிந்தால் கடிபட்ட இடத்திற்கு மேல் சிறிது தூரத்தில் அனலைக்காட்ட வேண்டும். இதனுடன் கடிவாயில் எண்ணெய் அல்லது எச்சிலை தடவிக் கொண்டேயிருக்கவும். கடிபட்டவருக்கு விஷத்தின் விளைவுகள் குறையும் வரை அனலைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கலாம்.

இதைச் செய்யும் போதே, அடிக்கடி உப்புதண்ணீரை குடிக்க குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சமயத்தில் அபாயகரமான அறிகுறிகள் தோன்றினால் மூன்று டீஸ்பூன் ஆல்கஹாலை ( பிராந்தி, விஸ்கி) போன்றவற்றை மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை முன்னேற்றம் ஏற்படும் வரை கொடுத்துக் கொண்டேயிருக்கலாம். விஷத்தின் குறிகள் எப்போது ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பிராந்தியை தரலாம். இப்படி செய்து கொண்டே ஓமியோபதி மருந்துகளை பிரயோகிக்கலாம்.

அதாவது, கடிபட்டவர் விரைவாக சோர்வடைதல், குத்துவது போன்ற வலி அதிகமாகவும், இந்த வலி இதயத்தை நோக்கி செல்வது போலவும், வாந்தி, மயக்கம், தலை சுற்றல், கடிபட்ட இடத்தில் நீல நிறம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் 30 ஐ அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கடிபட்டவருக்கு தரவும். இது தவிர விஷம் பாய்ந்தவர், தூக்க கலக்கத்துடனும், ஆனால் தூங்க முடியாமலும், முகம் சிவந்தும், சூடாகவும், வீங்கியும் இருத்தல், தொண்டையில் வறட்சி, கண்மணிகள் அசையாமலும் விரிந்தும் இருத்தல், மூடப்பட்ட பகுதிகளில் வியர்த்தல் ஆகிய குறிகள் இருந்தால் பெல்லடோனா 30 என்ற மருந்தை தரவேண்டும்.

விஷங்களை முறிக்கும் மருந்து
மேலே கூறிய படி கடிவாய்க்கு மேல் கட்டுக்களை கட்டி விஷத்தினை உறிஞ்சிய பிறகும், ஒரு வேளை கடித்த நாகம் மிகுந்த விஷத்தன்மை உடையதாக இருந்தால் கடிபட்டவருக்கு வீரியப்படுத்தப்பட்ட நாக விஷங்களை முறிக்கும் மருந்துகளான லாக்கலிஸ், தூஜா, குரோடலஸ், எலாப்ஸ் போன்ற மருந்துகளின் 30 வது வீரியத்தை தரலாம். இவ்வாறு கொடுப்பதால் பாம்பு கடிபட்டு பல மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

நாக விஷ மருந்துகளை கொடுப்பதற்கு முன்னால் ஆர்னிகா 3 எக்ஸ், 30, 200 வீரியங்களில் ஏதாவது ஒன்றை தரலாம்.
எச்சினேசியாவின் தாய்த்திரவம் 10 சொட்டுக்களை திரும்ப திரும்ப அளித்தால் பாம்பு விஷத்தின் முறிவு மருந்தாக செயல்படும். விஷப்பூச்சிகளில் கடிகளுக்கும் இந்த மருந்தை தரலாம். பாம்பு விஷத்தினால் ஏற்படும் துயரக்குறிகளை போக்குவதில் செனேகா மிகச்சிறப்பாக செயல்படுகிறது. வெறிபிடித்த நிலையில் உள்ள விலங்குகளின் கடிகளுக்கும் இது முறிவு மருந்தாக பயன்படுகிறது. அரசு கவனிக்குமா ?
source:
The Homeopathic Prescriber, Dr.K.c.Bhanja.
Tamilil: The Homeo Nanban.5 கருத்துகள்: (+add yours?)

veedu சொன்னது…

உண்மைதான் என் நண்பர் ஒருவருக்கு அல்சர் இருந்தது அலோபதி மருந்து எடுத்துக் கொண்டதால் புன் அதிகம் ஆனது தவிர குணம் ஆகவில்லை ஆனால் ஹோமியாபதி மருந்து எடுத்துகொண்டதால் நலமாக இருக்கின்றார் உங்கள் பதிவு பயனுள்ளது

DRபாலா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

எந்த மருத்துவமுறை என்றாலும் அறிவியல் பூர்வமாவவும் நிருபிக்கபட்டதாயும் இருக்கவேண்டும்.

thanigai சொன்னது…

good useful report to villagers and hill people

பெயரில்லா சொன்னது…

alternative madicine having its own strengh, no one can destroys it with the mask of science.one thing must know the people who talking about science that is lots of things present in the world beyond science.i think this kind of people had some stomach fire that is why they are talking like this

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today