மகளிர் சுய உதவி குழு கவனிக்க :சுற்று சூழலுக்கு உதவும் பேப்பர் கப் தயாரிப்பு தொழில்தரமான பேப்பர் கப் தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்வதுடன், அவற்றை இயக்க பயிற்சியும், விற்பனைக்கு பிந்தைய இலவச சர்வீசும் தருவதுடன் சந்தை வாய்ப்புகளையும் அடையாளப்படுத்தி தொழில்முனைவோர்களை உருவாக்கி வருகிறார் மதுரை யுனிவர்சல் பேப்பர் கப் நிறுவனத்தின் திரு.சேவியர்.

இவர் பேப்பர் கப் எந்திரங்களை விற்பனை செய்து வருவதுடன், திருமணம், கருத்தரங்குகள் உள்பட பல்வேறு விழாக்களில் நடக்கும் விருந்துகளுக்கு தேவையான பேப்பர் கப்புகள், ஐஸ்கீரிம் கப்புகள் என்று விதவிதமான காகிதத்தாலான குவளைகளை தயார் செய்து கொடுத்து வருகிறார். சுற்று சூழலை பாதுகாக்கும் இந்த தொழில் குறித்து இவர்  சொன்னது .......

" பேப்பர் கப் தயாரிப்பு என்பது இந்தியாவை பொறுத்த மட்டில் மிகசிறந்த எதிர்காலம் உள்ள தொழில். சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டு வரும் இந்த காலகட்டத்தில் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.  பிளாஸடிக் கப்புகளில் டை- ஆக்சின் என்ற ரசாயனம் கலந்திருப்பதால் இந்த நச்சுத்தன்மை இந்த கப்புகளை பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு தீங்கு செய்கிறது. மேலும் மண்ணில் கிடந்து மக்கிப் போகாததால், மண்ணுக்குள் மழை நீரை இறங்க விடாமல் செய்து விடுகிறது.

இதனால் பேப்பர் கப்புகள் தான் சூழலுக்கு உகந்தவை என்று கருதிய உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக அனைத்து நாடுகளும் பேப்பர் கப்புகளை பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் என்று கூறியது. இந்திய அரசும் இதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது. இதனடிப்படையில் நாங்கள் பேப்பர் கப் தயாரிப்பதற்கான இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் குச்சி மிட்டாய் முதல் எலக்ட்ரானிக் எந்திரங்கள் வரை இந்தியாவை ஒரு குப்பை சந்தையாக கருதும் சீனா இந்த பேப்பர் கப் எந்திரங்களையும் இந்தியாவிற்குள் தள்ளி விட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, சீனாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டாம் தர இயந்திரங்களை சிலர் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கின்றனர். அவற்றை பேப்பர் கப் தயாரிக்க ஆர்வமுள்ளவர்களிடம் புதிது என்று சொல்லி சிலர் விற்பனை செய்து விடுகிறார்கள். இது போன்ற இரண்டாம் தர எந்திரங்களை வாங்கி வைத்து பட்ட அவலத்தால், பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலையே நஷ்டமான ஒரு தொழிலாக கருதி கைவிட்டு விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற  நாங்கள் முழு முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறோம்.

இதன்படி, இந்த தொழிலை ஆர்வமுடன் செய்ய முன்வருபவர்களுக்கு 2 வித இந்திய எந்திரங்களை சப்ளை செய்கின்றோம். ஒன்று செமி ஆட்டோமெடிக்,
மற்றொன்று புல் ஆடோமடிக். இரண்டும் விலை குறைவு மற்றும் அதிக உற்பத்தியை எட்டக்கூடியவை. இதில் செமி ஆட்டோமடிக்  சிங்கிள் பேஸ் கரண்ட்டில் இயங்கக்கூடியது . இந்த எந்திரங்களை வைக்க 10 க்கு 15 அடி அறை போதுமானது.  இந்த மெஷின்களை தரமான சீனக் கம்பெனிகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து கொடுக்கிறோம். தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முடித்து வாடிக்கையாளரின் தொழிற்கூடத்திற்கே இந்த மெஷினை இயக்க தொழிலாளர்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம். மேலும் விற்பனைக்கு பின் முதல் 12 மாதங்களுக்கு இலவச சர்வீசும் செய்து கொடுக்கிறோம்.

பேப்பர் கப் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான பிரேத்தியேக காகிதத்தை ஐடிசி மற்றும் சேஷசாயி நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. இந்த பேப்பர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பல ரகங்களில் உள்ளன. நாம் எந்த வகையான கப்புகளை தயாரிக்க போகிறோமோ, அதற்கேற்ற பேப்பர்களை வாங்கி கொள்ளலாம். 
இந்த தொழிலில், எடுத்த எடுப்பில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கொட்டும் என்று கனவு காண கூடாது. ஆனால் தொடர்ந்து லாபம் உயரும். ஆனால் நிச்சயமான லாபமும், தொடரந்து டிமாண்டும் உள்ள தொழில் இது. தமிழ்நாடு உள்பட பல்வேறு அண்டை மாநிலங்களிலும் முக்கிய சுற்றுலா இடங்களில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்தால் பேப்பர் கப்புகளுக்கு கிராக்கி அதிகரித்துக் கொண்டுள்ளது.

எங்கள் யூனிட்டில் மட்டும் தற்போது 15 பெண்கள் பணி செய்கிறார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த இவர்களுக்கு பயிற்சி தந்து பணியில் அமர்த்தயிருக்கிறோம். இவர்களுக்கு தொடர்ந்து வேலை தருமளவு எங்களிடம் ஆர்டர்கள் உள்ளன. இவர்களை போன்று மகளிர் சுய உதவிக்குழுவினர் பேப்பர் எந்திரம் வாங்கி இந்த தயாரிப்பில் ஈடுபட விரும்பினால் பயிற்சி, சந்தை வாய்ப்பு, தொழிலின் பலம், பலவீனம், வங்கி கடன் பெறுவது உள்ளிட்ட விவரங்களை தெளிவாக சொல்லித் தர தயாராக உள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சேது சமுத்திர திட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மட்டும் 2 லட்சம் பேப்பர் கப்புகளை தயாரித்து அனுப்பினோம். இது போல் தற்போது பெரிய விழாக்களுக்கு ஆர்டர்கள், ஓட்டல்களுக்கு சப்ளை, ஐஸ்கீரிம் கப், ஓயின் ஷாப் கப், தயிர் கப், பாயாசம் கப் என்று பல்வேறு அளவுகளில் திட்டமிட்டு தயாரிக்கிறோம். 

இது போல் புதிய புதிய பயன்பாட்டுக்கு ஐடியா உள்ளவர்கள் இந்த தொழிலில் எளிதாக ஜெயித்து விடலாம். எங்களிடம் பயிற்சி பெற்று, ஆனால் கப்புகளை தயாரித்து விற்க முடியாதவர்களிடம் நாங்களே பேப்பர் கப்புகளை வாங்கி கொள்கிறோம். உடனுக்குடன் பணம் கொடுத்து விடுகிறோம். பேப்பர் கப்புகழுக்கு அன்றாடம் லட்ச கணக்கில் தேவை உள்ளது. சுயமாக தோழி செய்து சுதந்திரமாக இருக்க நினைக்கும் இளைஞர்கள் இந்த தொழிலில் இறங்கலாம் " என்கிறார் இவர்.

மாவட்ட தொழில் மையங்கள் மூலம் வங்கி கடன் துணையுடன் வேலையில்லா பட்டதாரிகள், பெண்கள் விண்ணப்பித்தால் 30 சதவீதம் வரை வங்கிக்கடனில் மானியம் உண்டு. அதாவது 8 லட்சத்திற்கு பேப்பர் கப் எந்திரம் வாங்கும் போது அதில் 2.40 லட்சம் மானியமாக தரப்படுகிறது. ஆக... உங்களுக்கு இந்த 2.40 லட்சம் மீதம் தான். தேசியமயமாக்கப்பட்ட இந்திய வங்கியில் பணிபுரிந்து பிறகு லண்டனில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில் பணியாற்றி விட்டு இவர் தற்போது இந்த பேப்பர் கப் எந்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல ஒரு தொழில் வாய்ப்பை தருவதை பாராட்டலாம்.

மிக நல்ல விற்பனை வாய்ப்புள்ள இந்த தொழிலில் ஈடுபட திட்டமிடும், பேப்பர் கப் எந்திரங்களை வாங்கி சுற்றுச்சூழலை காக்க விரும்பும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

12 கருத்துகள்: (+add yours?)

AMR சொன்னது…

Mail Id And Contact No. Pls

gonzalez சொன்னது…

REGARDS,
GONZALEZ

http://funny-indian-pics.blogspot.com

Education & Employment சொன்னது…

I need more details about this business.
Thanks & Regards.
M.Manikandan,
Kallakurichi.
Ph : 9442225988.

NADESAN சொன்னது…

Please send me the contact details nadesanp@gmail.com

Nadesan

siva சொன்னது…

நல்ல சுய தொழில். அதில் உபயோகப்படுத்தப்படும் gum உடலுக்கு தீங்கு விளைவில்லும் என்று படித்து இருக்கிறேன். அந்த குறைபாடுகளை கருத்தில் கொண்டு தரமாக தயாரித்தால் சுற்றுசூழலும் நம் நலமும் கூட பாதுகாக்கப்படும்.


http://www.virutcham.com/2011/03/beware-of-paper-cups/

Ecoligist சொன்னது…

Good sir, Please give me your contact details

Abraham

பசுமை இந்தியா சொன்னது…

நண்பரே

பேப்பர் கப் தயாரிக்கும் எந்திரங்களை சப்ளை செய்வதிலும், சர்வீஸ் செய்வதிலும், நீங்கள் தயாரிக்கும் கப்புகளை வாங்கிக் கொள்வதிலும் தமிழகத்தில் நம்பகமான நிறுவனமாக யூனிவர்சர் பேப்பர்கப் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சேவியர் அவர்களை 98425 93478 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஆனந்த், கிரீன் இந்தியா பவுண்டேசன், மதுரை.

giri சொன்னது…

wholesale paper cups i want give details and contact no 9042074402

suji சொன்னது…

I need more details about this business.
Thanks & Regards.
V.Sujith prabhu
9942247931

Arun Sri சொன்னது…

S.srinivasan89@gmail.com
Our ready to start the bussiness

Arun Sri சொன்னது…

S.srinivasan89@gmail.com
Our ready to start the bussiness

yoseppu சொன்னது…

Please send me the contact details 8189875918

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today