காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்புமதுரையை சேர்ந்த வாப்ஸ் நிறுவனம் வேளாண்துறை பட்டதாரிகளின் திறன்மேம்பாட்டுக்காகவும், அவர்கள் அக்ரி கிளினிக் என்ற விவசாயிகளுக்கான வேளாண் சேவை மையம் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இங்கு பி.எஸ்.சி வேளாண்மை, பி.எஸ்.சி தோட்டக்கலை, பி.எஸ்.சி ஊரகவியல் அறிவியல், பி.எஸ்.சி வனவியல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை மற்றும் புதுச்சேரியில் வாப்ஸ் நிறுவனத்தின் மையங்கள் அமைந்திருக்கின்றன.
தற்போது காளான் தொடர்பான உணவுப் பொருட்களுக்கு மதிப்பு அதிகரித்து வரும் இந்த வேளையில் அது தொடர்பான தொழில்களை தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவு பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை இந்த நிறுவனம் வழங்குகிறது. காளான் வளர்ப்பு மற்றும் விற்பனையில் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மிகவும் குறுகிய கால இந்த பயிற்சியை காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டு காளான்வளர்ப்பை தொடங்கலாம்.
இது குறித்து மேலும் விபரமறிய....வாப்ஸ்
84897  27415  என்ற எண்ணில் அழைக்கலாம் .

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today